ஷேக் ஹசீனாவுக்கு 2--வது முறையாக அடைக்கலம் தந்த இந்தியா- டெல்லியிலே 'டேரா'வா? வெளிநாடு செல்கிறாரா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா 2-வது முறையாக அடைக்கலம் தந்துள்ளது. வங்கதேசத்தில் மாணவர்கள் புரட்சி வெடித்த நிலையில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ஷேக் ஹசீனா. அத்துடன் பிரதமர் மாளிகையை ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் சூழ்ந்ததால் சகோதரி ரெஹானாவுடன் உயிர் தப்பி இந்தியாவுக்கு ஓடி வந்தார் ஷேக் ஹசீனா. முதலில் திரிபுராவின் அகர்தலாவுக்கு சென்ற ஷெக் ஹசீனா அங்கிருந்து தற்போது டெல்லி வந்து முகாமிட்டுள்ளார்.

வங்கதேசத்தில் இருந்து தப்பி வந்துள்ள ஷேக் ஹசீனா, இந்தியாவிலேயே தங்கி இருக்க வாய்ப்பு இல்லை; பின்லாந்து அல்லது இங்கிலாந்து நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படக் கூடும் என்கின்றன டெல்லி தகவல்கள். ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா இப்படி அடைக்கலம் தருவது 2-வது முறையாகும்.

Bangladesh Sheikh Hasina

அதாவது வங்கதேசம் என்ற ஒரு தனிநாட்டை உருவாக்கியவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி. வங்கதேச தனிநாடு கோரி முஜிபுர் ரஹ்மான் - ஷேக் ஹசீனாவின் தந்தை புரட்சி செய்த போது அவருக்கு முழு பலமாக நின்று பாகிஸ்தானுக்கு எதிரான யுத்தத்தை நடத்தியது நமது இந்திய ராணுவம். பிரதமராக இருந்த இந்திரா காந்தி அம்மையார்தான் பாகிஸ்தான் என்ற நாட்டை இரண்டாக உடைத்து கிழக்கு பாகிஸ்தான் என அழைக்கப்பட்ட பகுதியை வங்கதேசம் என்ற தனிநாடாக உருவாக்கி அங்கீகரித்தார்.

ஆனால் வங்கதேசம் உருவான சில ஆண்டுகளிலேயே தேசப்பிதா என போற்றப்பட்ட முஜிபுர் ரஹ்மானும் அவரது குடும்பத்தினரும் சொந்த நாட்டு ராணுவத்தினராலேயே கொல்லப்பட்டனர். அப்போது முஜிபுர் ரஹ்மான் மகள்களாகிய ஷேக் ஹசீனாவும் ரெஹானாவும் ஜெர்மனியில் தங்கி இருந்தனர்.

ஜெர்மனியில் இருந்த ஷேக் ஹசீனா, ரெஹானா இருவரும் உயிர் அச்சத்தில் இருந்த போது பெர்லினில் இருந்து ரகசியமாக டெல்லிக்கு அழைத்து வர ஏற்பாடு செய்தார் இந்திரா காந்தி அம்மையார். டெல்லி பந்த்ரா சாலையில் உள்ள 'ரா' அமைப்பின் பாதுகாப்பு இடம் ஒன்றில் ஷேக் ஹசீனாவும் அவரது சகோதரியும் தங்க வைக்கப்பட்டனர். இந்தியாவில் 6 ஆண்டுகள் இருவரும் 'விருந்தினர்களாக' தங்கி இருந்தனர்.

தற்போதும் அப்படி நீண்டகாலம் ஷேக் ஹசீனா இந்தியாவில் இருக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. அதனால் பின்லாந்து அல்லது இங்கிலாந்துக்கு ஷேக் ஹசீனாவை மத்திய அரசு அனுப்பி வைக்கக் கூடுமாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+