ஜனவரி 31 முதல் வங்கி ஊழியர்கள் இரு நாட்கள் வேலை நிறுத்தம்
Recommended Video
டெல்லி: புதிய ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தக் கோரி வரும் ஜனவரி 31, பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் வங்கிகள் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.
வங்கி ஊழியர்களுக்கு விலைவாசி உயர்வுக்கேற்ப புதிய ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என வங்கி ஊழியர்கள் சங்கங்கள் அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றன. இதுதொடர்பாக வரும் 31-ஆம் தேதி போராட்டம் நடத்த போவதாகவும் அறிவித்துள்ளன.

இந்த நிலையில் ஊதிய ஒப்பந்தம் தொடர்பான சமரச பேச்சு வார்த்தைக்கு வங்கி ஊழியர் சங்கத்தினர் அழைக்கப்பட்டனர். இந்த பேச்சுவார்த்தை டெல்லியில் உள்ள தலைமை தொழிலாளர் ஆணைய அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதனால் திட்டமிட்டப்படி போராட்டம் நடத்த ஆயத்தமாவதாக வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. வங்கி ஊழியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு கிடைக்கிறது. கடந்த 2017-இல் ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் இது வரை புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படவில்லை. இது தொடர்பாக வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் பேச்சுவார்த்தை 2017-ஆம் ஆண்டு முதலே தொடங்கியது.
இன்றைய விலைவாசி, வேலை பளு ஆகியவற்றை கணக்கில் கொண்டு கூடுதலாக ஊதியம் வழங்க வங்கி ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன்படி ஜனவரி 31-ந் தேதி, பிப்ரவரி 1-ந் தேதி, மார்ச் 11-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை மற்றும் ஏப்ரல் முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்த அறிவிப்பு வெளியானது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications