தமிழ்நாடு உட்பட 29 மாநில தலைவர்களை தேர்வு செய்வதில் பாஜக தீவிரம்- தமிழக பொறுப்பாளராக கிஷன் ரெட்டி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழ்நாடு உட்பட 29 மாநில தலைவர்களை தேர்வு செய்வதில் பாஜக மேலிடம் தீவிரம் காட்டி வருகிறது. தமிழ்நாடு பாஜக தலைவரைத் தேர்வு செய்வதற்கான பொறுப்பாளராக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை தொடர்ந்து நீடிப்பாரா? புதிய தலைவர் யாராக இருக்கும்? என்கிற விவாதங்கள் பாஜகவில் களை கட்டி இருக்கின்றன.

பாஜகவில் நாடு முழுவதும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதனையடுத்து அனைத்து மாநிலங்களிலும் பாஜகவின் புதிய தலைவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதே போல தேசிய கவுன்சில் உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

tamilnadu bjp

பாஜகவின் மாநில தலைவர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் பொறுப்பாளர்களை அக்கட்சி அறிவித்துள்ளது. தமிழ்நாட்டுக்கான பாஜக புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். அந்தமான் பாஜக தலைவரைத் தேர்வு செய்வதற்காக தமிழிசை சவுந்தரராஜன், தேர்தல் பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு பாஜக தலைவரான அண்ணாமலை தொடர்ந்து பதவியில் நீடிப்பாரா? அல்லது அவருக்குப் பதில் புதிய தலைவர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவாரா? என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

கர்நாடகா மாநில பாஜக தலைவராக எடியூரப்பா மகன் விஜயேந்திரா இருந்து வருகிறார். கர்நாடகா மாநில பாஜக தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் அறிவிக்கப்பட்டுள்ளார். கேரளா மாநில தேர்தல் பொறுப்பாளராக பிரகலாத் ஜோஷி, லட்சத்தீவுகள் தேர்தல் பொறுப்பாளராக பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளனர். மிசோரம் மாநில தேர்தல் பொறுப்பாளராக வானதி சீனிவாசன், நாகாலாந்து தேர்தல் பொறுப்பாளராக முரளிதரன் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+