கணவனுக்கு கனவிலும் நினைக்காதது.. காதலனுடன் சேர்ந்து மனைவி செய்த காரியம்; நடுங்க வைக்கும் பின்னணி
டெல்லி: மனைவி தன் கணவனிடம், "நீ கருப்பாக இருக்கிறாய். நீ எனக்குத் தகுதியானவன் அல்ல. நான் உன்னை விட சிறந்த ஒருவருக்குத் தகுதியானவள்" என்று பலமுறை அவமானப்படுத்தி இருக்கிறாள்.. மனைவியும் அவளது காதலனும், தங்கள் காதல் கதைக்கு கணவன் ஒரு தடையாக இருந்ததால், அவரை என்ன செய்தார்.
கொலையாளி அறைக்குள் நுழைந்து, கணவனைக் கொலை செய்தான், மனைவியோ அதை ஒரு கொள்ளை போலக் காட்ட முயன்றாள். இந்தச் சம்பவம் மத்தியப் பிரதேசத்தின் தார் நகரில் நடந்திருக்கிறது.

மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில், நள்ளிரவில் நடந்த கொள்ளையின் விளைவாக நடந்ததாக முதலில் நம்பப்பட்ட ஒரு கொலை சம்பவம், தற்போது போலீசாரே ஆடிப்போகும் அளவிற்கு திருப்பம் நடந்துள்ளது. இந்த கொள்ளை மற்றும் கொலை சம்பவத்தை மனைவி மற்றும் அவரது காதலன் ஆகியோர் முன்கூட்டியே திட்டமிட்டு செய்த சதி என்பது காவல்துறை நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் கோண்டிகேடா கிராமத்தில் நடந்த இந்த வழக்கை பற்றி போலீசார் கூறிய தகவல்களின்படி விரிவாக பார்ப்போம் கோண்டிகேடா கிராமத்தில் பிரியங்கா என்பவர், அடையாளம் தெரியாத நபர்கள் இரவில் தனது வீட்டிற்குள் நுழைந்து, தன்னைத் தாக்கி, தனது கணவர் தேவகிருஷ்ணாவைக் கொன்றுவிட்டுத் தப்பிச் சென்றதாக போலீசாரிடம் கூறியிருக்கிறார்.. நேரில் சென்று போலீசார் விசாரித்த போது, வீடு சூறையாடப்பட்ட நிலையில், சம்பவ இடத்தில் அவர் அழுதுகொண்டிருந்தார். எனினும் போலீசார், இது ஒரு திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட கொள்ளை சம்பவம் என்பதையும், இது ஒரு திட்டமிட்ட கொலை என்றும் கண்டறிந்தனர்.. எப்படி கண்டுபிடித்தார்கள் என்பதை பார்ப்போம்
ஏனெனில் போலீசார் நடத்திய விசாரணையின் போது, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் அளித்த வாக்குமூலங்கள், பிரியங்கா மற்றும் அவரது கணவர் தேவகிருஷ்ணா இடையே திருமணம் ஆனதில் இருந்தே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்தது. அவர்களுடைய திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் இருந்ததாகவும் தெரிவித்தன. தேவகிருஷ்ணாவின் குடும்பத்தினர், பிரியங்கா அடிக்கடி அவரது தோல் நிறத்தைக் குறித்து கேலி செய்ததாகவும், "நீ கருப்பாக இருக்கிறாய், நான் இதைவிட சிறந்தவளுக்குத் தகுதியானவள்" என்று கூறியதாகவும், பலமுறை விவாகரத்து கோரியதாகவும் குற்றம் சாட்டினார்கள்.
இதனிடையே பிரியங்காவுக்கு கடந்த 2020 முதல் கம்லேஷுடன் கள்ள உறவில் இருந்து வந்துள்ளார். இந்த கள்ளக்காதலுக்கு தேவ்கிருஷ்ணா இடையூறாக இருந்தார். இதையடுத்து அவரை கொலை செய்ய பிரியங்கா மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆகிய இருவரும் சதித்திட்டம் தீட்டி இருக்கிறார்கள். பின்னர் அந்தக் கொலையை ஒரு கொள்ளைச் சம்பவம் போல சித்தரிக்க முயன்றுள்ளார்கள். ஆனால் ஏற்கனவே நடந்த சண்டை மற்றும் முன்னுக்குபின் முரணான தகவல்களால் சிக்கி கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
போலீசார் கூறும் போது, பிரியங்காவின் கள்ளக்காதலன் கம்லேஷ் தனது நண்பனான சுரேந்திராவை கூலிப்படை போல் அழைத்துள்ளார். இந்த கொலையைச் செய்வதற்காக சுமார் ஒரு லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளார். பிரியங்காவின் கணவர் தேவகிருஷ்ணா தூங்கிக் கொண்டிருந்தபோது, எதிர்க்க முடியாது என்பதால், இந்தத் திட்டம் இரவில் செயல்படுத்தப்பட்டுள்ளது. தேவ்கிருஷ்ணா கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டிருக்கிறார். இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குற்றத்தை மறைப்பதற்காக, பிரியங்கா மற்றும் கள்ளக்காதலன் கம்லேஷ் ஆகியோர் கொள்ளைச் சம்பவம் நடந்ததாக நாடகமாடியுள்ளார்கள், வீட்டுப் பொருட்களைச் சிதறடித்து, பிரியங்காவைக் கட்டிப் போட்டுள்ளனர். பின்னர், கட்டுக்கதையை நம்பவைப்பதற்காக பிரியங்கா கூச்சலிட்டுள்ளார். ஆனால் அவர்களை கண்டுபிடித்துவிட்டோம்.. 36 மணி நேரத்திற்குள் குற்றம் எப்படி நடந்தது, யாரால் நடந்தது என்பதை கண்டுபிடித்துவிட்டோம். பிரியங்கா மற்றும் கம்லேஷ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கொலையை செய்த சுரேந்திரா தீவிரமாக தேடி வருகிறோம்.
தார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயங்க் அவஸ்தி கூறுகையில், "விசாரணையைத் திசைதிருப்பும் நோக்கில் இந்தக் காட்சி உருவாக்கப்பட்டது. சாட்சியங்கள் மற்றும் விசாரணையில், மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆகியோர் செய்த திட்டமிட்ட சதி வெளிப்பட்டது," என்றார்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications