அடித்து தூக்க்கிய என்டிஏ..  பீகாரில் பாஜக ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி உறுதி.. 200ஐ தாண்டிய வெற்றி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பீகார் சட்டசபை தேர்தல் கடந்த 6 மற்றும் 11-ந் தேதிகளில் இரு கட்டங்களாக நடந்து முடிந்தது. மொத்தம் 67.13 சதவீத வாக்குகள் பதிவாகின. இதுதான் பீகாரில் அதிகபட்ச வாக்குப்பதிவு என்று கூறப்பட்டது. வாக்கு எண்ணிக்கை இன்று விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காலை நிலவரப்படி பாஜக ஐக்கிய ஜனதா தளம் அடங்கிய என்டிஏ கூட்டணி 200க்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி மற்றும் முன்னிலையில் உள்ளது.

பீகார் சட்டசபை தேர்தல் கடந்த 6 மற்றும் 11-ந் தேதிகளில் இரு கட்டங்களாக நடந்து முடிந்தது. வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 'விவிபாட்' எனப்படும் ஒப்புகை சீட்டு எந்திரங்களும் 'சீல்' வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு நிறைந்த பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டன. மொத்தம் 38 மாவட்டங்களில் 46 வாக்கு எண்ணிக்கை மையங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பா.ஜனதா கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், இதெல்லாம் நம்ப முடியாதது, மகா கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்று அக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் கூறியிருந்தார்.

Bihar Poll Results 2025 Details of constituencies and candidates where BJP is leading in Bihar

இந்நிலையில் பீகாரில், தொடர்ந்து 5-வது தடவையாக நிதிஷ்குமார் ஆட்சியை பிடிப்பாரா? அல்லது எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சியை பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு காலையிலேயே எழுந்தது . ஆனால் கருத்துக்கணிப்புகளில் கூறப்பட்டது போல, பீகாரில் மீண்டும் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் அடங்கிய என்டிஏ கூட்டணி தான் அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது.

பாரதிய ஜனதா கட்சி (BJP) 85 4 (முன்னிலை) மொத்தம் 89
ஐக்கிய ஜனதா தளம் (JD(U)) 75 1 (முன்னிலை) மொத்தம் 76
ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) 28 0 மொத்தம் 28
இந்திய தேசிய காங்கிரஸ் (INC) 12
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (CPIML) 4
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) 3 0 3
அனைத்திந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) 3
பிற கட்சிகள் (Others) 15 3 (முன்னிலை) மொத்தம் 18

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+