“அறம் வெல்லும்” நெகிழ்ந்து போன விக்ரமன்.. வீட்டுக்கே வந்த ஆசிரியர்! பிக்பாஸில் சொன்னாரே.. இவர்தானா?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் மக்கள் ஆதரவை பெற்ற விக்ரமன் பள்ளியில் தனக்கு ஆதரவாக இருந்ததாக கூறிய ஆசிரியர் வெங்கடாசலத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
டெல்லி: கடந்த ஜனவரி மாதம் விஜய் டிவியில் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த விக்ரமன், பள்ளி காலத்தில் தனக்கு உதவியதாக கூறிய வெங்கடாசலம் என்ற ஆசிரியரை ட்விட்டரில் அறிமுகம் செய்து இருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பத்திரிகையாளரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளருமான விக்ரமன் கலந்துகொண்டு 2 வது பரிசை வென்றார்.
இதில் அம்பேத்கர், பெரியார், அண்ணா போன்ற பெரும் தலைவர்களின் முற்போக்கான கருத்துக்களை பேசிய விக்ரமன், சக போட்டியாளர்களுக்கு மரியாதை கொடுத்து விளையாடியதால் பெரும் ஆதரவை பெற்றார்.

முற்போக்கான கருத்துக்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிற்போக்கான கருத்துக்கள், உருவ கேலி, பாலின கேலி, தொழிலை கேலி செய்வது போன்று போட்டியாளர்கள் தரக்குறைவாக பேசினால் உடனுக்குடன் அவர் கண்டித்து வந்தார். குறிப்பிட்ட தரப்பினர், சமூகத்தினர் மீது யாராவது பிக்பாஸில் விமர்சித்தாலும் அதை விக்ரமன் முதல் ஆளாக தட்டிக்கேட்டு வந்தார்.

தொடர் கருத்துக்கள்
பெண்கள் என்றால் சமையல் வேலைதான் செய்ய வேண்டும், என்ன மகளாக இருந்தால் வெட்டுவேன், இந்த வயதில் இப்படிதான் பேச வேண்டும் என்று கூறிய ஜிபி முத்துவை கண்டித்தார். பிக்பாஸ் வெற்றியாளர் அஜீம் மற்ற போட்டியாளர்களை தரக்குறைவாக ஒருமையில் பேசியபோது, ஒரு பெண் போட்டியாளரை தள்ளியபோதும், பெண்களை, திருநங்கைகளை இழிவுபடுத்தும் வகையில் நடந்துகொண்டபோதும் அவரை விக்ரமன் கண்டித்தார் .

அறம் வெல்லும்
இதனால் விக்ரமனை கொண்டாடி தீர்த்த மக்கள், அவர் தெரிவித்த அறம் வெல்லும் என்ற வார்த்தையை டீ சர்டாக தயாரித்து அனுப்பியதுடன் பொங்கல் அன்று கோலத்தில் எழுதி ஆதரவளித்தார்கள். விக்ரமன் பிக்பாஸ் கோப்பையை வெல்வார் என்று ஒட்டுமொத்த மக்களும் எதிர்பார்த்த நிலையில், அஜீம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

திருமாவளவனுடன் சந்திப்பு
இதனை ஏற்கமுடியாமல் சமூக வலைதளங்களில் விஜய் டிவியை புறக்கணிக்க வேண்டும் என்றெல்லாம் ஹேஷ்டேக்குகளை மக்கள் டிரெண்ட் செய்து வந்தனர். யூடியூப் சேனல்களும் போட்டிப்போட்டுக் கொண்டு விக்ரமனை நேர்காணல் எடுத்தும், ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சிகளையும் நடத்தியும் வருகின்றன. போட்டி முடிந்த பிறகு தனக்கு ஆதரவளித்த திருமாவளவனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

சட்ட உதவி மையம்
இலவச சட்ட உதவி மையம் அமைப்பேன் என்று பிக்பாஸ் வீட்டிற்குள் தெரிவித்த விக்ரமன், பிக்பாஸ் போட்டியில் வெற்றிபெற்றால் அந்த பரிசுத் தொகை இதற்கு உதவும் என்றார். ஆனால், அதில் வெற்றிபெறாவிட்டாலும் வெளியில் வந்த பிறகு அந்த சட்ட உதவி மையத்தை அமைப்பதற்கான வேலையில் தீவிரமாக இறங்கி செயல்பட்டு வருகிறார்.

ஆசிரியர் வெங்கடாசலம்
அதற்கு அறம் வெல்லும் என்று பெயர் சூட்டவும் அவர் முடிவு செய்து இருக்கிறார். இந்த நிலையில் தனக்கு பள்ளியில் உறுதுணையாக இருந்த ஆசிரியர் வெங்கடாசலத்தை ட்விட்டரில் அறிமுகம் செய்துள்ளார் விக்ரமன். இவர் தனக்கு செய்த உதவிகளை பிக்பாஸ் வீட்டில் பலமுறை பேசியுள்ளார் விக்ரமன்.

வீடு தேடி வந்து ஆதரவு
இதுகுறித்து ட்விட்டரில் அவர் பதிவிட்டு உள்ளதாவது, "நான் பள்ளிக் கல்வியை தொடர்வதற்கு உந்துதலாயிருந்த என் இயற்பியல் ஆசிரியர் திரு.வெங்கடாசலம் அவர்கள் என் இல்லத்திற்கே வந்து நம் அறம்வெல்லும் அறக்கட்டளையில் இணைந்து பணியாற்ற வேண்டும் எனும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். பெருமிதமடைந்தேன். நன்றி தெரிவித்தேன்." என்று குறிப்பிட்டார்.
-
“துணை முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறேனா?” போட்டியிட மறுத்ததற்கு காரணம் இதுதான்! திருமாவளவன் விளக்கம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
3 எம்பிக்கள் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டி.. யாரெல்லாம் தெரியுமா? லிஸ்ட் இதோ.. பின்னணி -
திருமாவளவனை மீறி.. ஆளூர் ஷாநவாஸ் திமுகவுடன் நெருக்கம்.. "ஒன்இந்தியாவிடம்" குமுறிய சங்கத்தமிழன்! -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன்












Click it and Unblock the Notifications