டிசம்பரில் மட்டும்! வங்கிகளுக்கு 17 நாட்கள் லீவு.. எந்தெந்த தேதிகள்.. நோட் பண்ணுங்க.. முழு விவரம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இன்று டிசம்பர் மாதம் தொடங்கியுள்ள நிலையில், இந்த மாதத்தில் மட்டும் வங்கிகளுக்கு 17 நாட்கள் விடுமுறை வருகின்றன. வங்கி விடுமுறை நாட்களில் ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றாலும் வங்கிக்கு நேரடியாக சென்று பெறும் சேவைகளை வாடிக்கையாளர்கள் பெற முடியாது. எனவே இந்த மாதத்தில் 17 நாட்கள் விடுமுறை வருவதால் வாடிக்கையாளர்கள் ஏதேனும் பணிகள் இருந்தால் முன்கூட்டியே திட்டமிட்டு செய்தால், சிரமத்தை தவிர்க்கலாம்.

இந்தியாவில் வங்கிகளுக்கு மாதம் 6 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வாரத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது. இது தவிர முக்கியமான பண்டிகை நாட்களிலும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகின்றன.

bank reserve bank

அந்த வகையில், நடப்பு டிசம்பர் மாதத்தில் மட்டும் வங்கிகளுக்கு 17 நாட்கள் விடுமுறை வருகின்றன. வங்கி விடுமுறை நாட்களில் ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றாலும் வங்கிக்கு நேரடியாக சென்று பெறும் சேவைகளை வாடிக்கையாளர்கள் பெறுவதில் சிரமம் இருக்கும்.

எனவே, இந்த மாதம் 17 நாட்கள் விடுமுறை வருவதால் வாடிக்கையாளர்கள் ஏதேனும் பணிகள் இருந்தால் முன்கூட்டியே திட்டமிட்டு செய்தால், சிரமத்தை தவிர்க்கலாம். ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவலின் படி இந்த மாதத்தில் வங்கிகளுக்கு வரும் விடுமுறைகள் குறித்த விவரம் வருமாறு:-

* 1, 8, 15, 22, 29 என மொத்தம் 5 ஞாயிற்றுக்கிழமைகளும் விடுமுறை என்பதால் 5 நாட்களும், இரண்டாவது சனிக்கிழமை மற்றும் 4வது சனிக்கிழமை என 2 நாட்கள் என்று 7 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.

* டிசம்பர் 3 செவ்வாய்க்கிழமை- புனித பிரான்சிஸ் சேவியரின் விழா (பானஜி, கோவா)
* டிசம்பர் 12 வியாழக்கிழமை- பா-டோகன் நெங்மிஞ்சா சங்மா (ஷில்லாங்க், மேகாலயா)
* டிசம்பர் 18- புதன்கிழமை- U SoSo Tham நினைவு நாள் அனுசரிப்பு (ஷில்லாங், மேகாலயா)
* டிசம்பர் 19- வியாழக்கிழமை- கோவா விடுதலை நாள் (பானஜி, கோவா)
* டிசம்பர் 24 செவ்வாய்க்கிழமை- கிறிஸ்துமஸ் - ஐஸ்வால் (மிசோரம்) நாகலாந்து,

* டிசம்பர் 25 புதன்கிழமை - கிறிஸ்துமஸ்
* டிசம்பர் 26 வியாழக்கிழமை- கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் (ஐஸ்வால், கோஹிமா, சில்லாங்)
* டிசம்பர் 27 வெள்ளிக்கிழமை - கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் (கோகிமா)
* டிசம்பர் 30 திங்கள்கிழமை - உ கியாங் நங்கர்பா - ஷில்லாங்
* டிசம்பர் 31 செவ்வாய்க்கிழமை - புத்தாண்டுக்கு முந்தைய நாள் - ஐஸ்வால், கங்டோக் (சிக்கிம்)
இதுபோக வழக்கமான விடுமுறைகள் என சேர்த்து மொத்தம் 17 நாட்கள் விடுமுறைகள் வருகிறது.

ஒட்டு மொத்தமாக அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை கிடையாது. அதாவது நம் நாட்டை பொறுத்தவரை வங்கி விடுமுறை தினம் என்பது மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடுகிறது. இதற்கு அந்தந்த மாநிலங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகள் தான் காரணம். உதாரணத்துக்கு ஓணம் பண்டிகை கேரளாவில் சிறப்பாக கொண்டாடப்படும். ஆனால் தமிழகத்தில் அப்படியில்லை. இதனால் அன்றைய தினம் கேரளாவில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை நாளாகும். மாறாக தமிழகத்தில் வங்கிகள் செயல்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+