பாஜக விரிக்கும் மாய வலைகள்.. "ரொம்ப கவனமாக இருங்க.." ராகுல் காந்தி கொடுத்த அட்வைஸ்.. என்ன நடந்தது
டெல்லி: காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பாஜக விரிக்கும் வலையில் சிக்கிவிடக் கூடாது என்று ராகுல் காந்தி காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸின் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே தேர்வான பிறகு, புதிய செயற்குழு அமைக்கப்பட்டது. அந்த புதிய செயற்குழு அமைக்கப்பட்ட பிறகு, ஹைதராபாத்தில் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது.

தெலுங்கானா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெறும் தேர்தல் தொடங்கிப் பல முக்கிய விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாகத் தெலுங்கானா தேர்தல் குறித்து இதில் முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.
ராகுல் காந்தி: இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மூத்த காங்கிரஸ் தலைவர் பவன் கேரா, காரியா கமிட்டி கூட்டம் குறித்து முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் பாஜகவினர் விரிக்கும் வலையில் சிக்கிவிடக் கூடாது என்று ராகுல் காந்தி அறிவுறுத்தியதாகத் தெரிவித்தார். நாட்டிற்குச் சம்பந்தமில்லாத பிரச்சினைகள் குறித்துப் பேசி திசை திருப்பக்கூடாது என்றும் ராகுல் காந்தி அறிவுறுத்தியிருக்கிறார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய பவன் கேரா, "காங்கிரஸ் தலைவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என ராகுல் காந்தி காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் எச்சரித்தார். பாஜக விரிக்கும் வலையில் சிக்கிவிடக் கூடாது என்றார். நாட்டிற்கும் மக்களுக்கும் இப்போது இருக்கும் பிரச்சினைகளில் இருந்து கவனத்தைத் திசை திருப்ப பாஜக இதைப் பயன்படுத்தும். எனவே, இந்த ஆபத்தில் இருந்து எச்சரிக்கையாக இருங்கள்" என்றார்.
மாய வலை: மேலும், தனியார் ஏஜென்சி நடத்திய கருத்துக்கணிப்பில் உலகில் பிரபலமான தலைவர் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கை பின்னுக்குத் தள்ளியதாக வெளியாகும் தகவல்.. கர்நாடக முதல்வர் சித்தராமையா நெற்றியில் திலகமிட மறுத்தாக பரவும் வீடியோ ஆகியவை இதற்குச் சான்று என்றும் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், "நாட்டில் இப்போது வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. பல்வேறு பிரிவு மக்களும் பிரச்சினைகளை எதிர்கொண்டு இருக்கிறார்கள்..
இதுபோன்ற பிரச்சினைக்கும் இவர்கள் பரப்பும் இந்த வீடியோவுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது.. இதுபோன்ற வலைகளில் இருந்தே கவனமாக இருக்கும்படி ராகுல் காந்தி தெரிவித்தார். நாட்டு மக்களின் உண்மையான பிரச்சினைகள் குறித்து குரல் எழுப்பவே காங்கிரஸ் இருக்கிறது என்பதில் ராகுல் காந்தி உறுதியாக இருக்கிறார். ராகுல் காந்தியின் இந்தக் கருத்துகளைக் காங்கிரஸ் நிர்வாகிகளை வழிநடத்துவதாக இருக்கிறது" என்றார்.
இட ஒதுக்கீடு: தொடர்ந்து இட ஒதுக்கீடு குறித்துப் பேசிய அவர், "இட ஒதுக்கீட்டிற்கு இப்போது இருக்கும் உச்சவரம்பை நீக்க வேண்டும் என ராகுல் காந்தி ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியிருந்தார்.
நாட்டில் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார். நாட்டின் செல்வம் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும் செல்ல வேண்டும்.. இது குறித்து நாங்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறோம். தொடர்ந்து இது குறித்துப் பேசுவோம்" என்றார்.
ஆதரவு தேவையில்லை: மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசியை பாஜக மற்றும் பிஆர்எஸ் கட்சியின் பி டீம் என விமர்சித்த அவர், "தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சிக்கான ஆதரவு அதிகரித்து வருகிறது. இதைப் பார்த்து அவர்கள் அச்சமடைந்துள்ளனர். ஒவைசி சமீப காலமாக எந்தவொரு பேரணியையும் ஹைதராபாத்தில் நடத்தியதே இல்லை. ஆனால், காங்கிரஸ் கட்சியின் பேரணியைக் கண்டு அஞ்சி ஒவைசி கூட்டத்தை நடத்துகிறார். மகாராஷ்டிராவுக்குச் செல்ல வேண்டிய அமித் ஷாவும் தெலுங்கானா வருகிறார்.
இந்த மூன்று கட்சிகளும் இணைந்து காங்கிரஸ் கட்சியை வீழ்த்த பார்க்கிறது. தெலுங்கானா தேர்தலுக்குப் பிறகு ஆட்சியை அமைக்க மஜ்லிஸ் அல்லது பிஆர்எஸ் கட்சியின் ஆதரவைக் காங்கிரஸ் நிச்சயம் ஒருபோதும் கேட்காது. தெலுங்கானாவில் காங்கிரஸ் மகி பெரிய வெற்றியைப் பெறும் என்பதால் அவர்களின் ஆதரவு எங்களுக்குத் தேவையில்லை" என்று அவர் தெரிவித்தார்.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications