Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"உடனே மாத்துங்க".. ரூபாய் நோட்டுகளில் காந்திக்கு பதிலாக வீர சாவர்க்கர் உருவம்: இந்து மகாசபா கோரிக்கை

ரூபாய் நோட்டுக்களில் காந்திக்கு பதிலாக வீர சாவர்க்கர் படத்தை பொறிக்க கோரிக்கை எழுந்துள்ளது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ரூபாய் நோட்டுகளில் காந்திக்கு பதிலாக வீர சாவர்க்கர் உருவத்தை பொறிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு இந்து மகாசபா கோரிக்கை விடுத்துள்ளது.

ஆர்எஸ்எஸ், பாஜக போன்ற அமைப்புகளுக்கு சாவர்க்கரே கதாநாயகனாக அறியப்படுகிறார்.. பாஜகவினரால் 'வீர சாவர்க்கர்' என்று அழைக்கப்படும் சாவர்க்கர் குறித்த பேச்சு எழும்போதெல்லாம், சர்ச்சைகளும் சேர்ந்து எழுவது சமீப காலமாக அதிகரித்து வருவதாக தெரிகிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்தே, சாவர்க்கர் குறித்த சர்ச்சைகள் ஓயாமல் உள்ளது... சுதந்திர போராட்டத்தின்போது ஆங்கிலேய அரசை எதிர்க்காமல் மன்னிப்புக்கடிதம் எழுதிக் கொண்டிருந்தார் சாவர்க்கர் என்ற குற்றச்சாட்டு மட்டுமே அவர் மீது பிரதானமாக வைக்கப்பட்டு வருகிறது..

 வீர சாவர்க்கர்

வீர சாவர்க்கர்

மன்னிப்பு கடிதம் எழுதி, மன்னிப்பு கோரியவரை, எப்படி "வீர சாவர்க்கர்" என்று பெருமையாக சொல்கிறீர்கள் என்ற கேள்விகளும் தொடர்ந்து பொதுத்தளத்தில் எழுப்பப்பட்டு வருகின்றன.. எனினும், நாடாளுமன்றத்தில் சாவர்க்கர் போட்டோவை வைத்து ஒவ்வொரு வருடமும், பாஜக தலைவர்கள் அந்த படத்திற்கு மலரஞ்சலியும் செலுத்தி வருகிறார்கள். கடந்த 75-வது சுதந்திர தினவிழாவிற்கு கர்நாடகா அரசால் வெளியிடப்பட்ட விளம்பரங்களில் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான நேரு படத்தை இருட்டடிப்பு செய்துவிட்டு, சாவர்க்கர் படம் இடம்பெற செய்தது, மறுபடியும் சர்ச்சையை கிளப்பியிருந்தது..

தாய்மண்

தாய்மண்

அதிலும் காங்கிரஸ் எக்கச்சக்கமாக கொந்தளித்து கேள்வி கேட்டிருந்தது. அந்த பரபரப்பே அடங்காத நிலையில், மற்றொரு சாவர்க்கர் சர்ச்சை இதே கர்நாடகத்தில் சில மாதங்களுக்கு முன்பு வெடித்தது. அம்மாநில 8ம் வகுப்பு வகுப்பு கன்னடப் பாடப்புத்தகத்திலுள்ள சில வரிகளில் சாவர்க்கரை தெரிவிக்கப்பட்டிருந்தது. சாவர்க்கர் சிறையில் இருந்தபோது புல் புல் பறவை மீது அமர்ந்து தாய்மண்ணுக்கு வந்து சென்றார் என இடம் பெற்றுள்ளது கல்வியாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

புல்புல் பறவை

புல்புல் பறவை

குறிப்பாக, "அந்தமான் சிறையில் சாவர்க்கர் இருந்தபோது, ஜெயில் அறையில் சிறிய துளை கூட கிடையாது.. ஆனால் அவரது அறைக்கு எப்படியோ ஒரு புல் புல் பறவை வந்து விடும். அந்த பறவையின் சிறகின் மீது அமர்ந்து தினமும் தாய் மண்ணிற்கு சாவர்க்கர் வந்து செல்வார்" என்று அந்த பாடப்புத்தகத்தில் இடம் பெற்றிருந்த நிலையில், பல்வேறு அதிர்வலைகளை இந்த வரிகள் ஏற்படுத்தியிருந்தன. ஆறறிவு மனிதனை, 5 அறிவு பறவை உட்கார வைத்து அழைத்து சென்றதா? காற்றுகூட புகாத அறைக்குள், பறவை மட்டும் எப்படி நுழைந்தது? என்ற கேள்விகள் வட்டமடித்தன...

மகாசபை

மகாசபை

இவ்வாறு சாவர்க்கர் பேச்சு எழும்போதெல்லாம், அதைதொடர்ந்து விமர்சனங்களும் கிளம்புவது இயல்பாகிவிட்ட நிலையில், இப்போது இன்னொரு பரபரப்பு கிளம்பி உள்ளது.. இந்து மகாசபா முன்னாள் தலைவரான வீர சாவர்க்கரின் நினைவு தினத்தினை அக்கட்சியினர் அனுசரித்து வருகின்றனர்.. நேற்று சாவர்க்கரின் நினைவுதினம். உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள இந்து மகாசபா அலுவலகத்தில் நினைவுநாள் நிகழ்ச்சி நடந்தது. நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்கேற்றிருந்த அந்த நிகழ்வில், மத்திய அரசுக்கு இந்து மகாசபா சார்பில் ஒரு கடிதம் எழுதப்பட்டது..

உருவ பொம்மை

உருவ பொம்மை

அதில், ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்திக்கு பதிலாக வீர சாவர்க்கர் மற்றும் இதர சுதந்திர போராட்ட வீரர்களின் உருவங்களை பொறிக்க வேண்டும் என்று கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.. அதுமட்டுமல்ல, நாடாளுமன்ற கட்டிடத்துக்கு செல்லும் சாலைக்கு வீர சாவர்க்கர் பெயரை சூட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.. இந்து மகாசபாயினரின் இந்த கோரிக்கைக்குதான் கருத்துக்கள் சோஷியல் மீடியாவில் வெடித்து கிளம்பின. சவார்க்கரின் பெருமையை உயர்த்தி பிடிப்பதுடன், மகாத்மா காந்தியையும் சிறுமைப்படுத்துவதை இவர்கள் வழக்கமாக கொண்டுள்ளதாக தெரிகிறது.. 4 வருடங்களுக்கு முன்பு, அதாவது, மகாத்மா காந்தியின் 71வது நினைவு தினத்தின்போது, தேசமே அவருக்கான அஞ்சலியை செலுத்தி கொண்டிருந்தது..

பொம்மை துப்பாக்கி

பொம்மை துப்பாக்கி

அப்போது, உத்தரப்பிரதேசம் அலிகரை சேர்ந்த இந்து மகாசபா அமைப்பினர் மட்டும் இதனை இழிவாக செயல்படுத்தி காட்டினர்.. இந்து மகாசபா அமைப்பின் தேசிய செயலாளர் பூஜா ஷாகுன் பாண்டே என்ற பெண்மணி, காந்தியின் உருவ படம் முன்பு நின்று கொண்டு ஒரு துப்பாக்கியால் சுடுவது போல நடித்து காட்ட, அவருடன் இருந்த அந்த அமைப்பினர் கைதட்டி ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, காந்தியின் உருவ பொம்மையை தீ வைத்து எரித்திருந்தனர். இந்த வீடியோ அப்போது மிகப்பெரிய அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்த நிலையில், இப்போது இன்னொரு ரூபாய் நோட்டுக்கள் வழியே அடுத்த விவகாரத்தை கிளப்பிவிட்டுள்ளது இந்து மகாசபை..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+