இந்தியா வாங்களேன்.. பதுங்கி கிடக்கும் மகிந்த ராஜபக்சேவை, சுரண்டி அழைக்கும் சு.சாமி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இலங்கையில் பொதுமக்களின் தாக்குதலுக்கு அஞ்சி தப்பி ஓடி பதுங்கிய இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவை இந்தியாவுக்கு வருகை தர அழைத்துள்ளதாக கூறியுள்ளார் பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் மக்களின் இயல்பு வாழ்க்கை நாசமாகிப் போனது. இலங்கையில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலை பல மடங்கு உயர்ந்ததால் மக்கள் கொந்தளித்து வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். இலங்கையில் கடந்த 2 மாதங்களாக இந்த போராட்டம் தொடருகிறது.

விலகிய மகிந்த

விலகிய மகிந்த

இதனால் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். அவருக்கு பதிலாக புதிய பிரதமராக ரணில் விக்க்கிரமசிங்கே பதவி ஏற்றுள்ளார். ரணில் விக்கிரமசிங்கே தலைமையில் அனைத்து கட்சி அரசாங்கம் நடைமுறையில் இருந்து வருகிறது.

மக்கள் போராட்டம்

மக்கள் போராட்டம்

முன்னதாக மகிந்த ராஜபக்சே தாம் பதவில விலகும் போது போராடிய பொதுமக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்டார். இதற்கு பதிலடி கொடுத்த பொதுமக்கள், மகிந்த ராஜபக்சேவின் வீடுகள், பெற்றோர் கல்லறைகள், 100க்கும் மேற்பட்ட அவரது ஆதரவு அரசியல்வாதிகளின் வீடுகள், வர்த்தக நிறுவனங்களை தீக்கிரையாக்கினர்.

தப்பி ஓடிய ராஜபக்சே

தப்பி ஓடிய ராஜபக்சே

இதையடுத்து தலைநகர் கொழும்பில் இருந்து மகிந்த ராஜபக்சே தப்பி ஓடினார். உயிருக்கு பயந்து அஞ்சி ஓடிய மகிந்த ராஜபக்சே, திருகோணமலையில் சிங்கள கடற்படையிடம் தஞ்சமடைந்திருந்தார். அதேநேரத்தில் திருகோணமலையில் இருந்து கப்பல் மூலமாக மாலத்தீவுகளில் தஞ்சமடைந்தார் மகிந்த ராஜபக்சே என்கிறது ஒருதரப்பு செய்திகள். மாலத்தீவில் இந்திய தொழிலதிபருக்கு சொந்தமான பங்களாவில்தான் மகிந்த ராஜபக்சே பதுங்கி இருந்தார் என்கின்றன அத்தகவல்கள்.

இந்தியாவுக்கு அழைப்பு

இந்தியாவுக்கு அழைப்பு

மேலும் மகிந்த ராஜபக்சேவுக்கு இந்தியா ஒருபோதும் அடைக்கலம் தரக் கூடாது என்கிற கோரிக்கையும் தமிழகத்தில் வலுவாக எழுப்பப்பட்டது. இந்நிலையில் பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி இன்று ஒரு ட்விட்டர் பதிவிட்டுள்ளார். அதில், என்னுடைய நண்பரும் இலங்கை தலைவருமான மகிந்த ராஜபக்சேவை இந்தியாவுக்கு அழைக்க முடிவு செய்துள்ளேன். டெல்லியில் பொது நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றவும் இந்து மற்றும் பவுத்த கோவில்களை பார்வையிடவும் ஏற்பாடு செய்துள்ளேன். பருவமழைக்கு முன்னதாக மகிந்த ராஜபக்சே இந்தியா வருகை தருவார் என எதிர்பார்க்கிறேன் என சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+