ஜெகன் மோகன் ரெட்டி எடுத்த முடிவு.. துணை ஜனாதிபதி தேர்தலில்.. பாஜக கூட்டணிக்கு ஆதரவு! என்ன காரணம்!
டெல்லி: துணை குடியரசுத் தலைவர் தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதில் பாஜக கூட்டணி சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணனும், "இந்தியா" கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டியும் போட்டியிடுகிறார்கள். இதற்கிடையே பாஜகவின் என்டிஏ கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணி என இரு கூட்டணிகளிலும் இல்லாத கட்சிகள் எந்த நிலைப்பாட்டை எடுக்கப் போகிறது என்பது குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
துணை குடியரசுத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜினாமா செய்தார். உடல்நிலையைக் காரணமாகச் சொல்லி மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெறும்போதே ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து துணை குடியரசுத் தலைவர் பதவி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு, தேர்தல் அறிவிக்கப்பட்டது.

துணை குடியரசுத் தலைவர் தேர்தல்
இந்தத் தேர்தலில் பாஜகவின் என்டிஏ கூட்டணி சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மறுபுறம் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் பல்வேறு பெயர்கள் ஆலோசிக்கப்பட்டன. இறுதியில் அரசியல் சார்பு இல்லாத ஆந்திராவைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
நாளை நடைபெறும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் என்டிஏ மற்றும் "இந்தியா" கூட்டணிக் கட்சிகள் தங்கள் கூட்டணி வேட்பாளருக்கே வாக்களிக்கும். அதேநேரம் என்டிஏ மற்றும் "இந்தியா" என இரு கூட்டணிகளிலும் இடம்பெறாத கட்சிகள் என்ன நிலைப்பாட்டை எடுக்கப் போகிறது என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
புறக்கணிக்கும் கட்சிகள்
இதில் ஒடிசாவில் முக்கிய கட்சியாக இருப்பது நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம். இந்தக் கட்சிக்கு லோக்சபாவில் எந்தவொரு சீட்டும் இல்லை. அதேநேரம் கடந்த 2024 தேர்தலில் ஒடிசாவில் ஆட்சியை இழந்த போதிலும், பிஜு ஜனதா தளம் கட்சிக்கு ராஜ்யசபாவில் 7 இடங்கள் உள்ளன. ஆனாலும், இந்தத் துணை குடியரசுத் தலைவர் தேர்தலை பிஜு ஜனதா தளம் புறக்கணிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல தெலுங்கானாவில் முக்கியமான பிராந்தியக் கட்சியாக இருப்பது பாரத் ராஷ்டிர சமிதி. கடந்த 2010ல் தொடங்கி 10 ஆண்டுகள் தெலுங்கானாவை ஆட்சி செய்த பிஆர்எஸ் கட்சி கடந்த 2023ல் நடந்த தேர்தலில் மிக மோசமான தோல்வியைத் தழுவியது. இருந்தபோதிலும் பிஆர்எஸ் கட்சிக்கு ராஜ்யசபாவில் 4 எம்பிக்கள் உள்ளனர். லோக்சபாவில் அவர்களுக்கு எம்பி இல்லை. பிஆர்எஸ் கட்சியும் துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணிக்கும் எனக் கூறப்படுகிறது.
என்ன காரணம்!
ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணி என இரண்டு கூட்டணியிலும் தாங்கள் இல்லை என்பதைக் காட்டும் வகையிலேயே இந்த இரு கட்சிகளும் துணை ஜனாதிபதி தேர்தலைப் புறக்கணிக்கும் முடிவை எடுத்துள்ளன.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்
அதேநேரம் எந்தவொரு கூட்டணியிலும் இடம்பெறாத மற்றொரு கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பாஜக கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதை அக்கட்சியின் எம்.பி. அயோத்யா ராமி ரெட்டி உறுதி செய்தார். அதேநேரம் இது முழுக்க முழுக்க சர்ப்ரைஸ் முடிவு எனச் சொல்ல முடியாது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கடந்த காலங்களிலும் கூட்டணியில் இல்லை என்றாலும் பாஜக ஆதரவு நிலைப்பாட்டையே பல முறை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய சூழலில் சி.பி. ராதாகிருஷ்ணன் தான் சுதர்சன் ரெட்டியை விட முன்னிலையில் உள்ளார். ராதாகிருஷ்ணனுக்கு 439 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது. அதே சமயம், இந்தியக் கூட்டணி வேட்பாளருக்கு 324 எம்.பி.க்களின் ஆதரவு மட்டுமே உள்ளது.
-
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா?












Click it and Unblock the Notifications