பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாகூருக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு.. யார் இவர்? பின்னணி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசு பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரில் தாகூருக்கு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் பிரச்சினைகளுக்காக கர்பூரி தாக்கூர் குரல் கொடுத்தவர்.

இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது பாரத ரத்னா. அரசியல் கலை, இலக்கியம், அறிவியல், விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட துறைகளில் அளப்பறிய சாதனையை நிகழ்த்துபவர்களுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி வருகிறது.

Bharat Ratna Award Announcement for Former Bihar Chief Minister Karpoori thakur

இந்த நிலையில், பீகார் முன்னாள் முதல் மந்திரி கர்பூரி தாகூருக்கு பாரத ரத்னா விருது மத்திய அரசு அறிவித்துள்ளது. மறைவுக்கு பின் கர்பூரி தாகூருக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்தவர் கர்பூரி தாக்கூர்.

கடந்த 1970-71 மற்றும் 1977-79 கால கட்டங்களில் பீகார் முதல்வராக கர்பூரி தாக்கூர் பதவி வகித்தார். சிறந்த சோஷியலிஸ்ட் தலைவராக அறியப்பட்ட கர்பூரி தாக்கூருக்கு மறைவுக்கு பிறகு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கர்பூரி தாகூர் கடந்த 1988 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 ஆம் தேதி உயிரிழந்தார். அவர் மறைவிற்கு பிறகு 35 ஆண்டுகள் கழித்து மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்பூரி தாகூருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் அவரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் நீண்ட காலமாக குரல் கொடுத்து வந்தது. இந்த நிலையில் தான் தற்போது கர்பூரி தாகூருக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் அல்லாத முதல், முதல்வர் என்ற பெருமை கர்பூரி தாகூருக்கு உண்டு.

இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு மோடி அரசு முக்கியத்துவம் தரவில்லை என ராகுல் காந்தி குற்றம் சாட்டி வரும் நிலையில், மத்திய அரசிடம் இருந்து இப்படியான ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கை அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+