அடேங்கப்பா! 400+ சீட்களை தாண்டும் பாஜக! எதிர்ல யாருமே இல்ல.. நியூஸ் 18 கருத்துக்கணிப்பு முழு ரிசல்ட்
டெல்லி: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் "400+" இலக்கை அடையும் அதே வேளையில், வரலாற்று சிறப்புமிக்க வெற்றியுடன் மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் என்று நியூஸ் 18 குழுமம் நடத்திய மெகா கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
லோக்சபா தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றன. பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இரு கட்டங்களாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன. இந்நிலையில், நியூஸ் 18 நிறுவனம், பிப்ரவரி 12 முதல் மார்ச் 1 வரையிலான காலகட்டத்தில் நாடு முழுக்க தேர்தல் கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது.

மெகா கருத்துக்கணிப்பு: இந்தியாவில் மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் 95% மக்களவைத் தொகுதிகளில் அதாவது, 518 லோக்சபா தொகுதிகளில் ஒவ்வொரு தொகுதியிலும் 3 சட்டமன்ற தொகுதிகளை தேர்வு செய்து, அவற்றில் ஒவ்வொன்றிலும் 5 வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க உள்ள வாக்காளர்களிடம் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
பாஜக கூட்டணி 411 இடங்களில் வெல்லும்: இந்தியாவின் 543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 411 இடங்களைக் கைப்பற்றும் என்றும் பாஜக மட்டுமே தனிப்பெரும் கட்சியாக 350 இடங்களில் வென்று சாதனை படைக்கும் என்றும் கணித்துள்ளது நியூஸ் 18. ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி உட்பட மீதமுள்ள என்.டி.ஏ கூட்டணி கட்சிகள் 61 இடங்களில் வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்படுள்ளது.
அடித்து தூக்கும் பாஜக: பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி, இந்தி இதய பூமியை முழுமையாக கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் 77 இடங்கள், மத்தியப் பிரதேசத்தில் 28, சத்தீஸ்கரில் 10, பீகாரில் 38, மற்றும் ஜார்கண்டில் 12) மற்றும் கர்நாடகா (25) ஆகிய இடங்களில் வெற்றிபெறும் என்று நியூஸ் 18 கருத்துக்கணிப்பு சுட்டிக்காட்டுகிறது.
48 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 41 இடங்களில் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. அதேசமயம், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு 7 இடங்களில் வெற்றி வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
வழித்து துடைத்து: தலைநகர் டெல்லியில் சாந்தினி சௌக், கிழக்கு டெல்லி, புது டெல்லி, வடகிழக்கு டெல்லி, வட மேற்கு டெல்லி (தனி), தெற்கு டெல்லி மற்றும் மேற்கு டெல்லி என மொத்தம் 7 மக்களவை தொகுதிகள் உள்ளன. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 7 இடங்களிலுமே வெற்றி பெறும் என நியூஸ் 18 போல் ரிசல்ட் தெரிவிக்கிறது.
மேலும், ஒடிசா (13), மேற்கு வங்கம் (25), தெலுங்கானா (8), மற்றும் ஆந்திரப் பிரதேசம் (18) ஆகிய மாநிலங்களிலும் பாஜக, கடந்த முறையை விட அதிக இடங்களில் வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளையும் ஆளும் பாஜக கூட்டணி கைப்பற்ற வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட், ராஜஸ்தான் மாநிலங்களையும் பாஜக 'க்ளீன் ஸ்வீப்' செய்யும் என்கிறது நியூஸ் 18 கருத்துக்கணிப்பு ரிசல்ட்.
தமிழ்நாட்டிலும் வலுவாக கால் தடம்: தமிழ்நாடு (5) மற்றும் கேரளா (2) ஆகிய இரண்டு மாநிலங்களிலும் பாஜக தனது இருப்பை நிறுவும் எனத் தெரிவிக்கப்பட்டுளது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் INDIA கூட்டணி 30 இடங்களைக் கைப்பற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் 5 இடங்களில் பாஜகவும், 4 இடங்களில் அதிமுக கூட்டணியும் வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவை விட பாஜக அதிக இடங்களில் வெல்லும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியா கூட்டணி 100ஐ எட்டும்: காங்கிரஸ் உள்ளடங்கிய இந்தியா கூட்டணி, மக்களவையில் மொத்தமாக 105 இடங்களை கைப்பற்றும் என்று நியூஸ் 18 கருத்துக்கணிப்பு கணித்துள்ளது. அதில் 30 இடங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவை. காங்கிரஸ் தனியாக வெறும் 49 தொகுதிகளில் மட்டுமே வெல்ல வாய்ப்புள்ளது என்கிறது இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகள்.
காங்கிரஸுக்கு இரண்டாவது மோசமான தோல்வியாக அமையுமாம்: கடந்த 2014 லோக்சபா தேர்தலில் தான் வரலாற்றிலேயே படுதோல்வியைச் சந்தித்தது காங்கிரஸ். 44 தொகுதிகளில் மட்டுமே வென்றிருந்தது. இப்போது மக்களவைத் தேர்தலில் அதன் இரண்டாவது மோசமான செயல்திறனை காங்கிரஸ் வெளிப்படுத்தும் எனத் தெரிவித்துள்ளது நியூஸ் 18.
அதிமுக, பகுஜன் சமாஜ், பி.ஆர்.எஸ், பி.ஜே.டி., ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி, உள்ளிட்ட மற்ற கட்சிகள் மொத்தமாக சுமார் 27 இடங்களை கைப்பற்றலாம் என்று நியூஸ் 18 கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. நியூஸ் 18 கணிப்பின்படி, பாஜக, இதுவரை இல்லாத வகையில் அசுர பலத்தோடு மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் என்கிறது. நியூஸ் 18 கணிப்பு பலிக்குமா? பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications