பாஜக தலைவர் கபில் மிஸ்ராவுக்கு 'ஒய் பிளஸ்' பாதுகாப்பு.. 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள்
டெல்லி: டெல்லி வன்முறை விவாகரத்தில் குற்றம்சாட்டப்படும் பாஜக தலைவர் கபில் மிஸ்ரா எம்பிக்கு ஒய் + வகை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது
டெல்லியைச் சேர்ந்த பாஜக தலைவர் கபில் மிஸ்ரா, கும்பலைத் தூண்டிவிட்டு, டெல்லியில் இருதரப்பு வன்முறையைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டவர், அவரது உயிருக்கு அச்சுறுத்தல் காரணமாக ஒய் + வகை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மறுபுறம், மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள், இந்த முடிவுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறார்கள்.

எனினும் டெல்லி காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், கபில் மிஸ்ராவுக்கு ஒய் + வகை பாதுகாப்பின் கீழ் ஆயுதமேந்திய காவலர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிப்பார்கள் . கபில் மிஸ்ராவிற்கு மரண அச்சுறுத்தல் வந்ததாகக் கூறப்பட்டதையடுத்து அவரது பாதுகாப்பு உயர்த்தப்பட்டுள்ளதாக டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
டெல்லி தேர்தல் பிரச்சாரத்தின்போதும், வடகிழக்கு டெல்லியில் நடந்த வகுப்புவாத வன்முறைக்கு முன்னதாகவும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கபில் மிஸ்ரா மற்றும் அனுராக் தாகூர் மற்றும் பர்வேஷ் வர்மாக ஆகியோருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் கபில் மிஸ்ராவுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வந்த காரணத்தால் தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று டெல்லி போலீசிடம் கோரிக்கை வைத்துள்ளார். இதையடுத்து போலீசார் கபில் மிஸ்ராவுக்கு பாதுகாப்பை உயர்த்தி உள்ளனர்.
இதனிடையே கபில் மிஸ்ராவுக்கு ஒய் + வகை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ள மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள், இதில் தங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றும், பாதுகாப்பு குறித்த அச்சுறுத்தல் காரணமாக டெல்லி காவல்துறையே அவர்கள் மட்டத்தில் இந்த முடிவினை எடுத்திருக்கலாம் என்றும் தெரிவித்தன.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications