Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வடக்கிலும் பாஜக ஆட்டம் கண்டுருச்சு.. அதனால் தான் “மட்டன்” பற்றி பேசுறாரு மோடி.. காங்கிரஸ் தாக்கு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆட்டுக்கறி சாப்பிட்டது பற்றி பிரதமர் மோடி விமர்சித்துப் பேசி இருந்த நிலையில், வடக்கிலும் பாஜக ஆதரவை இழந்து வருவதால் மோடி இவ்வாறு பேசுவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே சி வேணுகோபால் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நேற்று தொடங்கியது. 21 மாநிலங்களில் உள்ள 102 லோக்சபா தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இன்னும் 6 கட்டங்களாக ஜூன் 1ஆம் தேதி வரை லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

BJP losing ground in north too that s why Modi talks about mutton says Congress KC Venugopal

இதற்கிடையே அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஆட்டிறைச்சி சாப்பிட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை புண்படுத்தி உள்ளதாக பிரதமர் மோடி விமர்சித்துப் பேசினார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், ஆலப்புழா லோக்சபா தொகுதி வேட்பாளருமான கேசி வேணுகோபால் தனியார் ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் பேசியுள்ள வேணுகோபால், வட மாநிலங்களிலும் தோல்வியை உணர்ந்துள்ளதால், பீதியில் பிரதமர் மோடி எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது உணவு, மதம் சார்ந்த பிரச்சாரத்தை முன்னெடுப்பதாக விமர்சித்துள்ளார்.

கே.சி.வேணுகோபால் பேசுகையில், “வட மாநிலங்கள் உட்பட அனைத்து பகுதிகளிலும் பாஜக ஆதரவை இழந்து வருவதை பிரதமர் மோடி உணர்ந்துள்ளார். இதனால் அவர் பீதி அடைந்துள்ளார். இல்லாவிட்டால் இப்படிப்பட்ட கீழ்த்தரமான தாக்குதல் நடந்திருக்காது. ஏன் ஆட்டிறைச்சி பற்றி பேசுகிறார்? பாஜககாரர்கள் அனைவரும் சைவம், காங்கிரஸ்காரர்கள் அனைவரும் அசைவம் என பிரதமர் மோடி சொல்கிறாரா?

ஒருவர் என்ன உணவு சாப்பிட வேண்டும் என்பது தனிப்பட்ட விருப்பம். அதை யாரும் ஆணையிட முடியாது. ராமர் கோயிலை அரசியல் நோக்கத்திற்காக பாஜக பயன்படுத்துகிறது என்பதை மக்கள் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் அனுபவித்து வரும் துயரங்கள், விலைவாசி உயர்வு போன்ற நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதை மொடி விரும்பவில்லை. அவர் முழு உரையாடலையும் திசை திருப்ப விரும்புகிறார். நீங்கள் அந்தப் பக்கம், நாங்கள் இந்தப் பக்கம் என்ற துருவ அரசியலை முன்னெடுக்கிறார். மதத்தைப் பயன்படுத்தி மக்களை துருவப்படுத்தி எதிரிகளாக்குகிறார்கள்.

தென்னிந்தியா மட்டுமல்லாமல் வட மாநிலங்களிலும் காங்கிரஸும் இந்தியா கூட்டணி கட்சிகளும் பலமாக உள்ளன. ராஜஸ்தான், ஹரியானா, ஹிமாச்சல், மகாராஷ்டிரா, பீகார் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் முன்பு இருந்த சூழ்நிலை மாறி வருகிறது. இந்த வடக்கு - தெற்குப் பிளவு எங்கே? இவை அனைத்தும் பாஜகவால் உருவாக்கப்பட்டவை.” எனத் தெரிவித்துள்ளார் வேணுகோபால்.

மேலும் பேசியுள்ள அவர், “மோடியின் வியூகத்தை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். மக்கள் வெவ்வேறு மதங்களை நம்பலாம். மக்களின் மத உணர்வுகளைப் பயன்படுத்த பாஜக முயற்சிக்கிறது. இதன் மூலம் ஒருமுறை நீங்கள் வெற்றி பெறலாம் ஆனால் ஒவ்வொரு முறையும் வெற்றி பெற முடியாது. தேர்தல் வெற்றிக்காக மட்டுமே பாஜக அதைச் செய்கிறது என்பதை மக்கள் தற்போது உணர்ந்துள்ளனர். ” எனக் கூறியுள்ளார்.

மேலும், “ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய் யாத்திரையை நாங்கள் அரசியல் பிரச்சாரமாக செய்ய விரும்பவில்லை என்றாலும், அது தேர்தல் பிரச்சாரம் போன்றே மாறியது. ராகுல் யாத்திரை எங்கள் தேர்தலை நோக்கிய பயணத்திற்கு ஒரு வலுவான தளத்தை வழங்கியது. இப்போது, ​​நமது முன்னணி தலைவர்களான மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் பல்வேறு மாநிலங்களில் விரிவாக சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர்.” எனத் தெரிவித்துள்ளார் வேணுகோபால்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+