அன்னா ஹசாரே போராட்டம்.. பாஜக, ஆர்எஸ்எஸ்தான் மூளையாக செயல்பட்டது.. பிரஷாந்த் பூஷண் பரபரப்பு!
டெல்லி: டெல்லியில் ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே முன்னெடுத்த போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த பிரஷாந்த் பூஷன் தற்போது அந்த போராட்டத்திற்கு எதிராக அதிர்ச்சி தரும் விவரங்களை தெரிவித்து இருக்கிறார். அன்னா ஹசாரே போராட்டமே பாஜக/ ஆர்எஸ்எஸ் மூலம் நடத்தப்பட்ட போராட்டம்தான் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
2011ல் டெல்லியில் ''ஊழலுக்கு எதிரான இந்தியா (India Against Corruption -IAC)'' என்ற போராட்டம் அன்னா ஹசாரே தலைமையில் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் பல்வேறு ஊழல்களை எதிர்க்கும் வகையில் இந்த போராட்டம் முன்னெடுப்பட்டது.
அன்னா ஹசாரே முன்னெடுத்த இந்த போராட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால், பிரஷாந்த் பூஷண், மணீஷ் சிசோடியா, யோகேந்திர யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர். ஊழலுக்கு எதிரான இந்தியா முன்னெடுப்பை உருவாக்கியதில் இவர்கள்தான் மூளையாக செயல்பட்டனர்.

காங்கிரஸ் தோல்வி
அதன்பின் 2014 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோற்க இந்த போராட்டம் முக்கிய காரணமாக இருந்தது. அதோடு ஆம் ஆத்மி கட்சி உருவாகவும் இந்த போராட்டம் மூளையாக இருந்தது. ஆம் ஆத்மி கட்சியை அப்போது உருவாக்கியதில் மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷணும் முக்கிய பங்கு வகித்தார். அதன்பின் கருத்து வேறுபாடு காரணமாக பிரஷாந்த் பூஷண் 2015ல் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து வெளியேறினார்.

என்ன சொல்கிறார்
இந்த நிலையில் அன்னா ஹசாரே முன்னெடுத்த போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த பிரஷாந்த் பூஷன் தற்போது அந்த போராட்டத்திற்கு எதிராக அதிர்ச்சி தரும் விவரங்களை தெரிவித்து இருக்கிறார். அன்னா ஹசாரே போராட்டமே பாஜக/ ஆர்எஸ்எஸ் மூலம் நடத்தப்பட்ட போராட்டம்தான் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார். அதன்படி, இந்த போராட்டத்திற்கு பின் பாஜக தூண்டுதலாக இருந்து வேலை பார்த்தது.

பாஜக இருந்தது
காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் வகையில் பாஜக, ஆர்எஸ்எஸ் இரண்டும் இணைந்து போட்ட திட்டம் இது. அப்போது எனக்கு இது தெரியாமல் போய்விட்டது, பாஜகவின் பின்னணியை கவனிக்காமல் போய்விட்டேன். எனக்கு இப்போதும் வருத்தம் தர கூடிய விஷயம் இதுதான். பாஜகவின் செயலை நான் கவனிக்கவில்லை. யோகேந்திர யாதாவிற்கும் இது தெரியாது.

யாருக்கும் தெரியாது
அன்னா ஹசாரேவிற்கும் இது தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இது தெரியும். பாஜகவின் பின்னணி அவருக்கு தெரியும். நான் அரவிந்த் கெஜ்ரிவால் குறித்து மிகவும் தாமதமாகவே புரிந்து கொண்டேன். அவரை நான் புரிந்து கொள்ளும் முன்பே, அவர் பெரிய அளவில் வளர்ந்து ஒரு மான்ஸ்டர் போல மாறிவிட்டார். நானா காலம் தாழ்த்தி விட்டேன். இந்த போராட்டத்தால் பாஜகவும், கெஜ்ரிவாலும் மட்டுமே பயன் அடைந்தனர், என்று பிரஷாந்த் பூஷண் குறிப்பிட்டுள்ளார்.
-
ஏன் பெட்ரோல் விலை 10 நாளில் ரூ.7 உயர்வு? நஷ்டத்தை சொல்லுவீங்களா? மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர் -
விஜய் நிகழ்த்திய தமிழ்நாட்டு மாடல்.. கரப்பான் பூச்சி பார்ட்டியால் நிகழ்ந்தால் பாஜகவிற்கு சிக்கல் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
குடிசைகள் இல்லாத நகரமாக மாறும் மும்பை.. 2030 தான் டார்கெட்! ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications