ஷேக் ஹசீனாவை கைது செய்து வங்கதேசத்துக்கு நாடு கடத்துங்க-திடீர் கோரிக்கை- இந்தியாவுக்கு நெருக்கடி?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவுக்கு தப்பி வந்து தஞ்சமடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா விவகாரத்தில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஷேக் ஹசீனாவை இந்தியா உடனடியாக கைது செய்து வங்கதேசத்துக்கு நாடு கடத்த வேண்டும் என்று அந்த நாட்டின் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் வலியுறுத்தியிருக்கிறது. இந்த கோரிக்கையால் வங்கதேச விவகாரத்தில் இந்தியாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வங்கதேச பிரதமராக இருந்தவர் ஷேக் ஹசீனா. 16 ஆண்டுகாலம் ஆட்சி நடத்திய ஷேக் ஹசீனாதான் வங்கதேசத்தின் பொருளாதாரத்தை "இந்தியா" உதவியுடன் முன்னேற்றியவர் என கூறப்பட்டது.

Bangladesh Sheikh Hasina

அதேநேரத்தில் "இந்தியா"வின் முழுமையான ஆதரவுடன் வங்கதேச பிரதமராக ஷேக் ஹசீனா தொடர்ந்து நீடிப்பதை விரும்பாத சக்திகள் அவருக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்தியாவே வெளியேறு போராட்டம் தொடங்கி மாணவர்கள் போராட்டம் வரை வங்கதேசம் பற்றி எரிந்து கொண்டே இருந்தது.

தமக்கு எதிரான போராட்டங்களை பாதுகாப்பு படை உதவியுட ன் ஒடுக்கவும் செய்தார் ஷேக் ஹசீனா. சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதனால் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக உச்சகட்ட போராட்டங்கள் வெடித்தன.

இந்தப் போராட்டங்களை ஒருகட்டத்தில் ராணுவம் வேடிக்கை பார்க்கவும் தொடங்கியது. இதனால் அந்த நாட்டில் ராணுவ ஆட்சி ஏற்படும் அச்சமும் உருவானது. இதனிடையே ஷேக் ஹசீனாவை உடனே ராஜினாமா செய்ய ராணுவம் கெடு விதித்தது. அப்போது ஷேக் ஹசீனா மாளிகைக்குள் வன்முறையாளர்களை நுழைய அனுமதித்தது அந்நாட்டு ராணுவம்.

இதனால் உயிருக்கு அஞ்சி ஷேக் ஹசீனா தமது பதவியை ராஜினாமா செய்த கையோடு சொந்த நாட்டை விட்டு அகதியாக இந்தியாவுக்கு தப்பி வந்தார். ஷேக் ஹசீனாவுக்கு தற்போதைய நிலையில் வேறு எந்த ஒரு நாடும் அடைக்கலம் தரவில்லை. இதனால் ஷேக் ஹசீனா இந்தியாவில்தான் தங்கி இருப்பார் எனவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் தற்போது இந்தியாவுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வங்கதேசத்தின் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஷேக் ஹசீனாவை இந்திய அரசு கைது செய்து உடனே வங்கதேசத்துக்கு நாடு கடத்த வேண்டும் என்பதுதான் அந்த கோரிக்கை. இதனால் இந்த விவகாரத்தில் அடுத்து என்ன நடக்கும் என்பது பரபரப்பாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+