இந்தியாவுக்குதானே "இந்து ராஷ்டிரா' பெயர் வைக்க முடியும்? சித்தராமையா மீது பசவராஜ் பொம்மை பாய்ச்சல்!
டெல்லி: "இந்து ராஷ்டிரா" என்பது தீண்டத்தகாத வார்த்தை அல்ல.. இந்தியாவுக்குதானே "இந்து ராஷ்டிரா" என பெயர் வைக்க முடியும்; வேறு ஒரு நாட்டுக்கா "இந்து ராஷ்டிரா" என பெயர் வைக்க முடியும்? என பாஜக எம்பியும் கர்நாடகா முன்னாள் முதல்வருமான பசவராஜ் பொம்மை கேள்வி எழுப்பி உள்ளார். கர்நாடகா முதல்வர் சித்தராமையா, இந்து ராஷ்டிரம் என்பதை விமர்சித்து பேசியதற்கு பசவராஜ் பொம்மை எம்பி பதிலளித்துள்ளார்.
கர்நாடகா முதல்வர் சித்தராமையா லோக்சபா தேர்தல் முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், 202-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகளானது இந்தியா - இந்து ராஷ்டிரம் அல்ல என்பதை வெளிப்படுத்தி இருக்கிறது. நாங்கள் இந்து ராஷ்டிரம் என்பதே இல்லை என்கிறோம். இந்தியா என்பது பல்வேறு மதங்கள், ஜாதிகள், கலாசாரம், மொழிகளால் இணைந்தது. அனைவருமே இந்தியாவின் குடிமக்கள். இந்தியாவுக்கு மதச்சார்பற்ற அரசியல் சாசனம் இருக்கிறது என நோபல் பரிசு பெற்ற அறிஞர் அமர்த்தியா சென் தெரிவித்திருந்தார். இந்தியா இந்து ராஷ்டிரா இல்லை என்பதையே லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துவதாகவும் அமர்த்தியா சென் கூறியிருந்தது சரியானதுதான் என்றார்.

இதற்கு பாஜக எம்பியும் கர்நாடகா முன்னாள் முதல்வருமான பசவராஜ் பொம்மை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பசவராஜ் பொம்மை எம்பி, இந்தியாவுக்குதானே இந்து ராஷ்டிரா என பெயர் வைக்க முடியும். வேறு எந்த ஒருநாட்டுக்காவது இந்து ராஷ்டிரா என பெயர் வைக்க முடியுமா? சித்தராமையா நமது கலாசாரம், வரலாற்றை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இந்துயிசம், இந்துத்துவம் என்பது ஒருங்கிணைந்து வாழ்தலைக் குறிக்கிறது. அது ஒரு வாழ்வியலைக் குறிக்கிறது. அது ஒன்றும் தீண்டத்தகாத வார்த்தையும் அல்ல. வாக்கு வங்கி அரசியலுக்காக சித்தராமையா இப்படி பேசுகிறார். லோக்சபா தேர்தலில் மக்கள் தக்க பாடம் கற்றுக் கொடுத்தும் சித்தராமையா தொடர்ந்து இப்படித்தான் பேசுகிறார். சிறுபான்மை வாக்குகளை பெறுவதற்காகவே சித்தராமையா இப்படி பேசுகிறார் என்றார்.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை?












Click it and Unblock the Notifications