மோடியை பின்பற்றி பெயரை மாற்றும் பாஜக தலைவர்கள்.. டுவிட்டரில் பரபரப்பு
டெல்லி: டுவிட்டரில் தனது பெயரை பாதுகாவலன் நரேந்திர மோடி மாற்றிக் கொண்டதை அடுத்து பாஜக தலைவர்களும் தங்களது பெயரை மாற்றிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நான் உங்கள் காவலன் என்ற பிரசாரத்தை பாஜகவினர் தொடங்கியுள்ளனர். இதை கடந்த சனிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறுகையில் நான் உங்கள் பாதுகாவலன். நான் தனித்து போட்டியிடவில்லை. நீங்கள் அனைவரும் நாட்டின் பாதுகாவலர்கள்தான் என்ற உறுதிமொழியை ஏற்க வேண்டும். ஊழலுக்கு எதிராக போராடும் அனைவரும் பாதுகாவலர்களே என்று பேசியிருந்தார்.

இதையடுத்து டுவிட்டரில் தனது பெயருடன் பாதுகாவலன் என்ற அடைமொழியை சேர்த்து கொண்டார். இவரை பின்பற்றி அமித்ஷா, பியூஷ் கோயல், தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோரும் தங்கள் பெயருக்கு முன்பு சவுக்கிதார் (பாதுகாவலன்) என்ற வார்த்தையை சேர்த்துக் கொண்டுள்ளனர். இதனால் டுவிட்டரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications