டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நம்பர் 1ம் கிடையாது.. 2வது ரேங்கும் கிடையாது.. டிஆர்பி ரேட்டிங்கை 3 மாதம் நிறுத்திய 'பார்க்'

Google Oneindia Tamil News

டெல்லி: டிஆர்பி ரேட்டிங் விஷயத்தில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ள நிலையில், அடுத்த மூன்று மாதங்களுக்கு வாராந்திர டிஆர்பி ரேட்டிங் வெளியிடப் போவதில்லை என்று பிராட்காஸ்ட் ஆடியன்ஸ் ரிசர்ச் கவுன்ஸில் (BARC) அறிவித்துள்ளது.

டிஆர்பி ரேட்டிங் என்பது ஒரு தொலைக்காட்சியை எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்பதை கண்டறிய பயன்படும் வழிமுறையாகும். ஆனால், இதில் மோசடி செய்து ரிபப்ளிக் டிவி சேனல், தங்கள் டிவி சேனலை அதிகம் பேர் பார்ப்பதாக போலியாக, காண்பித்ததாக மகாராஷ்டிரா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

BARC suspends ratings of TV news channels for 3 months

இதுதொடர்பாக, ரிபப்ளிக் சேனல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விஜய் சேதுபதிக்கு கால நேரம் அளித்தோம்.. துளியும் பொருட்படுத்தவில்லை.. சீண்டாதீர்கள்.. சீமான் கண்டனம்விஜய் சேதுபதிக்கு கால நேரம் அளித்தோம்.. துளியும் பொருட்படுத்தவில்லை.. சீண்டாதீர்கள்.. சீமான் கண்டனம்

இதனிடையே, மூன்று மாதங்களுக்கு வாராந்திர ரேட்டிங் அறிவிக்கப் போவதில்லை என்று பார்க் அறிவித்துள்ளது. ரிபப்ளிக் டிவி மட்டுமல்லாது, மேலும் பாக்ஸ் சினிமா மற்றும் பக்த் ஆகிய இரண்டு மராத்தி சேனல்கள் இந்த சர்ச்சையில் சிக்கி உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

English summary
Amid a controversy surrounding its viewership data for TV news channels, the Broadcast Audience Research Council (BARC) has decided to suspend its weekly ratings of TV news channels for a period of three months.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X