கோட்டைவிட்ட ஆம் ஆத்மி.. தலைநகரை தட்டி தூக்கும் பாஜக.. டெல்லியில் முதல்வராக யாருக்கு வாய்ப்பு?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தலைநகர் டெல்லியில் கடந்த 1998 ஆம் ஆண்டுக்கு பிறகு அதாவது 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக வெற்றி முகத்தில் உள்ளது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 47 இல் முன்னிலையில் உள்ளது. இதனால் கிட்டத்தட்ட வெற்றி உறுதியாகிவிட்ட நிலையில், டெல்லியில் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பாஜக முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிக்காமலேயே தேர்தலை சந்தித்துள்ள நிலையில், முதல்வர் வேட்பாளராக இரண்டு பேரின் பெயர் அடிபடுகிறது. அவர்கள் யார் என்று இங்கே பார்க்கலாம்.

டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி முகத்தில் உள்ளது. தற்போதைய நிலவரப்படி 46 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி கட்சி படுதோல்வியை பெறும் நிலையில், உள்ளது. முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போதைய முதல்வர் அதிஷி ஆகியோர் கூட தோல்வி பெறும் நிலையில் உள்ளனர்.

delhi election 2025 delhi election result 2025 aap 2025 2025

டெல்லியில் கடந்த 1998 ஆம் ஆண்டுக்கு பிறகு ஆட்சி அரியணையில் அமர முடியாத நிலையில் இருந்த பாஜக 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் அதிகாரம் பெறுகிறது. தலைநகர் டெல்லியில் பாஜக ஆட்சி அமைப்பது கிட்டதட்ட உறுதி செய்யப்பட்டு இருக்கும் நிலையில், அங்கு முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் தேர்தலுக்கு முன்பாக முதல்வர் வேட்பாளர் என பாஜக யாரையும் முன்னிறுத்தவில்லை.

டெல்லி முதல்வர் பர்வேஷ் வெர்மா?

இதனால், தற்போது பாஜக வெற்றி பெறும் நிலையில் வந்து இருக்கக் கூடிய சூழலில் அங்கு யார் முதல்வராக போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. டெல்லியில் முதல்வர் ரேசில் இரண்டு பேரது பெயர்கள் அடிபடுகின்றன. புதுடெல்லி தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிடும் பர்வேஷ் வெர்மா இந்த ரேசில் முதலிடத்தில் இருக்கிறார்.

கெஜ்ரிவாலுக்கு தற்போது கடும் சவால் அளித்து இறுதியில் பர்வேஷ் வெர்மா வெற்றி பெற்றுள்ளார். புதுடெல்லி தொகுதியில் மாறி மாறி முன்னிலை பெற்று வந்த நிலையில், பர்வேஷ் வெர்மா வெற்றி பெற்றுள்ளார். டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வியடைந்துள்ளார். கடந்த 2013, 2015, 2020 சட்டசபை தேர்தல்களில் புதுடெல்லி தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி பெற்று இருந்தார்.

4வது முறையாக போட்டியிட்ட கெஜ்ரிவால் பாஜக வேட்பாளர் பர்வேஷ் சர்மாவிடம் வீழ்ந்தார். இதனால் பர்வேஷ் வெர்மாவுக்கே முதல்வர் பதவி கிடைக்கும் என அவரது ஆதரவாளர்கள் அடித்து சொல்கிறார்கள். பர்வேஷ் வெர்மா, டெல்லியின் முன்னாள் முதல்வர் ஷகிப் சிங் வெர்மாவின் மகன் ஆவார்.

ரமேஷ் பிதுரி

டெல்லி முதல்வர் ரேஸில் அடுத்த இடத்தில் இருப்பவர் ரமேஷ் பிதுரி. டெல்லியில் தற்போது முதல்வராக இருக்கும் அதிஷியை எதிர்த்து கல்காஜி தொகுதியில் இவர் போட்டியிட்டுள்ளார். குஜ்ஜார் சமூகத்தில் செல்வாக்கு மிக்க தலைவராக அறியப்படும் ரமேஷ் பிதுரி, கல்காஜி தொகுதியில் அதிஷியை பின்னுக்கு தள்ளியுள்ளார். துவக்கம் முதலே ரமேஷ் பிதுரி முன்னிலை பெற்று வரும் நிலையில், அவரும் முதல்வருக்கான ரேசில் இருந்தார்.

இதற்கிடையே ரமேஷ் புதுரி தோல்வியை தழுவியுள்ளார். அதிஷி 52,154 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். ரமேஷ் பிதுரி 48,633 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். எனவே அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் வெர்மாவே டெல்லியின் அடுத்த முதல்வர் ஆக வாய்ப்பு அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. எனினும் பாஜக மேலிடம் யாரை தேர்ந்தெடுக்கும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+