Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அசைக்க முடியாது.. பாஜக வைத்ததுதான் சட்டம்.. ராஜ்யசபாவில் பெரும்பான்மையை நோக்கி முன்னேறும் என்.டி.ஏ!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நேற்று நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில் கூடுதல் இடங்களைப் பிடித்ததன் மூலம், ராஜ்யசபாவில் பாஜக எம்.பிக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பெரும்பான்மை நம்பரை பெற என்.டி.ஏ கூட்டணிக்கு இன்னும் 4 ராஜ்யசபா எம்.பிக்கள் மட்டுமே தேவை.

நமது நாடாளுமன்றத்தில் உள்ள ராஜ்யசபாவில் எம்.பிக்களுக்கான பதவிக்காலம் 6 ஆண்டுகள். பதவிக்காலம் முடியும் போது தனித்தனியாகத் தேர்தல்கள் நடத்தப்பட்டு, அந்த இடங்கள் நிரப்பப்படும். எம்எல்ஏக்கள் வாக்களித்து, அந்தந்த மாநிலங்களின் ராஜ்யசபா உறுப்பினர்களைத் தேர்வு செய்வார்கள். அதன்படி நேற்று பல மாநிலங்களில் ராஜ்யசபா இடங்கள் நிரப்பப்பட்டன.

BJP led NDA just 4 short of majority mark of 121 in Rajya sabha


56 ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கு தேர்தல்: 15 மாநிலங்களில் காலியாகும் 56 ராஜ்ய சபா உறுப்பினர் பதவிகளுக்கு பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. 13 மாநிலங்களை சேர்ந்த 50 ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக்காலம் வருகின்ற ஏப்ரல் 2ம் தேதி முடிவடைகிறது. 2 மாநிலங்களை சேர்ந்த 6 உறுப்பினர்கள் வருகின்ற ஏப்ரல் 3ஆம் தேதி ஓய்வு பெறுகிறார்கள்.

அதன்படி, மாநிலங்களவையில் காலியாக உள்ள 56 இடங்களுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. உத்தர பிரதேசம் - 10, பீகார் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலத்தில் தலா 6, மத்திய பிரதேசம், மேற்கு வங்கத்தில் தலா 5, குஜராத் மற்றும் கர்நாடகாவிலிருந்து தலா 4, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கர், ஹரியானாவில் இருந்து தலா 3 , இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தில் 1 என மொத்தம் 56 ராஜ்ய சபா இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது.

15 இடங்களுக்கு போட்டி: இதில் 41 இடங்களுக்கு போட்டியின்றி ராஜ்யசபா உறுப்பினர்கள் தேர்வாகினர். பாஜக தேசிய தலைவர் நட்டா, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் போட்டியின்றி தேர்வாகினர். 15 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. உ.பியில் 10 இடங்களுக்கு 11 பேர் போட்டியிட்டனர். கர்நாடகாவில் 4 ராஜ்யசபா இடங்களுக்கு 5 பேர் போட்டியிட்டனர். இமாச்சலில் ஒரு இடத்திற்கு 2 பேர் போட்டியிட்டனர். இதன் காரணமாக 15 இடங்களில் தேர்தல் நடைபெற்றது.

மூன்று மாநிலங்களில் உள்ள 15 இடங்களுக்கான ராஜ்யசபா தேர்தலில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, பாஜக 10 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்றன. உத்தர பிரதேசத்தில் கூடுதல் இடத்தையும், ஹிமாச்சலப் பிரதேசத்தில் ஒரு இடத்தையும் கைப்பற்றியதன் மூலம் பாஜக ராஜ்யசபா எம்.பிக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பாஜக கவுண்ட் அதிகரிக்கிறது: நேற்று தேர்தல் நடைபெற்ற 56 ராஜ்யசபா இடங்களில், அன்னப்போஸ்டாக தேர்வான 20 இடங்கள் உட்பட 30 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றது. இதன் மூலம் ராஜ்யசபாவில் பாஜக எம்.பிக்களின் எண்ணிக்கை 97 ஆகவும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) எம்.பிக்களின் எண்ணிக்கை 117 ஆகவும் அதிகரிக்கிறது.

இந்த தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட 56 ராஜ்யசபா உறுப்பினர்களும் பதவியேற்றவுடன் 240 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற மாநிலங்களவையில் 121 என்ற பெரும்பான்மைக்கு நான்கு இடங்கள் மட்டுமே பாஜகவுக்கு குறைவாக இருக்கும். மாநிலங்களவையில் தனிப்பெரும் கட்சியாக பாஜக உள்ளது.

ராஜ்யசபாவில் மெஜாரிட்டி வரப்போகுது: நேற்று மாலை முடிவுகள் வெளியான பிறகு, பாஜக 97 உறுப்பினர்களுடன் (கட்சியில் இணைந்த ஐந்து நியமன உறுப்பினர்கள் உட்பட) ராஜ்யசபாவில் தனிப் பெரும் கட்சியாக நீடிக்கிறது. அதைத் தொடர்ந்து காங்கிரஸ் 29 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் 13, திமுக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் தலா 10 உறுப்பினர்களைக் கொண்டுள்ளன. பிஜேடி மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலா 9 எம்.பிக்கள், பிஆர்எஸ் 7, ஆர்ஜேடி 6, சிபிஐஎம் ஐந்து, அதிமுக மற்றும் ஜேடி(யு) தலா நான்கு எம்.பிக்களைக் கொண்டுள்ளன.

117 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி. ராஜ்யசபாவில் பெரும்பான்மைக்கு 121 இடங்கள் தேவை. அந்த எண்ணிக்கையைப் பெற நான்கு இடங்கள் மட்டுமே குறைவாக உள்ளது. ராஜ்யசபாவிலும் பெரும்பான்மை பெற்றால், பாஜக அரசு, எந்தவொரு மசோதாவையும் ராஜ்யசபாவில் எளிதாக நிறைவேற்றும் சூழல் ஏற்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+