கர்நாடகா: மோடி, ராஜ்நாத்சிங், அமித்ஷா..பாஜகவின் 25 நட்சத்திர பேச்சாளர்கள்- அண்ணாமலை பெயரும் இருக்கு!
டெல்லி: கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான 25 நட்சத்திர பேச்சாளர்களை பாஜக அறிவித்துள்ளது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அமித்ஷா உள்ளிட்டோர் இதில் இடம்பெற்றுள்ளனர். தமிழ்நாடு பாஜக தலைவரும் கர்நாடகா மாநில இணை பொறுப்பாளருமான அண்ணாமலையும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

கர்நாடகாவில் 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 10-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மே 13-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
கர்நாடகாவில் பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆளும் பாஜக வெளியிட்ட வேட்பாளர்கள் பட்டியல் அக்கட்சிக்கு பெரும் பிரளயத்தை ஏற்படுத்திவிட்டது. இத்தேர்தலில் போட்டியிட சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்.எல்.ஏக்கள், ஆதரவாளர்களுடன் பாஜகவுக்கு குட்பை சொல்லிவிட்டு ஜேடிஎஸ், காங்கிரஸில் இணைந்து வருகின்றனர். கர்நாடகா முன்னாள் முதல்வரும் பாஜக மாநில முன்னாள் தலைவருமான ஜெகதீச் ஷெட்டரும் காங்கிரஸில் இணைந்துள்ளார்.
கர்நாடகாவில் ஏற்கனவே பல்வேறு நலத் திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி தொடர்ந்து பயணம் மேற்கொண்டு வருகிறார். 4 மாதங்களில் கர்நாடகாவுக்கு மட்டும் 8 முறை பயணம் மேற்கொண்டார் பிரதமர் மோடி. தற்போதைய அதிருப்தியை சமாளிக்கும் வகையில் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் தொடர்ந்து கர்நாடகாவில் தீவிர பிரசாரம் செய்ய உள்ளனர்.
இந்த நிலையில் பாஜக மேலிடமானது அக்கட்சியின் 25 நட்சத்திர பேச்சாளர்களை அறிவித்துள்ளது. பிரதமர் மோடி, பாஜக தலைவர் நட்டா, மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், அமித்ஷா, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
இப்பட்டியலில் தமிழ்நாடு பாஜக தலைவரும் கர்நாடக தேர்தலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருபவருமான அண்ணாமலை பெயரும் இடம்பெற்றுள்ளது. கர்நாடகா தேர்தலில் பணப் பட்டுவாடா செய்வதற்காக ஹெலிகாப்டர் அண்ணாமலை பணம் எடுத்து வந்தார் என பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. முன்னதாக வேட்பாளர்கள் தேர்வு விவகாரத்திலும் அண்ணாமலை மீது அதிருப்தி இருப்பதாக கூறப்பட்டது. இதனாலேயே தமிழ்நாட்டில் பிரதமர் மோடி பயணம் மேற்கொண்ட போது கூட அண்ணாமலை, டெல்லியிலேயே தங்க வைக்கப்பட்டிருந்தார் எனவும் கூறப்பட்டது. அதேபோல தமிழ்நாட்டில் அதிமுகவுடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார் அண்ணாமலை. இந்த விவகாரத்திலும் பாஜக மேலிடம் அவர் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது அண்ணாமலையின் பெயரும் 25 நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications