கச்சேரி ஆரம்பம்! நாயுடு, நிதிஷுக்கு முக்கிய இடத்தில்.. ஆப்பு வைத்த பாஜக! இதெல்லாம் லிஸ்டுலேயே இல்லை
டெல்லி: மத்தியில் மைனாரிட்டி ஆட்சியை பாஜக செய்து வரும் நிலையில், கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு முக்கியமான செக் ஒன்றை பாஜக வைக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
2024 லோக்சபா தேர்தலில் தனிப்பட்ட வகையில் பாஜக வெற்றி பெற முடியாமல் படுதோல்வி அடைந்து உள்ளது. என்டிஏ கூட்டணி ஆட்சி அமைந்து இருந்தாலும் பாஜக தனிப்பட்ட வகையில் மெஜாரிட்டியை இழந்து உள்ளது.

கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக தேசிய அளவில் 303 இடங்களில் வென்றது. பாஜக என்டிஏ கூட்டணி 353 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 52 இடங்களில் வென்றது. இந்த நிலையில்தான் இன்று வாக்கு எண்ணிக்கை செய்யப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகின. 543 தொகுதிகள் நாட்டில் உள்ளன. இதில் 272 தொகுதிகளில் வென்றால் ஆட்சியை பிடிக்க முடியும்.
இப்படிப்பட்ட நிலையில் 2024 லோக்சபா தேர்தலில் கிட்டத்தட்ட 292 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. பாஜக தனியாக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 97 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 229 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் 40 இடங்களை வைத்து இருக்கும் சந்திர பாபு நாயுடு, நிதிஷ் குமார், ஷிண்டே சிவசேனா ஆகியோரின் உதவிதான் மோடி ஆட்சி அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது
கூட்டணி கட்சிகளுக்கு ஆப்பு: இப்படிப்பட்ட நிலையில்தான் மத்தியில் மைனாரிட்டி ஆட்சியை பாஜக செய்து வரும் நிலையில், கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு முக்கியமான செக் ஒன்றை பாஜக வைக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
பாரதிய ஜனதா கட்சி 18 வது மக்களவைக்கான சபாநாயகர் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறதாம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கூட்டணிக் கட்சிகளுக்கு துணை சபாநாயகர் பதவியை அக்கட்சி வழங்கக்கூடும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
நாயுடு திட்டம்; 17வது மக்களவையில் பாஜகவின் ஓம் பிர்லா சபாநாயகராக இருந்த நிலையில், துணை சபாநாயகர் அலுவலகம் காலியாக இருந்தது. இந்திய கூட்டணி 233 இடங்களில் வெற்றி பெற்றதால் எதிர்க்கட்சிகள் மீண்டும் எழுச்சி கண்டுள்ளன.
இந்த நிலையில் சபாநாயகர் தேர்தலில் சில கட்சிகள் கிராஸ் வாக்குகள் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன. அதாவது சிவசேனா, ஐக்கிய ஜனதா தளத்திலேயே சிலர் கிராஸ் வாக்குகள் செய்ய வாய்ப்புகள் உள்ளன. இதை மனதில் வைத்தே சபாநாயகர் பதவியை பெற இந்தியா கூட்டணி காய் நகர்த்துகிறதாம். இந்தியா கூட்டணி ஒருவேளை சபாநாயகர் பதவியை பெற்றால் அது பாஜகவிற்கு பெரிய அடியாக இருக்கும்.
நாயுடுவும் திட்டம்: இப்படிப்பட்ட நிலையில்தான் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் இருவரும் ஸ்பீக்கர் போஸ்டை பாஜக கூட்டணியில் பெறுவதற்கு தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். இரண்டு பேருமே "சபாநாயகர்" பதவியை தங்களுக்கான "இன்சூரன்ஸ்" ஆக பார்க்கின்றனர் என்று அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொடுக்க சான்ஸ் இல்லை: ஆனால் இவர்களுக்கு சபாநாயகர் பதவி கொடுக்காமல்.. தங்களுக்குள் சபாநாயகர் பதவியை தக்க வைக்க பாஜக முடிவு செய்துள்ளதாம். கூட்டணி கட்சிகள் எவ்வளவு பிரஷர் கொடுத்தாலும் அவர்களுக்கு சபாநாயகர் பதவி கொடுக்க முடியாது என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறதாம்.
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications