ஊக்க மருந்து சோதனை.. பஜ்ரங் புனியா சஸ்பெண்ட்! ஒலிம்பிக்கில் பங்கேற்பதில் சிக்கல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மல்யுத்த வீராங்கனைகள் மீது பாலியல் வன்கொடுமை நடத்தப்பட்டதாக போராட்டத்தில் ஈடுபட்ட, இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, ஊக்க மருந்து சோதனைக்கு ஒத்துழைக்கவில்லை எனக்கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். இந்நிலையில் இது குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.

இந்திய மல்யுத்தத்தின் நட்சத்திரமாக மிளர்ந்தவர்தான் பஜ்ரங் புனியா. கடந்த 2020ம் ஆண்டு ஜப்பான் நாட்டின் தலைநகரமான டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் அவர் வெண்கலம் வென்று கொடுத்திருக்கிறார். மட்டுமல்லாது நாட்டின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, அர்ஜுனா, கேல் ரத்னா போன்ற விருதுகளையும் பெற்றிருக்கிறார். இப்படி இருக்கையில், பெண் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.

Bajrang Punia barrage of questions about suspension for not cooperating with doping test

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங், பெண் மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என்பதுதான் புகார். எனவே கடந்த ஆண்டு ஜனவரியில் இது தொடர்பாக ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்கள் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். இந்த போராட்டத்தில் பஜ்ரங் புனியாவும் பங்கேற்றிருந்தார்.

இது நாடு முழுவதும் பெரும் விவாதங்களை கிளப்பியது. நாட்டின் கொடியை சர்வதேச அரங்கில் உயர்த்திய வீராங்கனைகள் இந்த கொடுமைகளை எல்லாம் தாங்கிக்கொள்ள வேண்டுமா? என்று அரசியல் கட்சியினர் கேள்வியெழுப்பினர். இது குறித்து பிரிஜ் பூஷன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. அதேபோல இந்த போராட்டத்தில் பங்கெடுத்த வீரர்கள், வீராங்கனைகள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகள் தொடரும் என்கிற அச்சுறுத்தலும் எழுந்தது.

இப்படி இருக்கையில்தான், ஊக்க மருந்து சோதனைக்கு ஒத்துழைக்கவில்லை எனக்கூறி பஜ்ரங் புனியா சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். இந்த நடவடிக்கை வரும் ஜூலை மாதம் பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் அவர் பங்கேற்பதற்கு தடையை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.

அதாவது, பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் மல்யுத்த வீரர்களை தேர்வு செய்யும் பணி தற்போது தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக கடந்த மார்ச் மாதம் 10ம் தேதியன்று சோனாபட்டில், நடந்த ஊக்கமருந்து சோதனையில் பஜ்ரங் புனியா சிறுநீர் சாம்பிளை வழங்க மறுத்துவிட்டதாகக சொல்லப்படுகிறது. எனவே, அவரை காலவரையின்றி சஸ்பெண்ட் செய்து தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தற்போது புனியா விளக்கமளித்துள்ளார். "என்னிடம் அதிகாரிகள் சோதனைக்காக வந்தார்கள். அவர்கள் வைத்திருந்த சோதனை கிட்-ஐ சரிபார்த்தபோது அது காலாவதியாகியிருந்தது. இதைதான் சுட்டிக்காட்டினேன். சோதனைக்காக மாதிரியை நான் கொடுக்க மாட்டேன் என எங்கும் சொல்லவில்லை. இப்போது பதில் சொல்லுங்கள், காலாவதியான கிட் அனுப்பப்பட்டது ஏன்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக எம்பியை எதிர்த்து போராட்டத்தில் இறங்கிய மல்யுத்த வீரர், ஊக்க மருந்து சோதனைக்கு ஒத்துழைக்கவில்லை எனக்கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது தேசிய அளவில் பெரும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+