Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜகவுக்கு உள்ளுக்குள் உதறலைத் தருகிறதா 2019 தேர்தலில் சொற்ப வித்தியாசத்தில் ஜெயித்த 40 தொகுதிகள்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ந் தேதி நடைபெறும் நிலையில் எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள்? பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றுமா? இந்தியா கூட்டணி வெல்லும் சாத்தியம் இருக்கிறதா? என்கிற அனல் பறக்கும் விவாதங்களும் எதிர்பார்ப்புகளும் அணிவகுத்துக் கொண்டே இருக்கின்றன.

2014, 2019 ஆகிய இரு லோக்சபா தேர்தல்களில் பாஜக அடுத்தடுத்து வென்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. தற்போதைய லோக்சபா தேர்தலிலும் பாஜக 400 இடங்களைக் கைப்பற்றும் என அக்கட்சித் தலைவர்கள் திட்டவட்டமாக கூறி வருகின்றனர்.

BJP Fear over 40 Lok Sabha Seats of Less margin winning in 2019 Election

அதேநேரத்தில் பாஜக தலைவர்களின் 'அதீதமான' பேச்சுகள், அந்தக் கட்சிக்கே தோல்வி பயத்தைக் காட்டுகிறதா? என்கிற கேள்வியை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதனால் காங்கிரஸை உள்ளடக்கிய "இந்தியா" கூட்டணி தலைவர்கள் மத்தியில் புதிய ஆட்சி அமைவது உறுதி என்கின்றனர்.

இன்னொரு பக்கம் 2019 தேர்தலை சற்று ஆராய்ந்து பார்த்தால் மத்தியில் ஆளும் பாஜகவின் நடுக்கம் ஏன் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். அதாவது 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக வென்ற இடங்கள் மொத்தம் 303. இதில் 50,000-க்கும் குறைவான வாக்குகளில் வென்ற தொகுதிகள் 40.

பாஜக சொற்பமான வாக்குகளில் வென்ற 40 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்ட இடங்கள் 11. பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி, பிஜூ ஜனதா தள் கட்சிகள் போட்டியிட்ட இடங்கள் தலா 6. திரிணாமுல் காங்கிரஸ் 4 இடங்களில் பாஜகவுக்கு எதிராக களம் கண்டது. ராஷ்டிரிய லோக் தள் 2 இடங்களில் பாஜகவை எதிர்த்தது. ஜேடிஎஸ், ஏஐயுடிஎப், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகியவை தலா 1 இடத்திலும் சுயேட்சை 1 இடத்திலும் பாஜகவை எதிர்த்து களம் கண்டன. இந்த 40 தொகுதிகளில் 14 இடங்கள், பாஜகவின் கோட்டையாக கருதப்படும் உத்தரப்பிரதேசத்தில்தான். இந்த 40 தொகுதிகளில் பாஜக வெற்றி வாய்ப்பை இழந்திருந்தால் 263 இடங்களைத்தான் பாஜக பெற்றிருக்க முடியும். 543 எம்.பிக்களைக் கொண்ட லோக்சபாவில் பெரும்பான்மைக்கு தேவை 272 இடங்கள். இப்போது புரிகிறதா பாஜகவின் நடுக்கம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

பாஜக வென்ற 303 தொகுதிகளில் 1 லட்சத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற தொகுதிகள் 77. இதில் காங்கிரஸை எதிர்த்து போட்டியிட்ட இடங்கள் மட்டும் 30.

பாஜக சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற தொகுதிகளும் வாக்கு வித்தியாசமும்

மச்லிஷாஹர் 181
குந்தி 1,445
சாம்ராஜ்நகர் 1817
பர்தாமன் துர்காபூர் 2439
மீரட் 4729
முசாபர்நகர் 6526
கான்கெர் 6,914
ரோஹ்டக் 7,503
சம்பல்பூர் 9162
டாமன் டையூ 9942
லோகர்தாகா 10,363
லடாக் 10 930
ஜார்கிராம் 11,767
கன்னோஜ் 12,353
பாலசோர் 12,956
தும்கூர் 13,339
சந்தெளலி 13,959
சுல்தான்பூர் 14,526
பர்ராக்பூர் 14,857
பல்லியா 15,519
இன்னர் மணிப்பூர் 17,755
பதோன் 18,454
போலங்கீர் 19,516
பக்பத் 23,502
புவனேஸ்வர் 23,839
மயூர்பஞ்ச் 25,256
கலஹாண்டி 28,781
பஸ்தி 30,354
பலூர்ஹாட்33,293
சந்த்கபீர் நகர் 35,749
கரீம்கஞ்ச் 38,389
கொப்பல் 38,397
கெளசாம்பி 38,722
பாடலிபுத்திரா 39,321
நன்டெட் 40,148
பதோனி 43,615
சண்டிகர் 46,970
தும்கா 47,590
ஹோசிராபூர் 48,530
கூச் பீகார் 54,231
அமேதி 55,120
பெல்லாரி 55,707
அடிலாபாத் 58,560
பண்டா58,938
ராய்கஞ்ச் 60,574
செகந்திராபாத் 62,114
பர்கார் 63,939
எடாவா 64,437
பைசாபாத்65,477
ராய்கர் 66,027
அருணாச்சல் கிழக்கு 66,027
நிஜாமாபாத் 70,875
பெங்களூர் மத்தி 70,968
அவுரங்காபாத் 72,607
ஹூக்ளி 73,362
கட்சிரோலி-சிமூர்77,52
பிஷ்ணுபூர் 78,047
டவுசா78,444
சித்ரதுர்கா 80,178
வடக்கு கோவா 80,247
சில்சார் 81,596
குருதாஸ்பூர் 82,459
ஜோர்கட் 82,653
ஜஞ்சிர் சம்பா 83,255
மல்டாகா உத்தர் 84,288
மதா 85,764
மெதினாப்பூர் 88,952
கரீம்நகர் 89,508
மோகன்லால்கஞ்ச் 90,229
மகாசமுத் 90,511
ரட்லம் 90,636
கைரானா 92,160
குல்பர்கா 95,452
நந்துர்பர் 95,629
மண்ட்லா 97,674
கரெளலி தோல்பூர் 97,682

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+