Bihar Exit Poll: மயிரிழையில் முந்தும் NDA.. ஆனால் விருப்பமான முதல்வர் தேஜஸ்வி! Axis My India ரிசல்ட்
டெல்லி: பீகார் சட்டசபை தேர்தலில் கடுமையான போட்டி நிலவும் என்று ஆக்சிஸ் மை இந்தியா எக்சிட் போல் கணித்துள்ளது. பீகாரில் என்டிஏ கூட்டணி 43% வாக்குகளைப் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் - ஆர்ஜேடி கூட்டணி 41% சதவீத வாக்குகளைப் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
243 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட பீகார் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளுங்கட்சியான நிதிஷ் குமார் - பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ) மற்றும் காங்கிரஸ் - தேஜஸ்வி யாதவின் மகாகத்பந்தன் கூட்டணி மற்றும் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் என மும்முனைப் போட்டி நிலவியது.

நேற்று மாலை 6 மணியுடன் பீகார் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில், அதனை தொடர்ந்து எக்சிட் போல் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் இந்தியா டுடே - மை ஆக்சிஸ் கருத்துக்கணிப்பு முடிவில் மகாபந்தன் (MGB) கூட்டணியே வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கூறியுள்ளது.
243 சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கிய 2,154 கிராமங்கள் மற்றும் நகரங்களில் 42,031 வாக்காளர்களிடம் இந்தக் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. பீகார் சட்டசபை தேர்தலில் என்டிஏ கூட்டணி 43% வாக்குகளைப் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் - ஆர்ஜேடி கூட்டணி 41% சதவீத வாக்குகளைப் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி கூட்டணியை விட 2% வாக்குகள் மட்டுமே முன்னிலையில் உள்ளது ஆளும் கூட்டணி.
மேலும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவரும் மகாகட்பந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ், தற்போதைய முதல்வர் நிதிஷ் குமாரை விட முதல்வர் வேட்பாளராக மிகவும் விரும்பப்படுகிறார் என்றும் ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்பு சுட்டிக்காட்டுகிறது.
ஆக்சிஸ் மை இந்தியா எக்சிட் போல் கணிப்பின்படி, 34% பேர் தேஜஸ்வி யாதவை தங்களுக்கு விருப்பமான முதல்வராகவும், 22% பேர் நிதிஷ் குமார் என்றும் குறிப்பிட்டுள்ளனர். பாஜகவின் சாம்ராட் சவுத்ரிக்கு 10% ஆதரவும், எல்ஜேபி (ராம் விலாஸ்) தலைவர் சிராக் பாஸ்வானுக்கு 5% ஆதரவும் கிடைத்துள்ளது. ஜன் சுராஜ் கட்சி தலைவரான பிரசாந்த் கிஷோரை 4% பேர் தேர்வு செய்துள்ளனர்.
முறையான பள்ளிப் படிப்பு இல்லாதவர்களில், NDA மற்றும் MGB கூட்டணிகளுக்கான ஆதரவு முறையே 43% மற்றும் 42% என கிட்டத்தட்ட சமமாக உள்ளன. படித்தவர்களிடையே NDA வின் ஆதரவு சற்று அதிகமாக உள்ளது. பட்டதாரிகளில் 44% பேர் என்.டி.ஏ கூட்டணியையும், 41% பேர் எம்.ஜி.பி கூட்டணியையும் ஆதரிக்கின்றனர். முதுகலை பட்டதாரிகளில் 41% பேர் என்.டி.ஏ கூட்டணியை ஆதரிக்கின்றனர், MGB க்கு 42% ஆதரவு உள்ளது.
பீகார் தேர்தலில் பெண்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்தனர். ஆக்சிஸ் - மை இந்தியா கணக்கெடுப்பு, 45% பெண் வாக்காளர்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளித்ததாகவும், 40% பேர் மகாகத்பந்தன் கூட்டணிக்கும், 3% பேர் ஜன் சுராஜ் கட்சிக்கும் வாக்களித்ததாகவும் தெரிவித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications