Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சீனா ஆக்கிரமிப்பு: ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல்.. சபாநாயகருக்கு பாஜக எம்பி பரபர கடிதம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய நிலப் பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளதாக லோக்சபாவில் உண்மைக்கு மாறான தகவல்களை பேசியதால் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு பாஜக எம்பி நிஷிகாந்த் துபே கடிதம் எழுதி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி நேற்று பேசினார் . அப்போது, இந்திய நிலப் பகுதியை சீனா ஆக்கிரமித்திருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி சீனாவின் அனைத்து துறை ஆதிக்கம் குறித்து விரிவாக விளக்கினார் ராகுல் காந்தி.

budget 2025 lok sabha rahul gandhi 2025

ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஏற்கனவே மறுப்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பாஜக எம்பி நிஷிகாந்த் துபே, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில், உண்மைக்கு மாறான தகவல்களை சபைக்கு ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார் எனக் குறிப்பிட்டுள்ளார் நிஷிகாந்த் துபே. மேலும் நமது நாட்டின் கவுரவத்தை சீர்குலைக்கும் வகையில் ராகுல் காந்தி பேசியிருப்பதாகவும் அதில் தெரிவித்துள்ளார் நிஷிகாந்த் துபே.

சோனியாவுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம்

முன்னதாக ஜனாதிபதி திரவுபதி முர்முவை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்தார் என்பதற்காக ராகுலின் தாயார் சோனியா காந்திக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானத்தை பாஜக எம்பி எம்பிக்கள் கொண்டு வந்தனர். நாடாளுமன்ற கூட்டுக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றியது தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சோனியா காந்தி அளித்த பதிலை முன்வைத்து அவருக்கு எதிராக பாஜக எம்பிக்கள் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+