கார்கேவிற்கு பதில் கூட சொல்ல முடியாதா? பாஜகவுக்கு சகிப்புத்தன்மையே இல்லை.. சிதம்பரம் அட்டாக்
டெல்லி: பிரதமர் மீதான விமர்சனங்களை பாஜக சகித்துக் கொள்ளாது என்பதை ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக பாஜக எம்.பிக்கள் அளித்துள்ள பதில் தெளிவுபடுத்துவதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்திற்கு கர்நாடக முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா உட்பட கர்நாடகத்தை சேர்ந்த 4 பாஜக எம்.பிக்கள் பதில் கடிதம் எழுதியிருந்தனர். இந்தக் கடிதத்தில் கார்கேவின் கடிதம் உண்மைக்கு மாறாகவும் வெற்று கோஷங்கள் மட்டுமே நிறைந்ததாகவும் உள்ளது.
வாட்ஸ் அப் பல்கலைக்கழகம்' தருகின்ற ஆதாரமற்ற செய்திகளை தருவது உங்களின் உயரிய பொறுப்புக்கு பொருந்தாத செயலாக உள்ளது" என்று விமர்சித்து பதில் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், இது குறித்து கருத்து தெர்வித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், பிரதமர் மீதான விமர்சனங்களை பாஜக சகித்துக் கொள்ளாது என்பதை ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக பாஜக எம்.பிக்கள் அளித்துள்ள பதில் தெளிவுபடுத்துவதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சிதம்பரம் கூறியிருப்பதாவது:- எந்த ஒரு விமர்சனத்தையும் சகித்துக் கொள்ள முடியாத காவிக் கட்சியாக பாஜக உள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் கேள்விகளுக்கு பதிலாக பாஜக எம்.பி.க்கள் எழுதிய பதில் கடிதம் ஆதாரப்பூர்வம் இல்லாததாகவும் தர்க்க வாதங்களுடனும் உள்ளது. பிரதமருக்கு கடிதம் எழுத மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் மல்லிகார்ஜூன கார்கேவிற்கு அனைத்து உரிமைகளும் உள்ளது.
ஜனநாயகம் உள்ள நாட்டில் பிரதமர் இதுபோன்ற கடிதத்திற்கு பதில் அளிக்க வேண்டும். ஆனால், பதில் கடிதம் எழுத வேண்டிய அளவிற்கு காங்கிரஸ் கடிதம் முக்கியத்துவம் வாய்ந்தது இல்லை என நமது நாட்டு ஜனநாயகத்தில் பிரதமர் கருதுகிறார். பிரதமருக்கு பதிலாக 4 எம்.பி.க்கள் பதில் கடிதம் எழுதுகிறார்கள். மல்லிகார்ஜூன கார்கே எழுதிய கடிதத்திற்கு சான்றாக தலைமை கணக்கு தணிக்கையாளர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் எழுதிய கடிதமே போதுமானது.

தென்மேற்கு ரயில்வே அதிகாரி கடந்த பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி எழுதிய கடிதத்தில் பாலசோரில் நடந்த விபத்துக்கள் பற்றி முன்கூட்டியே எச்சரித்து இருந்தது. ஆனால், அந்தக் கடிதம் கண்டு கொள்ளப்படாமல் இருந்துள்ளது. அந்த கடிதம் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என 4 பேரும் சொல்வார்களா? குற்றங்களை கண்டுபிடிப்பதற்கு தான் சிபிஐ உள்ளதே தவிர, ரயில் விபத்துக்களை துப்பு துலக்குவதற்கு அல்ல.
சிபிஐ மட்டும் இன்றி சட்டத்தை அமலாக்கும் எந்த ஒரு துறையாலும் தொழில் நுட்ப ரீதியான அமைப்பு ரீதியனா குறைபாடுகளை கண்டுபிடித்து யாரையும் பொறுப்பேற்க செய்ய முடியாது. அதுமட்டும் இன்றி ரயில்வே துறையில் உள்ள பாதுகாப்பு, பராமரிப்பு நடைமுறைகள் சம்பந்தமானவை பற்றிய தொழில்நுட்ப திறன் எதுவும் சிபிஐயிடம் கிடையாது" என்று குறிப்பிட்டுள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்!












Click it and Unblock the Notifications