இந்தியாவில் மிகப்பெரிய கொரோனா ஸ்பைக்.. 24 மணிநேரத்தில் 5611 பேருக்கு தொற்று.. ஷாக் தரும் தமிழகம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 5,611 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாவும், இதுதான் இந்தியாவில் ஒற்றை நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய தொற்று எண்ணிக்கையாகும்.

Recommended Video

    Oxford coronavirus vaccine | Oxford பல்கலைக்கழகம் உருவாக்கிய தடுப்பூசியில் பின்னடைவு

    இந்தியாவில் மே 20ம் தேதி காலை 8 மணி நிலவரப்படி கொரோனா வைரஸ் புள்ளி விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி இது வரை இல்லாத அளவாக ஒரே நாளில் 5,611 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது.

    30,03 பேர் இதுவரை இந்தியாவில் கொரோனாவல் இறந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக இந்தியாவில் கொரோனாவால் 1,06,750 பேர் பாதிக்கப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

    140 பேர் மரணம்

    140 பேர் மரணம்

    கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 140 பேர் மரணம் அடைந்துள்ளனர். நாட்டின் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டிய ஒரு நாள் கழித்து இப்படி ஒரு புதிய உச்சம் வந்துள்ளது, .நாட்டில் கொரோனா நோயை எதிர்த்துப் போராடி குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை - இன்று காலை 39.62 சதவீதமாக இருந்தது. இதுவரை இந்தியாவில் 42,298 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    தமிழகம் 2வது இடம்

    தமிழகம் 2வது இடம்

    மகாராஷ்டிராவுக்குப் பிறகு அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் தொற்று உள்ள மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது. தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை 688 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது., மொத்தம் 12,448 பேர் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை வரை, குஜராத்தில் இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் தொற்று கேஸ்கள் இருந்தன. குஜராத்தில் இப்போது 12,140 கேஸ்கள் உள்ளன.

    யாரும் வெளிய வரவேண்டாம்

    யாரும் வெளிய வரவேண்டாம்

    மகாராஷ்டிராவில், மும்பை, புனே மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிவப்பு மண்டலங்களில் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே வலியுறுத்தி உள்ளார், அந்த மாநிலத்தில் இதுவரை 37,136 தொற்றுகள் பதிவாகியுள்ளன. லாக்டவுனில் எந்தவிதமான தளர்வுகளையும் மும்பை காணாத நிலையில் அங்கு இதவரை 21,335 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    புலம் பெயர் தொழிலாளர்கள்

    புலம் பெயர் தொழிலாளர்கள்

    இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தில், சொந்த ஊர் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடையே கொரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது. மாநில தலைநகரான லக்னோவிலிருந்து 190 கி.மீ தூரத்தில் உ.பி.யின் பஸ்தி மாவட்டத்தில் வீடு திரும்பிய ஐம்பது பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் 4,926 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    பாஸ் ரத்து

    பாஸ் ரத்து

    மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் இருந்து நாடு திரும்ப விரும்பும் மக்களுக்கு பாஸ் வழங்குவதை தெலுங்கானா நிறுத்தியுள்ளது. கொரோனா வைரஸுக்கு சாதகமான ஒரு புதிய வகை சோதனையாக புலம்பெயர்ந்தோர் உருவாகி வருகிறார்கள் என்பது தெலுங்கானா அரசின் கருத்தாக உள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் இதுவரை 1,634 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அசாமில் கூட COVID-19 தொற்று அதிக எண்ணிக்கையில் அதிகரித்துள்ளது. அசாமில் தற்போது மொத்தம் 142 ஆக பாதிப்பு உள்ளன, அவற்றில் 25 கடந்த 24 மணி நேரத்தில் பதிவானதாகும்.

    200 ரயில்கள் இயக்கம்

    200 ரயில்கள் இயக்கம்

    ஜூன் 1 முதல் 200 க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில் சேவை இயக்கப்படும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் லாக்டவுனை மூன்றாவது முறையாக அரசாங்கம் நீட்டித்த சில நாட்களில் இந்த முடிவு வந்துள்ளது, ஆனால் பஸ் சேவை மற்றும் பிற பொது போக்குவரத்திற்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+