Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சட்ட மீறல்.. 'பதஞ்சலி' மீது நடவடிக்கை எடுக்க அதிரடி உத்தரவு.. கார்த்தி சிதம்பரம் புகார் மனு எதிரொலி

சர்க்கரை, ரத்த அழுத்தம், இதய பிரச்சினை, கண்புரை உள்ளிட்ட நோய்களை தீர்க்க முடியும் எனக் கூறி எந்தவொரு மருந்துகளையும் விளம்பரப்படுத்த இந்த சட்டம் தடை செய்கிறது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சட்டத்துக்கு புறம்பாக விளம்பரம் செய்த யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தராகாண்ட் அரசுக்கு மத்திய ஆயுஷ் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் அளித்த புகாரின் பேரில் இந்த அதிரடி உத்தரவை மத்திய ஆயுஷ் அமைச்சகம் பிறப்பித்துள்ளது.

இதற்கு முன்பு, இதே கோரிக்கையை வலியுறுத்தி கேரளாவை சேர்ந்த மருத்துவர் அளித்த புகார் மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், தற்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

பதஞ்சலியின் கிடுகிடு வளர்ச்சி

பதஞ்சலியின் கிடுகிடு வளர்ச்சி

யோகா குருவும், பாஜகவின் அனுதாபியாகவும் அறியப்படும் பாபா ராம்தேவ் சார்பில் தொடங்கப்பட்டது பதஞ்சலி நிறுவனம். பல்வேறு நோய்களுக்கான லேகியம், டானிக் போன்ற மருந்துகளையும், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் வீட்டு உபயோக பொருட்களையும் தயாரித்து விற்பனை செய்தது பதஞ்சலி. இதனிடையே, கடந்த 2014-ம் ஆண்டுக்கு பிந்தைய காலக்கட்டங்களில் நாடு முழுவதும் இயற்கை உணவுகள் மீது மக்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது. அந்த சமயத்தில், தாங்கள் தயாரிக்கும் பொருட்கள் அனைத்தும் இயற்கை மூலிகைகளில் இருந்து தயாரிக்கப்படுவதாக பதஞ்சலி பெரிய அளவில் விளம்பரங்களை செய்தது. இதனால் மக்களின் கவனம் பதஞ்சலி நிறுவனத்தின் மீது விழ, பல முன்னணி நிறுவனங்களை லாபத்தில் ஓரம்கட்ட தொடங்கியது பதஞ்சலி.

சட்டத்தை மீறி விளம்பரம்

சட்டத்தை மீறி விளம்பரம்

இது ஒருபுறம் இருக்க, பதஞ்சலி நிறுவனத்தின் மருந்துகள் பல்வேறு நோய்களை தீர்ப்பதாகவும் விளம்பரம் செய்யப்பட்டது. இதில் சில விளம்பரங்கள், "மருந்துகள் மற்றும் அற்புத நிவாரணிகள் தடை சட்டம் 1954"-க்கு புறம்பாக இருப்பதாக கேரளாவை சேர்ந்த மருத்துவர் கே.வி. பாபு புகார் அளித்தார். அதாவது, மேற்குறிப்பிட்ட சட்டமானது சர்க்கரை, ரத்த அழுத்தம், இதய பிரச்சினை, கண்புரை உள்ளிட்ட நோய்களை தீர்க்க முடியும் எனக் கூறி எந்தவொரு மருந்துகளையும் விளம்பரப்படுத்த தடை செய்கிறது. அப்படியிருக்கும் போது, பதஞ்சலி நிறுவனம் மேற்குறிப்பிட்ட சில நோய்களை தீர்க்கும் மருந்துகள் எனக் கூறி சிலவற்றை விளம்பரப்படுத்துவதாக தனது புகார் மனுவில் மருத்துவர் கே.வி. பாபு கூறியிருந்தார்.

நடவடிக்கை இல்லை

நடவடிக்கை இல்லை

இருந்தபோதிலும், இந்த புகார் தொடர்பாக மத்திய ஆயுஷ் துறை அமைச்சகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதாவது, சட்ட விதி 170 (சித்தா, ஆயுர்வேத பொருட்களை விளம்பரப்படுத்த தடை) தொடர்பான வழக்கு, மும்பை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் பதஞ்சலி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என ஆயுஷ் அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மருத்துவர் கே.வி. பாலுவோ, "மருந்துகள் மற்றும் அற்புத நிவாரணிகள் தடை சட்டம் 1954"-ஐ குறிப்பிட்டே தான் புகார் அளித்ததாகவும், சட்ட விதி 170-ஐ தான் குறிப்பிடவே இல்லை எனவும் கூறியிருந்தார்.

கார்த்தி சிதம்பரம் மனு - உத்தரவு

கார்த்தி சிதம்பரம் மனு - உத்தரவு

ஆனால், மருத்துவர் கே.வி. பாலுவின் இந்த விளக்கங்கள் குறித்து எந்த பதிலும் தெரிவிக்காமல் மத்திய ஆயுஷ் அமைச்சகம் இருந்தது. இந்நிலையில்தான், காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பதஞ்சலி நிறுவனத்தின் மீது மருத்துவர் கே.வி. பாலு அளித்த புகாரை போலவே அண்மையில் புகார் மனு அளித்திருந்தார். இந்நிலையில், இந்த புகார் மனு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்துக்கு மத்திய ஆயுஷ் அமைச்சகம் தற்போது ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளது. அதில், ""மருந்துகள் மற்றும் அற்புத நிவாரணிகள் தடை சட்டம் 1954" -ஐ மீறிய பதஞ்சலி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க, உத்தராகண்ட் அரசின் உரிமம் வழங்கும் ஆணையத்துக்கு (SLA) உத்தரவிடப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+