Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செம ட்விஸ்ட்.. கங்குலியை வைத்து பாஜக போடும் புது ஸ்கெட்ச்.. திரும்பும் மம்தா பானர்ஜி! ஆஹா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து நாடாளுமன்ற ராஜ்யசபாவில் காலியாகும் இடத்துக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், மாஜி பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியை பாஜக தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

நாடாளுமன்றத்தில் மொத்தம் 2 அவைகள் உள்ளன. லோக்சபா எனும் மக்களவையின் எம்பிக்களை மக்கள் நேரடியாக தேர்வு செய்கின்றனர். இந்த சபைக்கான எம்பிக்கள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு மக்கள் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர்.

BJP considering former Indian Captain Sourav Ganguly for Rajya Sabha seat in West Bengal

மாறாக ராஜ்யசபா எனும் மாநிலங்களை எம்பிக்களை ஒவ்வொரு மாநில எம்எல்ஏக்கள் ஓட்டளித்து தேர்வு செய்கின்றன. இந்த ராஜ்யசபா எம்பிக்கள் ஒவ்வொரு மாநில எம்எல்ஏக்கள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். ராஜ்யசபா எம்பிக்களின் பதவிக்காலம் என்பது 6 ஆண்டுகளாகும்.

இந்நிலையில் தான் வரும் வரும் ஆகஸ்ட் மாதம் 18 ம் தேதியுடன் 10 ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவுக்கு வர உள்ளது. இதில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்டவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்கள்.

இதன்மூலம் மேற்கு வங்க மாநிலத்தில் 6 சீட், குஜராத்தில் 3 சீட், கோவாவில் ஒரு சீட் என மொத்தம் 10 இடங்களுக்கு தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. ஜூலை 24ம் தேதி 10 ராஜ்யசபா இடங்களுக்கும் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தை பொறுத்தமட்டில் மொத்தம் 294 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 220 எம்எல்ஏக்களும், பாஜகவுக்கு 70 எம்எல்ஏக்களும், மற்றவர்களுக்கு 3 எம்எல்ஏக்களும் உள்ளனர். ஒரு இடம் காலியாக உள்ளது. மேற்கு வங்கத்தை பொறுத்தமட்டில் ராஜ்யசபா எம்பியாக ஒருவர் வெற்றி பெற 43 எம்எல்ஏக்களின் ஆதரவு வேண்டும்.

அதன்படி பார்த்தால் 5 ராஜ்யசபா எம்பிக்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கைப்பற்றிவிடும். பாஜகவுக்கு 70 எம்எல்ஏக்கள் உள்ளதால் ஒரு ராஜ்யசபா எம்பியை பெற வைக்க முடியும். அந்த வகையில் தான் பாஜக சவுரவ் கங்குலியை ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாஜக தீவிர ஆலோசனையும் செய்துள்ளது.

மேலும் மேற்குவங்க மாநில எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரியும், சவுரவ் கங்குலியை பரிந்துரைத்துள்ளார். மேலும் சவுரவ் கங்குலி மறுக்கும் பட்சத்தில் நடிகரும், முன்னாள் ராஜ்யசபா உறுப்பினர் மிதுன் சக்ரவர்த்தி, பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் அனிர்பன் கங்குலி, மற்றும் கிரேட்டர் கூச்பெஹார் மக்கள் சங்கத்தின் தலைவர் அனந்த் மகாராஜ் ஆகியோரில் ஒருவரை தேர்வு செய்யப்படலாம் என பரிந்துரைத்துள்ளது.

அதேபோல் மாநில பாஜக தலைவர் சுகந்தா மஜூம்டர் சார்பில், முன்னாள் ராஜ்யசபா உறுப்பினர்கள் ரூபா கங்குலி, ஸ்வபன் தாஸ்குப்தா, பாஜக செய்தி தொடர்பாளர் சாமிக் பட்டாச்சார்யா, முன்னாள் ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி மற்றும் அனந்த் மகாராஜ் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவர்களில் சவுரவ் கங்குலியின் பெயர் முன்னிலையில் உள்ளது.

ஒருவேளை சவுரவ் கங்குலி மறுக்கும் பட்சத்தில் மிதுன் சக்கரவர்த்தியை தேர்வு செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் சவுரவ் கங்குலியை ராஜ்யசபா எம்பியாக பாஜக மேலிடம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நீண்டகாலமாக சவுரவ் கங்குலியை பாஜகவில் சேர்க்க அமித்ஷா உள்ளிட்டவர்கள் முயன்று வருகின்றனர். குறிப்பாக அமித்ஷா, கங்குலியை தனியாக கூட சந்தித்தார். ஆனால் கங்குலி இன்னும் ஓகே சொல்லவில்லை. இந்நிலையில் தான் இந்த ராஜ்யசபா தேர்தல் மூலம் கங்குலியை பாஜகவில் இணைக்க தலைவர்கள் முயன்று வருகின்றனர்.

ஒருவேளை கங்குலி பாஜகவில் இணையும் பட்சத்தில் அது அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் தாமரை கட்சிக்கு கூடுதல் பலத்தை கொடுக்கலாம். இதனால் சவுரவ் கங்குலியை மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாக்க பாஜக மேலிடம் தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் கங்குலி தரப்பில் இன்னும் எந்த பதிலும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. ஏனென்றால் கங்குலி, மம்தா பானர்ஜி இடையே நல்ல உறவு உள்ளது. தற்போது பாஜக சார்பில் ராஜ்யசபா எம்பியானால் அந்த உறவில் விரிசல் ஏற்படும். இதனால் கங்குலி தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார். ஆனாலும் அரசியலில் எதுவும் நடக்காலம். இதனால் பாஜக மற்றும் கங்குலியின் நடவடிக்ககைளை மம்தா பானர்ஜி உன்னிப்பாக கவனித்து வருகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+