மீண்டும் ம.பி.யில் இருந்து ராஜ்யசபா எம்பியாகிறார் மத்திய அமைச்சர் எல்.முருகன்- நீலகிரியில் போட்டி இல்லை!
டெல்லி: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மீண்டும் மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டெல்லி பாஜக மேலிடம் வெளியிட்டுள்ளது. இதனையடுத்து நீலகிரி லோக்சபா தொகுதியில் எல்.முருகன் போட்டியிடமாட்டார் என்பது உறுதியாகி உள்ளது.
தமிழ்நாடு பாஜக தலைவராக பதவி வகித்தவர் எல்.முருகன். 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தம்மை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் கயல்விழியிடம் 1,393 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார் எல். முருகன். தமிழ்நாடு அமைச்சராக தற்போது பதவி வகிக்கிறார் எல்.முருகனை வீழ்த்திய திமுகவின் கயல்விழி.

இதனைத் தொடர்ந்து 2021-ம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக எல்.முருகன் தேர்வு செய்யப்பட்டார். ராஜ்யசபா எம்பியான எல்.முருகன், பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் மத்திய இணை அமைச்சரானார். மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சராக இருந்து வருகிறார் எல்.முருகன்.

2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டின் நீலகிரி லோக்சபா தொகுதியில் எல்.முருகன் போட்டியிடுவார் என்பது சில ஆண்டுகளாக உறுதியாக கூறப்பட்டு வந்தது. மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரும் நீலகிரி தொகுதியில் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்தனர்; பல்வேறு போராட்டங்களை நடத்தினர். நீலகிரி லோக்சபா தொகுதியில் திமுக மூத்த தலைவரும் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தற்போது எம்பியாக இருந்து வருகிறார். பாஜகவை மிக கடுமையாக கொள்கையாக விமர்சித்து வருகிறவர் ஆ.ராசா. நீலகிரி தொகுதியில் ஆ.ராசா மீண்டும் போட்டியிடவே வாய்ப்புகள் அதிகம்.
இதனால் ஆ.ராசாவுக்கு கடும் போட்டியை உருவாக்கவே எல்.முருகனை களத்தில் நிறுத்த இத்தனை முயற்சிகளையும் பாஜக மேற்கொண்டு வருவதாகவும் கூறப்பட்டு வந்தது.
தற்போது நாட்டின் பல மாநிலங்களில் ராஜ்யசபா தேர்தல் நடைபெறுகிறது. மத்திய இணை அமைச்சர் எல். முருகனின் ராஜ்யசபா எம்பி பதவி காலம் வரும் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகிறது. லோக்சபா தேர்தலில் எல்.முருகன் போட்டியிடுவதால் எல்.முருகன் குறித்த விவாதங்கள் எதுவும் உருவாகவில்லை. இந்த நிலையில் இன்று டெல்லி பாஜக மேலிடம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், மத்திய பிரதேசத்தில் இருந்து எல்.முருகன் மீண்டும் ராஜ்யசபா எம்பியாக போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நீலகிரி லோக்சபா தொகுதியில் எல்.முருகன் மீண்டும் போட்டியிடமாட்டார் என்பது உறுதியாகி இருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications