இந்தியாவிலும் "வங்கதேசம் பாணி புரட்சி"- காங்கிரஸ் சல்மான் குர்ஷித் கருத்தால் பாஜக கடும் கொந்தளிப்பு!
டெல்லி: இந்தியாவிலும் வங்கதேசத்தைப் போல போராட்டங்கள், புரட்சி, வன்முறைகள் வெடிக்கப் போகிறது; சிஏஏவுக்கு எதிராக டெல்லி ஷாகீன் பாக்கில் தொடங்கிய இதேபோன்ற போராட்டம் நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும் அது தோல்வி அடைந்தது என மூத்த காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. சல்மான் குர்ஷித்தும் காங்கிரஸும் இந்தியாவில் வன்முறையை தூண்டுகின்றன; சல்மான் குர்ஷித் வங்கதேசத்துக்கே போய்விடலாம் என்று பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் இந்தியா ஆதரவு நிலைப்பாடு உள்ளிட்டவைகளுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்தப் போராட்டங்கள் இடஒதுக்கீடுக்கு எதிரானதாகவும் பின்னர் வன்முறையாகவும் உருமாறின. ஒரு கட்டத்தில் வங்கதேச மாணவர்கள், ஷேக் ஹசீனாவின் ராஜினாமா கோரி புரட்சியில் ஈடுபட்டனர்.

வங்கதேச மாணவர்களின் இந்தப் புரட்சியால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, வங்கதேசத்தை விட்டே தப்பிவிட்டார். தற்போது இந்தியாவில்தான் ஷேக் ஹசீனா தஞ்சமடைந்துள்ளார்.
வங்கதேச புரட்சி குறித்து கருத்து தெரிவித்த மூத்த காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித், இந்தியாவிலும் வங்கதேசத்தைப் போல போராட்டங்கள், புரட்சி, வன்முறைகள் வெடிக்கப் போகிறது; சிஏஏவுக்கு எதிராக டெல்லி ஷாகீன் பாக்கில் தொடங்கிய இதேபோன்ற போராட்டம் நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும் அது தோல்வி அடைந்தது என தெரிவித்திருந்தார். சல்மான் குர்ஷித்தின் இந்த கருத்து பெரும் சர்ச்சையாகி உள்ளது.
சல்மான் குர்ஷித்தின் இந்த கருத்து அவரது சொந்த கருத்து; காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு இது அல்ல என அக்கட்சித் தலைவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். ஆனால் பாஜக தலைவர்களோ, காங்கிரஸும் சல்மான் குர்ஷித்தும் இந்தியாவிலும் வன்முறைகளத் தூண்டிவிடுகின்றனர். ராகுல் காந்தியின் பேச்சுகளைப் போலவே சல்மான் குர்ஷித் பேசுகிறார். இப்படிப் பேசுகிற சல்மான் குர்ஷித் வங்கதேசத்துக்கே போய்விடலாம் எனவும் பாஜக தலைவர்கள் கடுமையாக சாடியுள்ளனர்.
மேலும் அவ்வப்போது வெளிநாடுகளுக்கு செல்லும் ராகுல் காந்தி, இந்தியாவுக்கு எதிரான தலைவர்களை ரகசியமாக சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். இந்தியாவே பற்றி எரிவதாகவும் பேசியவர்தான் ராகுல் காந்தி லோக்சபா தேர்தலில் வெற்றி பெற இயலாத காங்கிரஸ் விரக்தியில் இப்படிப் பேசுகிறது எனவும் பாஜக தலைவர்கள் காட்டமாக தாக்கி உள்ளனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications