டோக்லாம் விவகாரம்- சீனா பக்கம் சாயும் பூட்டான்-மன்னர் ஜிக்மியை இன்று சந்திக்கிறார் பிரதமர் மோடி!
டெல்லி: டோக்லாம் பீடபூமி விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவான கருத்தை பூட்டான் பிரதமர் வெளியிட்டிருந்த நிலையில் அந்நாட்டின் மன்னர் ஜிக்மி (Jigme Khesar Namgyel Wangchuck) 3 நாட்கள் பயணமாக இந்தியா வருகை தந்துள்ளார். பிரதமர் மோடியுடனான இன்றைய சந்திப்பின் போது சீனா ஆதரவு நிலைப்பாட்டுக்கு ஜிக்மியிடம் அதிருப்தி தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவை நம்பி இருக்கும் அண்டை நாடுகளில் ஒன்று பூட்டான். திபெத்தை ஆக்கிரமித்து நாட்டின் ஒரு பகுதியாக உருமாற்றியது போல பூட்டான் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருக்கிறது சீனா.

பூட்டானின் எல்லைகள் நமது நாட்டுக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக மிக முக்கியம். இதனால் பூட்டான் எல்லைகளில் நமது ராணுவம் வலுப்படுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக பூட்டான் டோக்லாம் பகுதியை இந்தியா தமது பாதுகாப்பின் கீழ் வைத்துள்ளது. இதனை சீனாவால் ஜீரணிக்க முடியவில்லை.
கடந்த 2020-ம் ஆண்டு டோக்லாமில் சீனா ஊடுருவி ஆக்கிரமிக்க முயன்றது. அப்போது பூட்டானுக்காக நமது இந்திய ராணுவ வீரர்களே உக்கிரமாக போராடி சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சியை முறியடித்தனர். டோக்லாம் என்பது அரசியல் அறிவியலில் கோழி கழுத்து எனப்படுகிறது. சிக்கன் நெக் என்ற டோக்லாம் பீடபூமி பகுதியை சீனா கைப்பற்றினால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை ஆக்கிரமிக்க முடியும் என்பது அந்நாட்டின் வியூகம். இதனை நமது இந்திய வீரர்கள் முறியடித்திருந்தனர். இதனால் இந்தியா- சீனா இடையே யுத்தம் உருவாகும் சூழலும் கூட ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் அண்மையில் டோக்லாம் விவகாரம் குறித்து பேசிய பூட்டான் பிரதமர் Lotay Tshering , சீனாவுக்கும் டோக்லாமில் சரி சமமான தலையீட்டு உரிமை இருக்கிறது என ஜால்ரா அடித்திருந்தார். இது இந்தியாவை கொந்தளிக்க வைத்தது. இந்திய தரப்பில் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்தியாவின் அருணாச்சலபிரதேசம் உள்ளிட்ட 11 இடங்களின் பெயர்களை சில நாட்களுக்கு முன்னர் சீனா பெயர் மாற்றம் செய்தது. சீனா இதற்கு முன்னரும் இப்படி பெயர் மாற்றம் செய்தது உண்டு. இந்தியா இதனை பொருட்படுத்தவே இல்லை.
இந்தப் பின்னணியில் 3 நாட்கள் பயணமாக பூட்டான் மன்னர் ஜிக்மி இந்தியா வருகை தந்தார். டெல்லி விமான நிலையத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஜிக்மியை வரவேற்றார். டெல்லியில் இன்று பிரதமர் மோடியை ஜிக்மி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது பூட்டானின் சீனா ஆதரவு நிலைப்பாட்டுக்கு பிரதமர் மோடி அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications