"பஜ்ரங் தள்.." அனுமன் வேடத்தில் காங். ஆபீசில் நுழைந்த தொண்டர்கள்.. தேர்தல் நாளில் பரபர! என்ன மேட்டர்
டெல்லி: கர்நாடக தேர்தலில் இப்போது காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் டெல்லியில் காங்கிரஸ் தொண்டர்கள் செய்த காரியம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
கர்நாடகாவில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டுத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகளும், அதைத் தொடர்ந்து தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டன.
கர்நாடகாவில் மொத்தம் 224 தொகுதிகள் இருக்கும் நிலையில், அங்கே 113 இடங்களைப் பெறும் கட்சி முன்னிலை வகிக்கும்.. இப்போது காங்கிரஸ் கட்சி சுமார் 110+ இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

இதே சூழல் சென்றால் கர்நாடகாவில் பாஜக ஆட்சியை இழக்கும். காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கும் அல்லது தனிப்பெரும் கட்சியாக உருவாகும் என்ற சூழலே நிலவுகிறது. இதனால் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன. ஏற்கனவே காங்கிரஸ் கட்சி 110+ இடங்களில் முன்னிலையில் உள்ளது.
டெல்லியில் பல காங்கிரஸ் தொண்டர்கள் பஜ்ரங்பலி ஹனுமான் போல் உடையணிந்து வந்து பாஜக மற்றும் வலதுசாரிகளைக் கிண்டல் செய்யும் வகையிலான கோஷங்களை எழுப்பினர். கர்நாடகாவில் பாஜக வெறும் சுமார் 80 இடங்களில் மட்டுமே இப்போது முன்னிலை வகிக்கிறது.
அங்கே ஹனுமான் உடையில் இருந்த தொண்டர்கள், "பஜ்ரங்பலி பிரபு காங்கிரஸுடன் இருக்கிறார். பாஜகவுக்கு நல்ல பாடம் புகட்டிவிட்டார்" என்று கூறி வருகின்றனர்.
பஜ்ரங் தள் போன்ற வலதுசாரி குழுக்கள் மத வெறுப்பைப் பரப்புவதால் கர்நாடகாவில் பஜ்ரங் தள் அமைப்பைத் தடை செய்வோம் என்று காங்கிரஸ் தலைவர்கள் சிலர் கூறினர். கர்நாடகாவில் அனுமனை பஜ்ரங்கி என்று அழைப்பார்கள். எனவே, பஜ்ரங்தள் தடையை அனுமாருக்கு எதிரானதாக மாற்றிய பாஜக பிரசாரம் செய்தது. இந்தச் சூழலில் தான் அதை விமர்சிக்கும் வகையில் காங்கிரஸ் தொண்டர்கள் இப்படி அனுமான் உடையில் வந்துள்ளனர்.

அது பஜ்ரங் தள் அமைப்பைக் கடுமையாக விமர்சித்து வந்தது. கர்நாடக மாநிலத்தில் பஜ்ரங் தள் அமைப்பு திட்டமிட்டு மத ரிதீயான மோதல்களை ஏற்படுத்துவதாகக் காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்தனர். இதனால் பிடிஐ அமைப்பு விதிக்கப்பட்ட தடையைப் போலவே பஜ்ரங் தள் அமைப்பையும் தடை செய்ய வேண்டும் என்பதே அவர்கள் கருத்தாக இருந்தது.
சமூகத்தில் வன்முறையை ஏற்படுத்துவது யாராக இருந்தாலும் அவர்களைத் தடை செய்ய வேண்டும் என்றனர். இருப்பினும், அதை அனுமனுக்கு எதிரானது போல பாஜக பிரசாரம் செய்யத் தொடங்கியது. அதன் பின்னரே பஜ்ரங் தள் அமைப்பைத் தடை செய்வோம் எனக் கூறவில்லை எனக் காங்கிரஸ் பல்டி அடித்தது. மேலும், கர்நாடகாவில் அனுமார் கோவில்களை கட்டுவோம் என்று டிகே சிவகுமாரே அறிவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications