அக்னிபாத் போராட்டம் ஏன்? ஓய்வூதியம், காப்பீடுகள் இல்லையா? மத்திய அரசு இதில் ஆர்வம் காட்ட என்ன காரணம்
டெல்லி: மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராகப் போராட்டங்கள் தொடங்கி உள்ள நிலையில், அத்திட்டத்தின் உள்ள சாதக பாதகங்களைப் பார்க்கலாம்!
Recommended Video
இந்தியாவில் உள்ள முப்படைகளுக்கும் நேரடியாகவே ஆட்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில் மத்திய அரசின் புதிய ராணுவ ஆட்சேர்பு கொள்கையை அறிவிக்கப்பட்டு உள்ளது.
அக்னிபாத் என்று அழைக்கப்படும் இந்தத் திட்டத்தை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். அக்னிபாத் திட்டம் மூலம் ராணுவம், கடற்படை, விமானப்படைக்கு ஆள்சேர்ப்பு நடைபெறும்.

அக்னிபாத்
17.5 வயது முதல் 21 வயதுக்குள் உள்ளவர்கள் இதில் சேரலாம். இவர்கள் அக்னிவீர் என அழைக்கப்படுவர். இத்திட்டத்தில் ஒருவர் நான்கு ஆண்டுகள் பணியில் இருக்கலாம். இதன் மூலம் ராணுவத்துக்குத் தேர்ந்தெடுக்கவைப்பவருக்கு 4 ஆண்டுகள் மட்டுமே பணி வழங்கப்படும். நான்ரு ஆண்டுகள் முடிந்த பிறகு, 80% பேர் ராணுவத்தில் இருந்து விடுவிக்கப்படுவர். 20% மட்டும் பேர் ராணுவப் பணியைத் தொடர முடியும்.

மத்திய அரசு
இந்தத் திட்டம் குறித்து நாடு முழுவதும் பெரும் விவாதம் நடைபெற்று வரும் நிலையில், பல வட மாநிலங்களில் போராட்டங்களும் தொங்கி உள்ளன. இதையடுத்து இந்த ஓராண்டிற்கு மட்டும் பணியில் சேரும் அதிகபட்ச வயதை 21ஆக உயர்த்தி மத்திய அரசு, இது குறித்து விளக்கும் Myth vs Fact document விளக்க அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளது. போராட்டம் அதிகரிக்கும் நிலையில், அதற்கான முக்கிய காரணங்களைப் பார்க்கலாம்!

பிரச்சினை
இது தற்காலிக பணியை மட்டுமே வழங்குகிறது என்பதே இதில் இருக்கும் முக்கிய பிரச்சினை. அதாவது இத்திட்டத்தில் கீழ் நான்கு ஆண்டுகள் மட்டுமே பணி செய்ய முடியும். ஓய்வூதியமும் நீக்கப்பட்டது; மேலும் ராணுவ வீரர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வாழ்நாள் முழுவதும் மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட எதுவும் இல்லை. மற்றொரு அச்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள வயது வரம்பு காரணமாகப் பல இளைஞர்கள் தகுதியை இழக்கும் அச்சமும் உள்ளது. 2020 முதல் ஆட்சேர்ப்பு நடைபெறாத நிலையில், இந்த அதிகபட்ச வயது வரம்பு பிரச்சினையை ஏற்படுத்துவதாக உள்ளது.

கிடைக்காது
இப்போது வரை, ஒரு ராணுவ வீரர் குறைந்தது 17 ஆண்டுகள் பணிப் பாதுகாப்பைக் கொண்டுள்ளார். அதன் பின்னர் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஓய்வூதியம் மற்றும் மானியத்துடன் கூடிய மருத்துவ காப்பீடும் கிடைக்கும். அதேபோல அவர் இறந்தால், அவரது குடும்பத்திற்குக் கிடைக்கும் நன்மைகள் தொடரும். அக்னிபாத் திட்டத்தில் இணைபவர்களுக்கு இதுபோல எந்தவொரு நன்மைகளும் கிடைக்காது.

முக்கிய நோக்கம்
மத்திய அரசு இந்தத் திட்டத்தை முன்னெடுக்க முக்கிய நோக்கம் ஒன்று உள்ளது. அதாவது ஆயுதப்படை வீரர்களின் உயரும் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தைக் குறைப்பதே இதன் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த ஆண்டில் பாதுகாப்புத் துறைக்கு 5.25 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதில் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்கு மட்டும் 2.5 லட்சம் கோடி ரூபாயை அரசு செலவிட வேண்டி உள்ளது.

பலன்கள் இல்லை
நான்கு ஆண்டுகள் பணிபுரியும் அக்னிவீரர்கள், பணிக் காலத்திற்கான ஊதியம் வழங்கப்படும், மேலும் சேவையின் முடிவில் மொத்தமாக ரூ.11.7 லட்சம் வழங்கப்படும். இதற்கு வரி விலக்கும் அளிக்கப்படும். அதேபோல ஓய்வூதியம், வாழ்நாள் முழுவதும் மருத்துவக் காப்பீடு பலன்களும் இல்லை. பணியில் இருக்கும் போது அக்னிவீரன் இறந்தால், அந்தக் குடும்பத்திற்குக் காப்பீடு, கருணைத்தொகை மற்றும் நிலுவைத் தொகை உட்பட ரூ.1 கோடி கிடைக்கும். ஆனால் இது ஒரு முறை செலுத்தப்படும் தொகையாக இருக்கும்.

நிரந்தரம்
இருப்பினும், 4 ஆண்டுகள் முடிந்த பிறகு ஆயுதப் படையில் தொடரும் வீரர்களுக்கு இந்த பலன்கள் கிடைக்கும். அக்னிவீரர்கள் நான்கு ஆண்டு பதவிக் காலத்தை முடித்த பிறகு, அதில் இருந்து குறிப்பிட்ட சதவிகிதம் பேர் நிரந்தரமாக ராணுவத்தில் சேர்க்கப்படுவார்கள். அவர்கள் இன்னும் 15 ஆண்டுகள் சேவையில் தொடர்வார்கள். மேலும் ஓய்வூதியம் மருத்துவ காப்பீடுகளை அவர்கள் பெறுவார்கள்.

முன்னுரிமை
மற்றவர்கள் இதர வேலைகளில் சேரலாம். பல அரசுத் துறைகளில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும், கல்விக் கடன்கள், திறன் சான்றிதழ்கள், பிற துறைகளில் வாய்ப்பு அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அக்னிவீரர்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்று பரவும் தகவல் பொய்யானது என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொழில்முனைவோராக விரும்புவோருக்கு நிதித் தொகுப்பு மற்றும் வங்கிக் கடன்கள் எளிதாகக் கிடைக்கும். மேற்படிப்பு படிக்க விரும்புவோருக்கு 12 ஆம் வகுப்புக்குச் சமமான சான்றிதழும் மேல் படிப்புக்கான பிரிட்ஜிங் படிப்பும் வழங்கப்படும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. மத்திய ஆயுதக் காவல் படையில் அக்னி வீரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும், சில பாஜக ஆளும் மாநிலங்கள் காவல்துறை ஆட்சேர்ப்பிலும் முன்னுரிமை அறிவித்துள்ளது. மேலும், பிற துறைகளிலும் அவர்களுக்குக் கூடுதல் வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன,

பிரதிநிதித்துவம்
புதிய ஆட்சேர்ப்பு கொள்கை ராணுவத்திற்கான Recruitable Male Population முறையில் எப்படித் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் தெரியாமலேயே உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் ஒரு மாநிலத்தின் மொத்த ஆண் மக்கள் தொகையில் 10 சதவீதம் ராணுவத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவார்கள். இதை எப்படி அமல்படுத்தப் போகிறார்கள் என்பதும் குழப்பமாகவே உள்ளது.

கூடுதல் விளக்கம்
இதற்கான வழிமுறைகள் உருவாக்கப்பட்டு வருவதாகப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. இருப்பினும் ஆயுதப்படைகளின் மக்கள்தொகை நாட்டின் மக்கள்தொகையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. வரும் ஆண்டுகளில் அக்னிவீரர்களின் ஆட்சேர்ப்பு தற்போது ஆயுதப்படைகளில் ஆட்சேர்ப்பு செய்யப்படுவதை விட மூன்று மடங்கு அதிகமாக இருக்கும் என்று அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
-
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக் -
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications