மொத்தமாக முடங்கும் வங்கி சேவை? 4 நாட்கள் பேங்க் மூடல்.. வங்கி ஊழியர்கள் திடீர் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 5 நாட்கள் வங்கி வேலைநாட்கள் உள்ளிட்ட தங்களின் பல்வேறு கோரிக்கைகளில் தீர்வு ஏற்படவில்லை என கூறியுள்ள வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு செப்டம்பர் 11ஆம் தேதி முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர். முதற்கட்டமாக 3 நாட்கள் வேலை நிறுத்தத்தை வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ள நிலையில், தங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் அக்டோபர் 26ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்துள்ளன.

நமது நாட்டை சேர்ந்த வங்கி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். 5 நாள் வங்கி சேவை, பெர்பாமன்ஸ் அடிப்படையிலான ஊக்கத்தொகை திட்டம், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இந்த கோரிக்கைகள் நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதாக United Forum of Bank Unions என்ற வங்கி ஊழியர்களின் யூனியன் தெரிவித்துள்ளது.

Bank India

வேலை நிறுத்த அறிவிப்பு

இந்த வேலைநிறுத்தம் திட்டமிட்டபடி நடைபெற்றால்.. வங்கி சேவைகள் நாட்டின் பல பகுதிகளில் பாதிக்கப்படும். செப்டம்பர் 11 வெள்ளிக்கிழமையாக இருக்கிறது. அதற்கு அடுத்த இரண்டு நாட்களும் வங்கி விடுமுறை நாட்களாக உள்ளன. மேலும், செப்டம்பர் 14ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விடுமுறை என்பதால் தொடர்ந்து 4 நாட்களுக்கு வங்கி சேவை பாதிக்கப்படும் சூழல் ஏற்படலாம்.

இது தவிர செப்டம்பர் 28 முதல் 3 நாட்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடத்தவும் முடிவு செய்துள்ளது. இது வங்கிகளின் அரையாண்டு கணக்கு முடிவு காலம் என்பதால் முக்கியமானதாகும். அப்போதும் வேலை நிறுத்தத்தை நடத்த வங்கிகள் முடிவு செய்துள்ளன. மேலும், அப்போதும் தங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் அக்டோபர் 26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாகவும் வங்கி சங்கங்கள் எச்சரித்துள்ளன.

9 வங்கி ஊழியர்கள்

வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ள UFBU சங்கத்தில் 9 வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள் இடம்பெற்றுள்ளன. இப்போது வங்கிகளுக்கு 2ஆவது மற்றும் 4வது வார சனிக்கிழமைகள் மட்டுமே விடுமுறை அளிக்கப்படுகிறது. அதை மாற்றி, அனைத்து வாரங்களிலும் 5 நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையை வங்கி ஊழியர்கள் முன்வைத்து வருகிறார்கள். அதற்கு பதிலாக வார நாட்களில் தினசரி வேலை நேரத்தை 40 நிமிடங்கள் அதிகரிக்க திட்டமிடப்பட்டது. இந்த முன்மொழிவு மத்திய அரசிடம் பரிந்துரைக்கப்பட்டாலும், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அது நிலுவையில் இருப்பதாக UFBU குற்றம்சாட்டியுள்ளது.

கருத்து வேறுபாடுகள்

வங்கி அதிகாரிகளுக்கான PLI எனப்படும் பெர்பாமன்ஸ் அடிப்படையிலான ஊக்கத்தொகை திட்டத்திலும் வங்கி ஊழியர் சங்கத்திற்கும் அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. நான்காம் நிலை மற்றும் அதற்கு மேல் உள்ள அதிகாரிகளுக்கான அரசின் ஊக்கத்தொகை திட்டம் தங்கள் முன்வைக்கும் திட்டத்தில் இருந்து மாறுபட்டு இருப்பதாக குற்றஞ்சாட்டுகிறார்கள்.

வேலை நிறுத்தம்

ஓய்வூதியத்தை புதுப்பிப்பது, அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் ஒரே மாதிரியான அகவிலைப்படி உள்ளிட்ட கோரிக்கைகளும் தீர்க்கப்படவில்லை என்று UFBU கூறியுள்ளது. மேலும், NPS- தேசிய பென்சன் திட்டம் கீழ் உள்ள ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாறுவதற்கான வாய்ப்பையும் வழங்க வேண்டும் என வங்கி சங்கங்கள் கோரியுள்ளன.

இந்த முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தே செப்டம்பர் 11ம் தேதி முதற்கட்ட வேலை நிறுத்தத்தையும் அதை தொடர்ந்து செப்டம்பர் 28 முதல் 3 நாள் வேலைநிறுத்தமும் அறிவிக்கப்பட்டுள்ளது. கோரிக்கைகள் ஏற்கப்படாதபட்சத்தில் அக்டோபர் 26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தமும் நடத்தப்படும் என சங்கங்கள் தெரிவித்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+