பணமழையில் பாஜக! தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் ரூ.212.05 கோடி வசூல் -பிற கட்சிகளுக்கு ரூ.46.38 கோடிதான்
டெல்லி: தேர்தல் அறக்கட்டளைகளின் மூலம் இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் ரூ.258.49 கோடி நன்கொடையை தனியார் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களிடம் வசூலித்து உள்ளன.
அரசியல் கட்சிகளுக்கு வரும் நிதியை முறைப்படுத்துவதற்காக 23 Electoral Trust அமைப்புகள் உருவாக்கப்பட்டன.
அந்த அறக்கட்டளையின் வாயிலாக தேர்தலுக்கான நிதிகளை கார்ப்பரேட் நிறுவனங்களும், தனி நபர்களும் கட்சிகளுக்கு வழங்கி வருகின்றனர்.

வெளிப்படைத்தன்மை
ஒவ்வொரு கட்சியும் எவ்வளவு நிதியை வசூலிக்கின்றனர் என்பதையும் தேர்தலுக்காக எவ்வளவு தொகை செலவு செய்யப்படுகிறது என்பதையும் வெளிப்படையாக அறிந்துகொள்வதற்காக இந்த அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. இந்த நிலையில் ஜனநாய சீர்திருத்தங்களுக்கான சங்கம் தேர்தல் அறக்கட்டளைகள் மூலமாக கட்சிகளுக்கு சேர்ந்த நிதி விபரங்களை வெளியிட்டுள்ளது.

ரூ.259.49 கோடி நன்கொடை வசூல்
23 தேர்தல் அறக்கட்டளைகளில் 16 அறக்கட்டளைகள் 2020-2021 நிதியாண்டில் கட்சிகள் வசூலித்த நிதி விபரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்து இருக்கின்றன. அவற்றில் 7 தேர்தல் அறக்கட்டளைகள் மட்டுமே நன்கொடை பெற்றதாக தெரிவித்துள்ளன. 2020-2021 நிதியாண்டில் இந்த 7 தேர்தல் அறக்கட்டளைகள் மூலமாக மொத்தம் ரூ.258.49 கோடி கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களால் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டு உள்ளன.

82.05% பாஜகவுக்கே
இவ்வாறு வசூலிக்கப்பட்டதில் ரூ.212.05 கோடி பாஜகவுக்கு மட்டுமே வந்த நன்கொடைகளாகும். அதாவது மொத்த நன்கொடையில் 82.05% பாஜகவுக்கு வழங்கப்பட்டவை. அடுத்ததாக பாஜக கூட்டணியில் இருக்கும் பீகாரின் ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளத்துக்கு ரூ.27 கோடி நன்கொடையாக தேர்தல் அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்டது. அதாவது மொத்த தொகையில் 10.45 சதவீதம். இதன் மூலம் 92.5% நன்கொடை பாஜக கூட்டணிக்கே சேர்ந்துள்ளது.

காங்கிரஸ், திமுகவுக்கு எவ்வளவு நன்கொடை
இவை அல்லாமல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி கட்சி, ஜோக் ஜனசக்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்ட், லோக்தான்ட்ரிக் ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் சேர்ந்த மொத்த நிதியே வெறும் ரூ.19.38 கோடிதான்.

தனிநபர்கள் நிதி
2020-21 நிதியாண்டில் 159 தனிநபர்கள் தேர்தல் அறக்கட்டளைகள் வாயிலாக அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கி இருக்கின்றன. இதில், ப்ரூடெண்ட் தேர்தல் அறக்கட்டளை மூலமாக 2 தனிநபர்கள் ரூ.3.50 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளனர். சிறு நன்கொடை தேர்தல் அறக்கட்டளை வாயிலாக 153 பேர் மொத்தம் ரூ.3.2 கோடியை நன்கொடையாக அளித்துள்ளனர்.
-
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி!












Click it and Unblock the Notifications