பாரத் பந்த்: மத்திய அரசை கண்டித்து இன்று நாடு முழுதும் வேலைநிறுத்தம் தொடங்கியது.. வங்கிசேவை பாதிப்பு
இன்றும் நாளையும் தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் குதித்துள்ளன
டெல்லி: மத்திய அரசுக்கு எதிரான தொழிற்சங்கங்களின் போராட்டம் தற்போது தொடங்கியது... எரிபொருள் விலையை குறைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றும், நாளையும் வேலைநிறுத்தம் நடைபெறுவதால், வங்கி காப்பீடு, போக்குவரத்து, தபால்துறை, தொலைத்தொடர்பு உள்ளிட்ட துறைகளில் சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
Recommended Video
மத்திய அரசின் மின்சார திருத்த சட்டம், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல், பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் நாளையும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.
பாஜக அரசை அரசை கண்டித்து நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கங்கள் 2 நாட்கள் பொது வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன..

பந்த் தொடங்கியது
இதன்படி இன்றும் நாளையும் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் பொது வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. ‘மக்களைக் காப்போம், நாட்டைக் காப்போம்' என்ற முழக்கத்துடன் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்து காலை போராட்டத்தை துவங்கியுள்ளனர்.. இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களும் பங்கேற்றுள்ளன.. இதனால் வங்கி, எல்ஐசி உள்ளிட்ட பணிகளும் பாதிப்புக்குள்ளாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது...

ஆதரவு
இந்த பாரத் பந்த்திற்கு மாநில தொழிற்சங்கங்களும் தங்களின் முழு ஆதரவை தெரிவித்திருந்தன. தமிழகத்தை பொறுத்தவரை, திமுக தொழிற்சங்கமான எல்பிஎப் மற்றும் கம்யூனிஸ்டு தொழிற்சங்கங்களான சிஐடியு ஏஐடியுசி உள்ளிட்ட 12 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துவிட்டன.

ஸ்டிரைக்
இதன்படி வேலைநிறுத்த போராட்டத்தில் இந்த தொழிற்சங்கங்களை சேர்ந்த பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஸ்டிரைக் தொடங்கி உள்ளது.. இதனால் பஸ் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படுமோ என்கிற அச்சமும் நேற்றைய தினம் எழுந்த நிலையில், இன்று வழக்கம் போல பஸ்கள் ஓடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.. அதேபோல, ரெயில் போக்குவரத்தும் தடையின்றி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

வேலைநிறுத்தம்
ஆனால், இந்த வேலை நிறுத்தம் காரணமாக சென்னையில் பெரும்பாலும் பஸ்கள் இயக்கப்படவில்லை... குறைந்து அளவு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுவதால், பொது மக்கள் பாதிப்படைந்துள்ளனர்... அதேபோல், தமிழ்நாடு முழுவதும் இதே நிலைதான் நீடிப்பதாக தகவல்களும் வெளியாகி வருகின்றன.. வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ள தொழிற்சங்க நிர்வாகிகள் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளன.. சென்னையை பொறுத்தவரை இன்று 11 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது... மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

தொழிற்சங்கம்
தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை பகுதிகளை தனித்தனியாக ஒன்றிணைத்து தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்த உள்ளனர்.. இதற்காகவே, வட சென்னை பகுதியில் 9 இடங்கள் போராட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.. வடசென்னையில் சட்டமன்ற தொகுதி வாரியாக தபால் நிலையங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்படுகிறது... . அண்ணா தொழிற்சங்கம் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

போராட்டம்
மத்திய சென்னைக்குட்பட்ட பகுதியில் ஒரு இடத்திலும், தென்சென்னை பகுதிகளை ஒன்றிணைத்து ஒரு இடத்திலும் போராட்டத்தை நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், மத்திய சென்னை தொழிற்சங்க நிர்வாகிகள் சென்னை அண்ணா சாலை தலைமை தபால் நிலையம் முன்பு திரண்டு போராட்டம் நடத்துகிறார்கள். இந்த போராட்டத்தில் தொழிற்சங்கங்களை சேர்ந்த முக்கிய தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

தமிழகம்
தமிழகத்தில் பொது வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டங்களை தொடர்ந்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது... சென்னையில் சுமார் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.. இதனால் பல்வேறு பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இதனிடையே இன்றும் நாளையும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications