Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திரிபுராவில் ஆட்சியை தக்க வைத்த பாஜக- நாகாலாந்தில் பாஜக கூட்டணி வெற்றி! மேகாலயாவில் பின்னடைவு!

திரிபுரா, நாகாலாந்தில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது. மேகாலயாவில் தொங்கு சட்டசபை ஏற்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் சட்டசபை தேர்தலில் வென்ற பாஜக, ஆட்சியைத் தக்க வைத்து புதிய சரித்திரம் படைத்துள்ளது. நாகாலாந்தில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. மேகாலயாவில் பாஜக 2 இடங்களில் வென்ற போதும் தொங்கு சட்டசபை உருவாகி இருப்பதால் அதிக இடங்களைப் பெற்ற என்பிபி-யுடன் கை கோர்த்து கூட்டணி ஆட்சியில் இணையக் கூடும்.

BJP gets majority in Tripura, Nagaland; Hung assembly in Meghalaya

திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் தலா 60 சட்டசபை தொகுதிகள் உள்ளன. திரிபுராவில் பிப்ரவரி 16-ந் தேதி வாக்கு பதிவு நடைபெற்றது. மேகாலயா நாகாலாந்து மாநிலங்களில் பிப்ரவரி 27-ல் தேர்தல் நடைபெற்றது.

திரிபுரா

திரிபுரா மாநிலத்தில் 2018-ல் இடதுசாரிகளை வீழ்த்தி ஆட்சியை முதல் முறையாக பாஜக பிடித்தது. இம்முறை பாஜக வெல்லுமா என்ற சந்தேகம் இருந்தது. மேலும் பாஜகவை வீழ்த்த இடதுசாரிகளும் காங்கிரஸும் கை கோர்த்து தேர்தலை எதிர்கொண்டன. ஆனால் பாஜக 32 இடங்களில் வென்றுள்ளது. அதன் கூட்டணி கட்சியான ஐபிஎப்டி 1 இடத்தில் வென்றுள்ளது. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 31 எம்.எல்.ஏக்கள். இதனால் திரிபுராவில் பாஜக 2-வது முறையாக ஆட்சியைத் தக்க வைத்து சரித்திரம் படைத்திருக்கிறது. பாஜகவின் உட்கட்சி பூசல்கள் அந்த கட்சிக்கு எதிரானதாக இருந்த போதும், தேர்தல் களத்துக்கு புதியதாக வழங்க பழங்குடி வாக்குகளை குறிவைத்து களமிறங்கிய திப்ரா மோதா பாஜக எதிர்ப்பு வாக்குகளை கணிசமாக பிரித்துவிட்டன. இதனால் பாஜக எளிதான வெற்றியை அறுவடை செய்ய முடிந்திருக்கிறது.

திரிபுரா மாநில தேர்தல் முடிவுகள்

மொத்த தொகுதிகள்: 60

தேர்தல் நடைபெற்றவை: 60

முடிவுகள் அறிவிக்கப்பட்டவை: 60

பாஜக 32

சிபிஎம் 11

காங்கிரஸ் 3

ஐபிஎப்டி 1

திப்ரா மோதா 13

திரிபுரா வாக்கு சதவீதம்:

பார்வார்டு பிளாக் AIFB{1.03%}

திரிணாமுல் காங்கிரஸ் AITC{0.88%}

பாஜக BJP{38.97%}

சிபிஐ CPI{0.48%}

சிபிஎம் CPI(M){24.62%}

சிபிஐ(எம்எல்) CPI(ML)(L){0.04%}

காங்கிரஸ் INC{8.56%}

ஐபிஎப்டி IPFT{1.26%}

நோட்டா NOTA{1.36%}

ஆர்எஸ்பி RSP{0.67%}

மேகாலயா

மேகாலயா சட்டசபை தேர்தலில் எந்த கட்சியும் பெரும்பான்மைக்காக 31 இடங்களைப் பெறவில்லை. ஆளும் கட்சியான என்பிபி 20 இடங்களில் வென்று அதிக இடங்களில் வென்ற தனிப்பெரும் கட்சியாக உள்ளது. யுடிபி கட்சி 11 இடங்களில் வென்றுள்ளது. இதனால் மேகாலயாவில் தொங்கு சட்டசபை உருவாகி உள்ளது. ஆனால் என்பிபி, யுடிபி, பாஜக ஆகியவற்றுடன் இணைந்து புதிய ஆட்சியை அமைக்கலாம். இதனால் மீண்டும் என்பிபி தலைமையிலான கூட்டணி ஆட்சியே மேகாலயாவில் அமையும் எனவும் கூறப்படுகிறது. 2018 மேகாலயா தேர்தலில் காங்கிரஸ் கட்சிதான் 21 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 12 பேர் திரிணாமுல் காங்கிரஸுக்கு தாவினர். இத்தேர்தலில் காங்கிரஸ், திரிணாமுல் என எதிர்க்கட்சிகள் அத்தனையும் தனியே களம் கண்டன. இது ஆளும் என்பிபிக்கு சாதகமாக அமைந்துவிட்டது.

மேகாலயா மாநில தேர்தல் முடிவுகள் (மாலை 6 மணி நிலவரம்)

மொத்த தொகுதிகள்: 60

தேர்தல் நடைபெற்றவை: 59

முடிவுகள் அறிவிக்கப்பட்டவை: 52

தேசிய மக்கள் கட்சி என்பிபி - 20

ஐக்கிய ஜனநாயக கட்சி யுடிபி - 11

காங்கிரஸ் - 5

திரிணாமுல் காங்கிரஸ் - 4

வாய்ஸ் ஆப் த பீப்பிள் பார்ட்டி - 4

பாஜக - 2

சுயேட்சைகள் - 2

ஹெச்எஸ்பிடிபி - 2

பிடிஎப் - 2

முடிவுகள் அறிவிக்கப்படாதவை 7- முன்னிலை நிலவரம்

தேசிய மக்கள் கட்சி என்பிபி- 5

திரிணாமுல் காங்கிரஸ் - 1

பாஜக - 1

மாலை 6 மணி நிலவர்ரப்படி கட்சிகளின் வாக்கு சதவீதம்

திரிணாமுல் காங்கிரஸ் AITC{13.77%}

பாஜக BJP{9.29%}

ஹெச்எஸ்பிடிபி HSPDP{3.58%}

காங்கிரஸ் INC{13.19%}

ஜேடியூ JD(U){0.06%}

என்பிஇபி NPEP{31.40%}

பிடிஎப் PDF{1.89%}

யுடிபி UDP{16.27%}

நாகாலாந்து

நாகாலாந்து மாநில சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றியை பெற்றுள்ளது. நாட்டிலேயே நாகாலாந்து மாநிலத்தில்தான் எதிர்க்கட்சி என்பதே இல்லை என்கிற நிலை இருந்தது. நாகாலாந்து தேர்தலுக்கு முன்னதாக அனைத்து அரசியல் கட்சிகளுமே ஆளும் கட்சி அரசாங்கத்தில் இணைந்திருந்தன.

வடகிழக்கு மாநிலங்களிலேயே நாகாலாந்தில்தான் தேசியவாத காங்கிரஸ், லோக் ஜன்சக்தி, குடியரசு கட்சி என இதர கட்சிகல் போட்டியிட்டு கணிசமான இடங்களையும் கைப்பற்றி இருக்கின்றன.

நாகாலாந்து மாநில தேர்தல் முடிவுகள்:

மொத்த தொகுதிகள் - 60

தேர்தல் நடைபெற்றவை- 60

முடிவுகள் அறிவிக்கப்பட்டவை- 56

பாஜக -12

சுயேட்சைகள் -4

லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) -2

நாகா மக்கள் முன்னணி- 2

தேசிய மக்கள் கட்சி- 5

தேசியவாத காங்கிரஸ் கட்சி- 6

தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி 23

குடியரசு கட்சி (அத்வாலே)- 2

முடிவுகள் அறிவிக்கப்படாதவை- முன்னிலை நிலவரம்

ஐக்கிய ஜனதா தள் -1

தேசியவாத காங்கிரஸ்- 1

தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி -2

நாகாலாந்து கட்சிகள் வாக்கு சதவீதம்:

பாஜக BJP{18.83%}
சிபிஐ CPI{0.00%}
காங்கிரஸ் INC{3.54%}
ஜேடியூ JD(U){3.25%}
லோக் ஜனசக்தி LJPRV{8.65%}
என்சிபி NCP{9.55%}
என்டிபிபி NDPP{32.23%}
நோட்டா NOTA{0.31%}
என்பிஇபி NPEP{5.77%}
என்பிஎப் NPF{7.10%}
ஆர்ஜேடி RJD{0.50%

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+