பைக்கில் செல்ல தடை.. மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆணையம் போட்ட விசித்திர உத்தரவு!
டெல்லி: மேற்கு வங்கத்தில் ஏப்.23ம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. எனவே இன்று முதல் பைக்கில் மக்கள் பயணிக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த உத்தரவு மேற்கு வங்கத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
தேர்தல் ஆணையம் பிறப்பித்திருக்கும் உத்தரவில், மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் சாலையில் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவ அவசரநிலை மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு விதிவிலக்கு உண்டு. இன்று முதல் ஏப்.23 வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும்.

இரவில் முழு தடை எனில், பகல் நேரங்களில் (காலை 6 - மாலை 6) இருசக்கர வாகனங்களில் இருவர் அமர்ந்து செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்லவும், மருத்துவத் தேவைகளுக்கும் மட்டுமே அனுமதி உண்டு.
இதில் ஏப்.23 அன்று மட்டும் பைக்குகளில் குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாகச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களை அச்சுறுத்துவதைத் தவிர்க்க, பைக் ஊர்வலங்களுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் விளக்கமளித்திருக்கிறது.
மேற்கு வங்கத்தில், பைக் பேரணிகளுக்கு தடை விதிக்கப்பது புதிய விஷயம் கிடையாது. இதற்கு முன்னர், 2021-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலின் போதும், வாக்குப்பதிவுக்கு 72 மணி நேரத்திற்கு முன்னதாகவே பைக் ஊர்வலங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது.
ஆனால், மாலை 6 மணி முதல் அடுத்த நாள் காலை 6 மணி வரை பைக் ஒட்டக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும். இது குறித்து விளக்கமளித்துள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், வன்முறையற்ற, சுதந்திரமான தேர்தலை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை என தெரிவித்திருக்கிறார்.
ஆனால், மேற்கு வங்கத்தில் நடப்பதை எல்லாம் பார்க்கும்போது வித்தியாசமாக தெரிகிறது என்று ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்திருக்கின்றனர்.
ஏற்கெனவே மேற்கு வங்கத்தில், உள்ளூர் போலீசை விட அதிக அளவில் மத்திய அரசின் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. அதாவது மேற்கு வங்கத்தில் தற்போது 2.4 லட்சம் பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டிருக்கின்றனர். அந்த மாநிலத்தின் மொத்த போலீஸ் எண்ணிக்கையே 1.04 லட்சம் தான். அப்படியெனில் மாநிலக் காவல்துறையின் எண்ணிக்கையை விட மத்தியப் படைகளின் எண்ணிக்கை இரண்டரை மடங்கு அதிகமாக இருக்கிறது.
இவ்வளவு பாதுகாப்பு இருந்தும், பைக்கில் செல்ல தடை விதிக்கப்படுவது எல்லாம் ரொம்ப ஓவர் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் விமர்சித்திருக்கின்றனர்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications