Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உள்ளே புகுந்த ஆர்எஸ்எஸ்! மாற்றப்படும் பாஜக தலைவர்.. இவர்தான் புதிய தலைவர்? மொத்தமாக மாறும் காட்சிகள்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாஜகவின் தேசிய தலைவராக இருக்கும் ஜே பி நட்டா விரைவில் மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நட்டாவின் மாற்றம் கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் நேற்று இரவோடு இரவாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்துப் பேசியது, பாஜகவின் அடுத்த தேசியத் தலைவர் பதவி குறித்த ஊகங்களைத் தூண்டியுள்ளது. இந்த சந்திப்பு டெல்லி உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் 45 நிமிடங்கள் நடைபெற்றது.

2024 லோக்சபா தேர்தலில் தனிப்பட்ட வகையில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று தோல்வி அடைந்தது. என்டிஏ கூட்டணி ஆட்சி அமைந்து இருந்தாலும் பாஜக தனிப்பட்ட வகையில் மெஜாரிட்டியை இழந்து உள்ளது. இதற்கு தலைவராக நட்டாவின் செயல் சிறப்பாக இல்லை என்றும் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. இந்த நிலையில்தான் பாஜகவின் தேசிய தலைவராக இருக்கும் ஜே பி நட்டா மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நட்டாவின் மாற்றம் கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

bjp shivraj singh chauhan

பாஜகவின் புதிய தேசிய தலைவர்

பாஜகவின் புதிய தேசிய தலைவராக மத்திய பிரதேசம் முன்னாள் முதல்வர் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிவராஜ் சிங் சவுகான் மத்திய பிரதேசத்தின் மிகப்பெரிய தலைவர். இந்த நிலையில்தான் ஆர்எஸ்எஸ் அழுத்தம் காரணமாக தற்போது சிவராஜ் சிங் சவுகான் ஆக்டிவ் அரசியலுக்குள் மீண்டும் நுழைந்து உள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பாஜகவின் தேசிய தலைவராக பதவி வகித்து வரும் ஜே.பி.நட்டாவின் பதவிக் காலம் ஏற்கனவே நிறைவு அடைந்துவிட்டது. பாஜக கட்சி விதிப்படி, கட்சித் தலைவரின் பதவிக் காலம் மூன்று ஆண்டுகள் ஆகும். 2023 ஜனவரியில் நட்டாவின் பதவிக்காலம் முடிந்த நிலையில் மக்களவை தேர்தலையொட்டி மேலும் ஓராண்டுக்கு பதவி காலம் நீட்டிக்கப்பட்டது.

சிவராஜ் சிங் சவுகான்

இப்படிப்பட்ட நிலையில்தான் சிவராஜ் சிங் சவுகான், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்துப் பேசியது, பாஜக தேசியத் தலைவர் பதவிக்கான அடுத்த வேட்பாளர் குறித்த ஊகங்களைத் தூண்டியுள்ளது. இந்த சந்திப்பு டெல்லியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் 45 நிமிடங்கள் நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்தச் சந்திப்பு பல விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

மோகன் பகவத்துடனான இந்தச் சந்திப்பிற்குப் பிறகு, சவுகானின் பெயர் பாஜகவின் அடுத்த தேசியத் தலைவருக்கான பட்டியலில் முன்னிலையில் இருப்பதாகப் பேசப்படுகிறது. அவர் மத்தியப் பிரதேசத்தில் 16 ஆண்டுகளுக்கும் மேலாக முதலமைச்சராகப் பணியாற்றி, இந்தியாவில் நீண்ட காலம் முதலமைச்சராகப் பதவி வகித்தவர்களில் ஒருவராக உள்ளார். நரேந்திர மோடி குஜராத்தில் செய்தது போல, சவுகான் இந்தி பேசும் மாநிலங்களில் பாஜகவிற்கு ஒரு வலுவான தளத்தை உருவாக்கினார். பாஜகவின் பலமான முகங்களில் ஒருவராக பார்க்கப்படுகிறார்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதைத் தொடர்ந்து பாஜக தேசியத் தலைவர் தேர்தல் விரைவில் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்தியப் பிரதேசத்தில் கட்சியின் வளர்ச்சியை வடிவமைத்ததோடு, தேசிய அளவிலும் அதற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். உறுப்பினராக தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய அவர், பின்னர் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவில் இணைந்தார். 1990களின் முற்பகுதியில் முக்கிய அரசியல் களத்தில் நுழைந்து, விரைவாக உயர்ந்து, 2005-ல் மத்தியப் பிரதேச முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். இந்த நிலையில்தான் பாஜக தேசிய தலைவராக இவர் தேர்வாக முக்கிய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+