பக்ரீத்.. இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் மகிழ்ச்சி!இனிப்போடு வாழ்த்து பரிமாறிய இருநாட்டு வீரர்கள்!
டெல்லி: பக்ரீத் கொண்டாட்டத்தையொட்டி இன்று பஞ்சாப் மாநிலம் அட்டாரி-வாகா எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இனிப்புகள் பரிமாறி வாழ்த்தை பகிர்ந்து கொண்டனர்.
இந்தியா முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இஸ்லாமியர்களின் நாள்க்காட்டியில் ஆண்டுதோளும் ஹஜ் மாதம் 10ம் தேதி இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக களையிழந்த பக்ரீத் கொண்டாட்டம் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வரகிறது.

பக்ரீத் கொண்டாட்டம்
ஹஜ் பெருநாள் என அழைக்கப்படும் இந்த பண்டிகையானது இறைத்தூதர் இப்ராஹிம் நபியின் தியாகத்தை குறிக்கும் வகையில் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் மட்டுமின்றி இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் முஸ்லிம் மக்கள் பக்ரீத் கொண்டாடி வருகின்றனர்.

சிறப்பு தொழுகை
அதிகாலையிலேயே புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறி வருகின்றனர். மேலும் ஏழைகளின் பசியை போக்கும் வகையில் உறவினர்கள், நண்பர்களுடன் சேர்ந்து குர்பானி வழங்கி நாடு முழுவதும் பக்ரீத் கொண்டாடப்பட்டு வருகிறது.

எல்லையில் கொண்டாட்டம்
இந்நிலையில் தான் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் தீபாவளி, பக்ரீத் உள்ளிட்ட முக்கிய பண்டிகைகளின் போது இருநாட்டு வீரர்களும் இனிப்பு பரிமாறிக்கொள்வது வழக்கமானதாக உள்ளது. அந்த வகையில் இன்று பக்ரீத் பண்டிகையையொட்டி இன்று பஞ்சாப் மாநிலம் அட்டாரி - வாகா எல்லையில் இந்தியா- பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இனிப்புகளை பரிமாறி கொண்டு தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

தலைவர்கள் வாழ்த்து
இன்று பக்ரீத் கொண்டாடப்படுவதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தமிழக ஆளுநர் ஆர்என் ரவி, முதல்வர் முக ஸ்டாலின், அதிமுகவின் முன்னாள் முதல்வர்கள் ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி, பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட பல தலைவர்கள் வாழ்த்து கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications