பாஜகவின் 5-வது வேட்பாளர் பட்டியல்- மேலும் 2 மத்திய அமைச்சர்கள், 37 சிட்டிங் எம்பிக்களுக்கு கல்தா!
டெல்லி: லோக்சபா தேர்தலுக்கான மேலும் 111 வேட்பாளர்களுடன் 5-வது வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. இந்தப் பட்டியலில் மேலும் 2 மத்திய அமைச்சர்களுக்கும் 37 சிட்டிங் எம்பிக்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் உத்தர கன்னடாவில் 6 முறை வென்ற மூத்த பாஜக தலைவர் அனந்தகுமார் ஹெக்டேவுக்கும் பாஜக மேலிடம் இம்முறை வாய்ப்பு தரவில்லை.
543 லோக்சபா தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ந் தேதி முதல் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். முதல் கட்ட தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் 102 தொகுதிகளில் வேட்பு மனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது.

5-வது வேட்பாளர் பட்டியல்: 18-வது லோக்சபா தேர்தலில் போட்டியிடும் மத்தியில் ஆளும் பாஜகவின் வேட்பாளர்கள் அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டுள்ளனர். பாஜகவின் 5-வது வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. மொத்தம் 111 வேட்பாளர்களுடன் இந்த 5-வது பட்டியல் வெளியிடப்பட்டது. பாஜக இதுவரை மொத்தம் 398 வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
37 சிட்டிங் எம்பிக்களுக்கு வாய்ப்பு மறுப்பு: பாஜகவின் 5-வது வேட்பாளர்கள் பட்டியலில் மத்திய அமைச்சர்கள் விகே சிங், அஸ்வினி குமார் செளபே ஆகியோர் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. மேலும் 37 சிட்டிங் எம்பிக்கள் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடவும் பாஜக வாய்ப்பு தரவில்லை. இவர்களில் 9 பேர் உ.பியை சேர்ந்தவர்கள்; குஜராத் 4, ஒடிஷா 4, பீகார் 3, கர்நாடகா 3, ஜார்க்கண்ட் 3 சிட்டிங் எம்பிக்களுக்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் 7, ஹரியானா 4, கர்நாடகா 4, கேரளா 4, ஒடிஷா 18, மகாராஷ்டிரா 3, ஜார்க்கண்ட் 3 வேட்பாளர்களும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
வருண் காந்திக்கு சீட் மறுப்பு: பாஜகவின் 5-வது வேட்பாளர் பட்டியலில் நேரு குடும்பத்தைச் சேர்ந்த வருண் காந்திக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு தரப்படவில்லை. பாஜகவை மிக கடுமையாக விமர்சித்து வந்தவர் வருண் காந்தி. ஆனால் வருண் காந்தியின் தாயார் மேனகா காந்தி, சுல்தான்பூரில் போட்டியிட மீண்டும் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. நடிகை கங்கனா ரணாவத், நடிகர் அருண் கோவில் ஆகியோருக்கும் பாஜக போட்டியிட வாய்ப்பு தந்துள்ளது.
கட்சி தாவியவர்களுக்கு சீட்: பல்வேறு கட்சிகளில் இருந்து தப்பி ஓடி பாஜகவில் அடைக்கலமானவர்களுக்கும் பாஜக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்துள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த தொழிலதிபர் நவீன் ஜிண்டால், வரபிரசாத் ராவ், சீதா சோரன், தபாஸ் ராய், கிரண் குமார் ரெட்டி உள்ளிட்டோருக்கு லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
கர்நாடகா: கர்நாடகாவில் உத்தர கன்னடா லோக்சபா தொகுதியில் 6 முறை வென்ற பாஜகவின் மூத்த தலைவர் அனந்தகுமார் ஹெக்டேவுக்கு மீண்டும் சீட் தரப்படவில்லை. தீவிர இந்துத்துவா ஆதரவாளரான அனந்தகுமார் ஹெக்டே பல்வேறு சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கியவர். கர்நாடகா சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் காங்கிரஸுக்கு ஓடிப் போய் பாஜகவுக்கே மீண்டும் திரும்பிய முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் பெல்காம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
பீகார்: பீகார் மாநிலத்தில் பாஜக போட்டியிடும் 17 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், பெகுசராய் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பாட்னா சாகிப் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மே.வங்கம்: மேற்கு வங்க மாநிலத்தில் 19 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்களை அறிவித்தது. இதில் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து பாஜகவில் இணைந்த அபிஜித் கங்கோபாத்யாயா தம்லுக் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஆந்திரா: ஆந்திரா மாநில பாஜக தலைவரான என்.டி.ராமாராவ் மகள் புரந்தரேஸ்வரி, ராஜமுந்திரி லோக்சபா தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆந்திரா முன்னாள் முதல்வர் கிரண்குமார் ரெட்டி ராஜம்பேட் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications