டெல்லியே வியந்து பார்த்த முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி.. கடைசியில் மோடி செய்த தரமான சம்பவம்
டெல்லி: குடியரசு தினவிழாவில் பங்கேற்ற முப்படை வீரர்கள் அதற்குப் பிறகு பாசறைக்குத் திரும்புவார்கள். அதன்படி இந்தாண்டு டெல்லியில் முப்படை வீரர்கள் பாசறைக்குத் திரும்பும் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெறுகிறது.
இந்தியாவில் கடந்த ஜன. 26ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது. குடியரசு தினத்தன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு டெல்லியில் மூவர்ணக் கொடியை ஏற்றினார்.

பிரான்ஸ் அதிபர் மெக்ரோன் இந்தாண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மேலும், குடியரசு தின விழாவில் அனைத்து மாநிலங்களிலும் அம்மாநில ஆளுநர்கள் தேசியக் கொடியை ஏற்றினர். நாடு முழுக்க குடியரசு தினத்தன்று பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
பாசறை திரும்பும் நிகழ்ச்சி: தலைநகர் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் முப்படை வீரர்களும் தலைநகருக்கு வந்தனர். குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இப்போது முப்படைகளும் பாசறை திரும்பும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. டெல்லி கடமை பாதையில் நடக்கும் இந்த நிகழ்வில் 25க்கும் மேற்பட்ட இசைக்குழுக்களின் அணிவகுப்பு நடைபெறுகிறது.
பொதுவாகப் போர்க் காலங்களில் போருக்குச் சென்ற படைகள் மீண்டும் தாய் நாட்டிற்குத் திரும்புவதையே பாசறை திரும்பும் நிகழ்வு என்பார்கள். இது முப்படைகளின் பேண்ட் வாத்திய இசை நிகழ்ச்சிகளைக் கொண்டதாக இருக்கும். இப்போது குடியரசு தின விழா கொண்டாட்டங்களுக்கு வீரர்கள் டெல்லி வந்துள்ள நிலையில், அவர்கள் மீண்டும் பாசறை திரும்புகின்றனர். ஆண்டுதோறும் நடக்கும் இந்த நிகழ்ச்சி பிரம்மாண்டமாக இருக்கும்.
பிரம்மாண்டத்தின் உச்சம்: இதில் 20க்கும் மேற்பட்ட இசை அணிவகுப்புடன் நடத்தப்படும். கொரோனா காலங்களில் மட்டும் இதற்குக் குறைவான பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி தரப்பட்டது. இந்தாண்டு கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாத நிலையில், பல ஆயிரம் பேர் இந்த கோலாகல நிகழ்வைக் காணக் குவிந்தனர்.

முப்படைகளின் தலைவரான குடியரசுத் தலைவர் தலைமையில் தான் இந்த நிகழ்ச்சி நடைபெறும். இந்தாண்டு நடக்கும் இந்த நிகழ்வில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரது துணைத் தலைவர் தன்கர், பிரதமர் மோடி உள்ளிட்ட பல முக்கிய அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர். டெல்லியில் இந்த நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெறுகிறது. குடியரசு தின விழா அதிகாரப்பூர்வமாக நிறைவடைவதையே இந்த பாசறை திரும்பும் விழா குறிக்கிறது.
இந்திய ராணுவம் மற்றும் மத்திய ஆயுதக் காவல் படைகளின் (CAPF) இசைக்குழுக்கள், 31 இந்திய ட்யூன்களின் தொகுப்பை வாசித்துக் காட்டுகின்றனர். 'சங்கநாத்' ட்யூனுடன் தொடங்கும் விழாவைப் பலரும் கண்டு ரத்திது வருகிறார்கள். இந்த நிகழ்வு முடியும் வரை இதைப் பிரதமர் மோடி கண்டு ரசித்தார். மேலும், அவர் கிளம்பும் முன்பு அங்கு திரண்டு இருந்த மக்களை நோக்கி நடந்து சென்றார். அங்கு உள்ள மக்கள் அனைவரையும் நோக்கிக் கையசைத்தவாறே பிரதமர் மோடி சென்றார். அதன் பின்னரே அவர் அங்கிருந்து கிளம்பினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications