சிக்கினார் சுரேஷ் ரெய்னா.. அமலாக்கத்துறையிடம் இருந்து பறந்து போன சம்மன்.. என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சட்டவிரோத சூதாட்ட செயலி விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை சார்பில் நேற்று சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் இன்று விசாரணைக்கு ஆஜராக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் அதன் பின்னணி பற்றிய விவரம் வெளியாகி உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்னாக வலம் வந்தவர் சுரேஷ் ரெய்னா. பேட்டிங் மட்டுமின்றி அவ்வப்போது பார்ட் ஃடைம் ஸ்பின் பவுலராகவும் செயல்பட்டு வந்தார். ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார்.

betting-app-row-former-indian-cricketer-suresh-raina-summoned-by-ed-in

தற்போது சுரேஷ் ரெய்னா கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இப்போது சுரேஷ் ரெய்னா சொந்த தொழில் மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளராக உள்ளார்.

இந்நிலையில் தான் சுரேஷ் ரெய்னாவுக்கு நேற்று அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதாவது 1xBet எனும் சூதாட்ட செயலியை சுரேஷ் ரெய்னா சட்டவிரோதமாக புரோமோஷன் செய்ததாக கூறப்படுகிறது.

இதன் பிராண்ட் அம்பாசிட்டராக சுரேஷ் ரெய்னா இருந்துள்ளார்.மேலும் சட்டத்துக்கு விரோதமாக பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த புகாரில் சுரேஷ் ரெய்னாவுக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிஎம்எல்ஏ எனும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்மனை தொடர்ந்து சுரேஷ் ரெய்னா இன்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ஆஜராவார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த ஜுன் மாதம் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ் சிங் மற்றும் ஹர்பஜன் சிங் உள்ளிட்டோரிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்ட நிலையில் தற்போது சுரேஷ் ரெய்னாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது.

சட்டவிரோத சூதாட்ட செயலி விவகாரத்தில் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி நடிகர், நடிகைகளிடமும் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. சட்டவிரோத சூதாட்ட செயலிகளை புரோமோஷன் செய்ததாக தெலுங்கானா போலீசார் 25 நடிகர், நடிகைகள் மீது பதிவு செய்த நிலையில் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ராணா டகுபதியிடம் நேற்று ஹைதராபாத்தில் வைத்து அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது.

இவர்கள் தவிர அமலாக்கத்துறை வளையத்துக்குள் நடிகைகள் மஞ்சு லட்சுமி, நிதி அகர்வால், அனன்யா நாகல்லா, சின்னத்திரை நடிகை ஸ்ரீமுகி உள்ளிட்டோர் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+