ஆஆ.. இது வேற நடக்குதா.. ஒரே வார்த்தையில் அதிர செய்த "சொமேட்டோ" ஊழியர்.. அந்த CEO-வே ஆடிப்போயிட்டாராமே
சொமேட்டோ உணவு டெலிவரி ஊழியர் ஒருவரின் நூதன மோசடி அம்பலமாகி உள்ளது
டெல்லி: உணவு டெலிவரி செய்யும் சொமேட்டா ஊழியர் ஒருவரின் நூதனமோசடி தற்போது அம்பலமாகி உள்ளது.. இதுகுறித்த பதிவு ஒன்று இணையத்தை அதிர செய்து வருகிறது.. என்ன நடந்தது டெல்லியில்?
பல முன்னணி நிறுவனங்களில், உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் காலம் நேரம் பாராமல் வேலை பார்ப்பவர்கள்.. கடும் வெயில், மழையை பாராமல் உழைப்பவர்கள்.. இதைவிட பெரிய சிக்கல் டிராஃபிக் ஜாம்.
இந்த டிராபிக்கில் இவர்கள் சிக்கி படாதபாடுபட்டுதான், ஆர்டர் செய்யப்பட்ட உணவை கொண்டு போய் உரியவர்களிடம் சேர்க்கிறார்கள்..

செருப்பால் அடித்து
ஆனால் வீட்டில் இருந்து கொண்டு ஆர்டரை பெறும் வாடிக்கையாளர்கள் சிலர், இதையே பிரச்சனையாக்கி விடுவதும் உண்டு.. ஏதாவது ஒரு காரணங்களுக்காக அவர்களை திட்டுவதும், காயப்படுத்துவதுமான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.. இப்படித்தான் சில மாதங்களுக்கு முன்பு, பிரபல சோமேட்டா ஊழியர் ஒருவரை பெண் ஒருவர் நடுரோட்டில் வைத்து, செருப்பால் அடிக்கும் வீடியோவும் இணையத்தில் பரவியது.. இதை பார்த்து அதிர்ந்த நெட்டிசன்கள், அந்த ஊழியருக்குதான் தங்கள் ஆதரவை வழங்கினர். அதேபோல சமீபத்தில், மராட்டிய மாநிலம் புனேவில் ஒரு சம்பவம் நடந்தது..

முத்தம் - டெலிவரிமேன்
19 வயதுடைய இளம்பெண் ஒருவர், சோமாட்டோ மூலம் சாப்பாடு ஆர்டர் தந்துள்ளார்.. இரவு 9.30 மணியளவில், சோமாட்டோ ஊழியர் ரயீஸ் ஷேக் என்பவர் உணவு டெலிவரி செய்ய சென்றுள்ளார்.. அவருக்கு 40 வயதாகிறது.. இளம்பெண்ணும், உணவை பெற்றுக்கொண்டு தேங்க்ஸ் சொல்லி உள்ளார்.. ஆனால், அந்த டெலிவரி ஊழியர், தேங்க்ஸ் என பதிலுக்கு சொல்லிவிட்டு, டக்கென அந்த பெண்ணின் கன்னத்தில் வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்து 2 முறை முத்தம் தந்துவிட்டார்.. அதுமட்டுமல்ல, உனக்கு என்ன வேணுமோ என்கிட்ட தயங்காமல் கேளு, நான் உனக்கு மாமா மாதிரி என்று சொல்லி உள்ளார்.. அந்த பெண் கத்தி கூச்சலிடவும் ஷேக் ஒரே ஓட்டமாக தப்பி ஓடிவிட்டார்.

பர்க்கர் கிங்
இதோ இப்போதும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. இதுகுறித்து டெல்லியை சேர்ந்த வினய் சாத்தி என்பவர் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.. அந்த பதிவை பார்த்துதான் இணையவாசிகள் கொதித்து போயுள்ளனர்.. பர்கர் கிங் என்ற ரெஸ்ட்டாரெண்ட்டில் ஆன்லைன் மூலம் பர்கர் ஆர்டர் செய்துள்ளார் வினய்.. அதற்காக ரூ.200 ஆன்லைனில் பணம் செலுத்தி உள்ளார்.. அரை மணி நேரம் காத்திருந்தார்.. ஆர்டர் செய்த பர்கர், அவருக்கு டெலிவரி செய்யப்பட்டது.. அப்போது அந்த சொமேட்டோ ஊழியர், "இனிமேல் நீங்க 700 - 800 ரூபாய்க்கு மேல் உணவு ஆர்டர் செய்வதாக இருந்தால், ஆன்லைன் பேமென்ட் தருவதை தவிர்த்து, கேஷ்-ஆன்-டெலிவரியை தேர்வு செய்யுங்கள்.. நீங்கள் அப்படி தேர்ந்தெடுத்தால், என்னிடம் 200 ரூபாய் மட்டும் தந்துவிட்டு, நீங்கள் உங்கள் ஆர்டரை பெற்றுக்கொள்ளலாம்" என்று கூறியுள்ளார்.

Cash On Delivery
இதைக்கேட்டு ஆச்சரியப்பட்ட வினய், "அதெப்படி? வெறும் 200 ரூபாய் தந்தால் உணவகம் ஏற்றுக்கொள்ளுமா?" என்று கேட்டுள்ளார்.. அதற்கு அந்த ஊழியர், நீங்கள் அந்த உணவை வாங்கவில்லை, மறுத்துவிட்டீர்கள் என்று எங்கள் நிறுவனத்துக்கு கணக்கு காட்டிவிடுவேன் என்று பதிலளித்தார்.. இதைக்கேட்டு வினய் அதிர்ந்து போயுள்ளார். அதாவது, கேஷ்-ஆன்-டெலிவரி மூலம் சொமேட்டோவில் ஆர்டர் செய்யும் சாப்பாட்டினை, கஸ்டமர்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, டெலிவரி ஊழியர்களே அந்த பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றும் புதிய மோசடியை கேள்விப்பட்ட வினய் இதை அம்பலப்படுத்தி உள்ளார்.

CEO நச்
நடந்த சம்பவம் குறித்து, லிங்க்ட்-இன் பக்கத்தில் இந்த விஷயத்தை பதிவு செய்ததுடன், இதுபோல முறைகேடு செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த பதிவு, சொமைட்டோ சிஇஓ-வின் கவனத்துக்கும் சென்றுள்ளது.. அவரும் இதை கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்து, வினய்க்கு உரிய பதிலை சொல்லி உள்ளார்.. "இந்த சம்பவம் என்னை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.. கண்டிப்பாக இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இதனை தடுப்பதற்கான முயற்சியில் சொமேட்டோ கவனம் செலுத்திவருகிறது " என்று பதில் தந்துள்ளார்..

பெஸ்ட் ஆப்ஷன்
கம்பெனி எவ்வளவு பெரிய கம்பெனியாக இருந்தாலும், சில ஊழியர்கள் முறைகேடாக சம்பாதிக்க ஆசைப்பட்டு, நிறுவனத்துக்கே கெட்ட பெயரை வாங்கி தந்துவிடுகிறார்கள் என்று நொந்து கொள்கிறார்கள் இணையவாசிகள்.. அதுமட்டுமல்ல, கேஷ் ஆன் டெலிவரி என்ற ஒரு சிறந்த ஆப்ஷனாக இருக்கிறது என்றாலும், இப்படியான முறைகேடுகளை தடுக்க ஏதாவது வழியை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு வருகிறார்கள்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications