கை காட்டினாலே நிற்குது.. பீகாரில் நடுவழியில் ரயிலை நிறுத்தி குடும்பத்தினரை ஏற்றிய நபர்! பயணிகள் ஷாக்

Subscribe to Oneindia Tamil

பாட்னா: ஸ்டாப்பில் நிற்காமல் தள்ளி நின்று நிறுத்த சொன்னால், பேருந்துகள் கூட நிற்காமல் போய்விடும். ஆனால், பீகாரில் ரயில் ஒன்றை கிராசிங்கில் நின்று பேருந்தை போல கை காட்டி மறித்து ஒரு குடும்பம் ஏறி சென்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

எங்கள் ஊரில் பேருந்தை கூட இப்படி நிறுத்த முடியாது.. ரயிலை கை காட்டி நிறுத்துகிறார்களா? என்று வியப்புடன் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். பீகாரில் நடைபெற்ற இந்த வினோத சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

Bihar Man stop passenger train in unauthorised area for boarding his family - Railways begins probe

கையை காட்டி ரயிலை மறித்தார்

ரயில்கள் செல்லும் பொழுது கிராசிங்கில் இரு பக்கமும் வாகனங்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டு கேட் போடப்பட்டு இருக்கும். ரயில்வே கேட் கீப்பர் ரயில் சென்ற பிறகே கேட்டை ஒபன் செய்வது வழக்கம். சில நேரங்களில் ரயில்கள் வரும் முன்பாக கிராசிங் கேட்டிற்குள் புகுந்து இருபக்கமும் மாறி செல்லும் நிகழ்வுகளை பார்த்து இருக்கிறோம். இதே போலத்தான் பீகாரில் உள்ள ரயில்வே கிராசிங்கில் ஒருவர் தனது குடும்பத்தினரை அழைத்து கொண்டு கேட்டிற்குள் புகுந்தார்.

மறுபக்கம் செல்வதற்குதான் இப்படி கேட்டை கடந்து செல்கிறார் போல நினைத்த அங்கிருந்தவர்களுக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. ஏனெனில் ஏதோ பேருந்துக்கு காத்திருப்பது போல ஓரமாக நின்ற அந்த நபர், ரயில் வருவதற்கு சில வினாடிகளுக்கு முன்பாக யாருக்கோ போன் கால் செய்தார். ரயிலை பார்த்ததும் பேருந்தை நிறுத்துவது போல கையால் சிக்னல் காட்டினர்.

வைரலாக பரவிய வீடியோ

ரயிலும் அவருக்காகவே வந்ததுபோல அங்கு நின்று அந்த குடும்பத்தினரை ஏற்றி சென்றது. இதை வியந்து பார்த்த வாகன ஓட்டிகளில் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், சம்பவம் குறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் பலரும் வலியுறுத்தி வருகிறார்கள்.

ரயில்வே கவனத்திற்கும் இந்த வீடியோ சென்ற நிலையில், ரயில்வே சேவா தனது எக்ஸ் தளத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளது. ரயில்வே தரப்பில், "சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய விசாரணைக்கு பிறகு ரயிலை நிறுத்திய லோகோ பைலட் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்களும் பதிவிட்டு வருகிறார்கள்.

எவ்வளவு பெரிய விதி மீறல்

நெட்டிசன்கள் சிலர் கூறுகையில், "ரயிலின் லோகோ பைலட் அந்த நபருக்கு தெரிந்தவராக இருந்து இருக்க வேண்டும். அதனால் அவருக்கு போன் செய்துவிட்டு கிராசிங்கில் வண்டியை நிறுத்த சொல்லி ஏறியிருக்கலாம். ஒரு வேளை இது தான் உண்மையாக இருந்தால் இது எவ்வளவு பெரிய விதி மீறல். உடனடியாக அந்த லோகோ பைலட்டை பணியில் இருந்து நீக்க வேண்டும். கேட் கீப்பர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளனர்.

சில நெட்டிசன்களோ ஜாலியாகாவும் பதிவிட்டு இருக்கிறார்கள். பேருந்தை கூட இந்த காலத்தில் இப்படி நினைத்த இடத்தில் நிறுத்த முடியாது. ரயிலையே நிறுத்திவிட்டு போகிறார். சமூகம் பெரிய இடம் தான்போல.. என கிண்டலாக பதிவிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+