நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது என்னை பேச வேண்டாம் என பாஜக கூறியது: மணிப்பூர் எம்.பி பரபர
டெல்லி: நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது மணிப்பூர் விவகாரம் குறித்து பேச வேண்டாம் என பாஜக எம்.பிக்கள் தன்னிடம் வலியுறுத்தியதாக அம்மாநிலத்தை சேர்ந்த எம்.பி தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் 'மெய்தி' இன மக்கள் பெரும்பான்மையாக வசித்து வருகிறார்கள். இவர்கள் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து அளிக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதற்கு குக்கி இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக கடந்த மே 3-ந் தேதி, மணிப்பூரில் பழங்குடியின மக்கள் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. 3 மாதங்களை கடந்தும் கலவரம் இன்னும் ஓயவில்லை.

இதனிடையே மணிப்பூரில் குகி பழங்குடி இனத்தை சேர்ந்த 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் எதிரொலித்ததோடு, மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் நம்பிக்கையில்லா தீர்மானமும் கொண்டுவரப்பட்டது.
நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி பதிலளிக்க வைக்கும் வகையில் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்ததாக எதிர்க்கட்சிகளின் " இந்தியா" கூட்டணி தெரிவித்தது. எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் கடந்த 8 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 10 ஆம் தேதி வரை தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. 10 ஆம் தேதி பிரதமர் மோடி பதிலளித்து பேசினார்.
இந்த விவாதத்தின் பேசிய எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து பேசின. இதனிடையே, நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தின் போது தன்னை பேசக் கூடாது என்று பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சி எம்.பிக்கள் கேட்டுக்கொண்டதாக மணிப்பூரை சேர்ந்த எம்.பி லோர்ஹோ எஸ். ஃபோஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தி இந்து ஆங்கில நாளிதழுக்கு நாகா மக்கள் முன்னணி (NPF) எம்.பி லோர்ஹோ எஸ். ஃபோஸ் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் நான் பேச விரும்பினேன்.ஆனால், நான் பேச வேண்டாம் என்று பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சி எம்.பிக்கள் தனிப்பட்ட முறையில் என்னிடம் பேச என கேட்டுக்கொண்டனர். குறிப்பாக பாஜக இதை வலியுறுத்தியது. உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூர் விவகாரம் குறித்து நிறைய பேச இருப்பதாகவும் அதனால், நான் பேச வேண்டாம் என்றும் பாஜக எம்.பிக்கள் அறிவுறுத்தினார்கள்.
நான் சபாநாயகரிடம் இது குறித்து எதுவும் கேட்கவில்லை. ஏனெனில், நான் இதை கோரினாலும் எனக்கு வாய்ப்பு மறுக்கப்படும் என்று அறிந்து இருந்தேன். மணிப்பூரை சேர்ந்த மற்றொரு எம்.பியுமான பாஜகவை சேர்ந்த ஆர்.கே ரஞ்சன் சிங்கிடம் இவ்விவகாரம் குறித்து நான் கேட்டேன். அவரிடமும் பேச வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது" என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications